அரையர் சேவை என்ற நாட்டிய நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசையமைத்து, அபினயம் பிடித்துக் காட்டுவர்.ஆளவந்தார் எனும் வைஷ்ணவத் துறவி இந்நிகழ்ச்சிகளைக் கண்டு பெருமாளின் பெருமைகளில் மூழ்கித் திளைப்பார்
தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்த்வர் இவரே ஆவார்
ஒருநாள் நடந்த அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் ஆளவந்தார்
திருவாய்மொழியில் வரும் "ஆனந்தபுரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை இவரைப் பார்த்து மூன்று முறை பாடி நடித்தனர்
அதைக் கேட்ட ஆளவந்தார், அரங்கன், தன்னையே யே அரையர் வாய்மொழி மூலம் அனந்தபுரம் செல்ல அறிவுறுத்துவதாக உணர்ந்தார்.
உடனே அனந்தபுரம், என்ற திருவனந்தபுரத்திற்கு சென்று பத்மனாப சுவாமியை தரிசித்து, பெருமான் சேவையில் ஈடுபட்டார்
இந்நிகழ்ச்சியையே "அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே" என்றாள் திருக்கோளூர்ப் பெண்
No comments:
Post a Comment