கண்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில் விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும் செல்வான். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணனிடம் வந்து, ""கண்ணா, எங்களுக்குப் பசிக்கிறது'' என்றனர்.
கண்ணன் அவர்களைப் பார்த்து, ""இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று என் பெயரைச் சொல்லி உணவு பெற்று வாருங்கள்'' என்றான்.
சிறுவர்கள் அந்தணர்களிடம் சென்று கண்ணன் பெயரைச் சொல்லி உணவு கேட்டனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து உணவு கொடுக்கவில்லை.
கண்ணனிடம் சென்று இதைக் கூறியபோது, ""ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லி உணவு கேளுங்கள்'' என்று கூறி அனுப்பினான்.
முனிபத்தினிகளிடம் சென்று கேட்டபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்து கண்ணன் மற்றும் அங்கிருந்தோர் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தனர்.
அவர்களை மீண்டும் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கண்ணன் கூறியபோது கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் கணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர்.
ஒரு பெண்மணி மட்டும் கண்ணனைப் பிரிய மனமின்றி கண்ணனை நினைத்து உயிர்விட்டாள். "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல்தானும் உயிரை விடவில்லையே' என்று மனமுருகிக் கூறினாள் அந்தப் பெண்பிள்ளை.

No comments:
Post a Comment