உள்ளே புகுமுன் -
ஆண்டவன் அருளியது பகவத் கீதை
ஸ்ரீராமானுஜருக்கு ஒருபெண் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்லை ரகசியம்
108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலம்.இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் "வைத்த மாநிதிப் பெருமாள்"
நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளுர் திவ்ய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார்
ஊருக்கு சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார்.
.
அந்த ஊர் புகும் ஊர் என்றும், அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்று பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் ஏன் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள்? என்று ராமானுஜருக்கு ஆச்சரியம்.அப்பெண்ணிடம் . அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கானக் காரணத்தைக் கேட்டார்
அதற்கு அந்தப் பெண், "சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன" என்றாள் விரக்தியுடன்
அதைக் கேட்ட ராமானுஜர், ‘‘அம்மா, உனக்குக் குறைதான் என்ன?’’ என்று விசாரித்தார்.
‘‘ஒன்றா, இரண்டா….?’’ என்று தொடர்ந்து ஏக்கத்துடன் கேட்ட அவள், 81 வைணவப் பெரியார்கள் எத்தனையோ பேர் எத்தனையோ அருஞ்செயல்களைப் புரிந்திருக்கிறார்கள். அதுபோன்ற அவர்களுடைய வைணவ நலன்கள் ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே,’’ என்று வருந்திக் கூறினாள்.
அந்தப் பெண்மணி, வைணவ நலன்கள் என மொத்தம் எண்பத்தோரு வைணவப் பெரியார்களின் செயல்களை பெண்பிள்ளை பட்டியலிட்டாள். இப்படி அவள் கூறிய வாசகங்களின் மறைபொருளைக் கொண்ட நூல், ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!’ இது வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது.
அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் ராமானுஜர்.சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார்.பின், அவளை சமாதானப்படுத்தி அவள் அவளுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவள் சமைத்த உணவை உண்டார்
அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது.அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது
மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது..

No comments:
Post a Comment