Friday, September 30, 2016

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரைப் போல

அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர்.ஆனாலும் அவர் பணியாற்றியது கம்சனின் அரண்மனையில்.ஆனாலும், அவரது சிந்தனை எப்போதும் கிருஷ்ணனைப் பற்றியே!

கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் ஒரு திட்டம் தீட்டினான்.புதிதாக தனுர் யாகம் ஒன்றை நடத்தி, அதற்கு கிருஷ்ணரையும், ப்லராமனையும் அழைத்து வரச் செய்து, ஒரு மல்யுத்தத்தில் அவர்களைக் கொல்ல திர்மானிக்கிறான்.எனவே, வசுதேவரின் சகோதரர் ஆ ன அக்ரூரரை அனுப்பி இருவரையும் அழைத்து வரச் சொன்னான்.

அக்ருரருக்கு ஒரே சந்தோசம்.கண்ணனை நேரில் பார்க்கலாம் என.அந்த சந்தோஷத்தில், கம்சன், கண்ணனைக் கொல்லவே அழைத்து வரச் சொல்கிறான் என்பதை மறந்து விட்டார்.

மனதில் கிருஷ்ணனை சந்திக்கப் போகும் நிகழ்ச்சியை அசை போட்டவாறே யமுனை நதிக்கரையில் இருந்த பிருந்தாவனத்திற்கு செல்கிறார்.அங்கு கண்ணனைக் கண்டு பேசினார்.அவரை அழைத்துச் செல்ல வந்ததாகக் கூறினார்.  கண்ணனும், கம்சனின் ராஜ்ஜியத்திற்குள் செல்லும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆகவே மறுப்பு ஏதும் சொல்லாது பலராமனுடன் கிருஷ்ணனும் கிளம்பினார்
.

இப்போதும் நந்தகௌன் என்னும் இடத்திலிருந்து கண்ணனை அக்ரூரர் தேரில் அழைத்துச் சென்ற வழித்தடம் உள்ளது

அப்படிப்பட்ட அக்ரூரரைப் போல கண்ணனை அழைத்துவரப் போனவளா நான்? என்று கேட்டாள் அப்பெண்

பெண்பிள்ளை ரகசியம்

ஆழ்வார்களில் நம்மாழ்வார் மீது மட்டும் அன்பு பூண்ட மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊரான திருக்கோளூருக்கு ராமானுஜர் வந்த வேளையில், ஒரு பெண்மணி மோர் விற்க ஊரை விட்டு வெளியே செல்லக்கண்டார். அவர் அவளிடம் தேடி போகும் ஊர் என இவ்வூரைபற்றி பிறர் சொல்ல, நீயோ வெளியே செல்கிறாயே என்றார். அவளும் சலிக்காமல், முயல் புளுக்கையை எங்கே விட்டால் என்ன? அதில் என்ன மாற்றம் இருக்கும்? என்றாள். ஆச்சரியமுற்ற யதிராஜரிடம் பெரியார் செய்த 81செயல்களை சுட்டி காட்டி, அப்படி நான் இருந்தேனா என்கிறாள். இதில் 79ஆவதாக சொல்லப்படும் எம்பார் என்பவர் ராமானுஜரின் தம்பி முறை. சிவபக்தி செய்தவர். இதில் ராமானுஜரை பற்றியுமே கூட வருகிறது. அப்பெண்மணி கூறியது திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது. வரலாற்று குறிப்பு தரும் அவை ....

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31.குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.இருகையும் விட்டேனோ திரெளபதியைப் போலே!
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71.சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!
73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இனி ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்