Wednesday, November 9, 2016

75- யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே

ராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் திருமலை நம்பியும் ஒருவர்.இவர் ராமானுஜரின் தாய் மாமன் ஆவார்

ராமானுஜர், திருமலைக்கு முதன் முறையாக வந்த போது, ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி..எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டினர்.தவிர, ஆனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர்

ஆனால், ராமானுஜரோ, அந்த மலை ஆதிஷேசன் என்றும்..அதில் தன் கால்கள் படலாமா" ? என்றும் யோசித்தார்.

ஆனால், சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்

அச்சமயம் திருமலை நம்பி, இறைவனின் பிரசாதங்களுடன் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தார்.வழியில் ராமானுஜரைப் பார்த்தார்.

ராமானுஜர், "என்னப் போன்ற சிறியோன் ஒருவனுக்காக தாங்கள் ஏன் இறங்கி வர வேண்டும்? வேறு யாரேனும் சிறியர்களை அனுப்பியிருக்கலாமே!" என்றார்

அதற்கு நம்பி, "தேடிப் பார்த்ததில் என்னை விட சிறியோன் யாரும் தென்படவில்லை" என்றார்

ஒவ்வொரு வைஷ்ணவரும் வேறு ஒரு வைஷ்ணவரைக் கண்டால் அவரைவிட தாழ்ந்தவராக எண்ண வேண்டும்.ஆழ்வாரும் அப்படி எண்னிக் கொண்டவர் தான்

அந்த திருமலை நம்பி தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டது போல நான் கூறினேனா...இல்லையே...நான் ஏன் இங்கு இருக்க வேண்டும் என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

1 comment:

  1. தேடிப் பார்த்ததில் என்னை விட சிறியோன் யாரும் தென்படவில்லை" என்றார்...நாராயணாய...

    ReplyDelete