மிகக் கொடிய பாவங்களுடன் உருவெடுத்தவன் மகாபாபியான க்ஷத்ரபந்து.அவன் தனது கொடுமையான செயல்களால் தாய்,தந்தை,மக்கள், மித்திரர் அனைவராலும் கைவிடப்பட்டு கானகத்தில் அலைந்துத் திரிந்து கொண்டிருந்தான்
ஒருநாள் முனிவர் ஒருவர் கடும் வெயிலில் வழி மறந்து காட்டினுள் வந்து விட்டார்.அவரை கஷத்ரபந்து பார்த்து விட்டான்
அவர் பரிதாப நிலை கண்டு , அவர் மீது இரக்கம் மிகுந்ததால் க்ஷத்ரபந்து அவரிடம் "முனிவரே, நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள்.களைப்புடன் வேறு இருக்கறீர்கள்.அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் அருந்துங்கள்.நீங்கள் போக வேண்டிய சரியான வழியும் இதுதான்" என அவருக்கு வழியைக்காட்டிவிட்டு ,ஒரு குளத்தையும் காட்டினான்
முனிவர் குளத்தருகில் போனபோது, கால்கள் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார்.அவரை, குளத்தினுள் குதித்து க்ஷேத்ரபந்து காப்பாற்றியதுடன், அவருக்குக் கிழங்குகளை உண்ணக் குடுத்து..கைகால்களையும் பிடித்துவிட்டான்
அம்முனிவர் அவனை நோக்கி, "நீ யாரப்பா...உன் வரலாறு என்ன" என வினவினார்
அதற்கு க்ஷத்ரபந்து, :"ஐயா..நான் சூரிய வம்சத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவன்" என்று கூரிவிட்டு, தான் செய்த கொடுமையான செயல்களையும் கூறினான்
முனிவரும் , அவனை கொடுமையான செயல்களை விட்டொழிக்கச் சொன்னார்
"ஐயா...காமம், குரோதம்,லோபம், மோகம் என்ற தீய குணங்களுக்கு ஆளான நான் எப்படி அவற்றை விட்டொழிப்பேன்" என்றான் க்ஷத்ரபந்து
அவனை எப்படியும் திருத்திட வேண்டும் என முனிவர், "இடைவிடாது கோவிந்த நாமத்தைச் சொல்லிக்கோண்டிரு" என்றார்..
அவனும், கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க ஆரம்பித்தான்.
பின், ஒருநாள் இயற்கை எய்தி, மீண்டும் நல்குடியில் பிறந்தான்
இதையே அப்பெண் "க்ஷத்ரபந்து போல மூன்றெழுத்தைச் சொன்னேனோ'என் கிறாள்.

No comments:
Post a Comment