Monday, November 14, 2016

44- பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போல

கிருஷ்ணரும், பலராமரும்..கம்சனைக் காண மதுரா வருவதற்கு முன் , ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான்.பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர்

பின் அவர்கள்..மணமுள்ள மலர்களை அணிய விரும்புகிறார்கள்.அதனால், ஒரு பூ வியாபாரியிடம் செல்கின்றனர்.அவன் இவர்கள் இருவரைப் பார்த்ததும் யாரென அறிந்து கொண்டான்.தன்னிடமிருந்த மணம் மிகுந்த மலர்களை அவர்களுக்கு கொடுக்கிறான் (அவனது பெயர் சுதாமன் என் கிறது பாகவதம்)

மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்

ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும்  எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரண்மாக அமைந்தது எனலாம்

அப்படிப்பட்ட மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ..(இல்லையே..ஆதலால் நான் இவ்வூரில் இருந்தால் என்ன..வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Sunday, November 13, 2016

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

உள்ளே புகுமுன் -

ஆண்டவன் அருளியது பகவத் கீதை

 ஸ்ரீராமானுஜருக்கு ஒருபெண் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்லை ரகசியம்
  
108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலம்.இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் "வைத்த மாநிதிப் பெருமாள்"

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளுர் திவ்ய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார் 

ஊருக்கு சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார்.
.
அந்த ஊர் புகும் ஊர் என்றும், அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்று பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் ஏன் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள்? என்று ராமானுஜருக்கு ஆச்சரியம்.அப்பெண்ணிடம் . அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கானக் காரணத்தைக் கேட்டார் 

அதற்கு அந்தப் பெண், "சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன" என்றாள் விரக்தியுடன் 

 அதைக் கேட்ட ராமானுஜர், ‘‘அம்மா, உனக்குக் குறைதான் என்ன?’’ என்று விசாரித்தார். 

‘‘ஒன்றா, இரண்டா….?’’ என்று தொடர்ந்து ஏக்கத்துடன் கேட்ட அவள், 81 வைணவப் பெரியார்கள் எத்தனையோ பேர் எத்தனையோ அருஞ்செயல்களைப் புரிந்திருக்கிறார்கள். அதுபோன்ற அவர்களுடைய வைணவ நலன்கள்  ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே,’’ என்று வருந்திக் கூறினாள். 

அந்தப் பெண்மணி, வைணவ நலன்கள் என  மொத்தம் எண்பத்தோரு வைணவப் பெரியார்களின் செயல்களை  பெண்பிள்ளை பட்டியலிட்டாள். இப்படி அவள் கூறிய வாசகங்களின் மறைபொருளைக் கொண்ட  நூல், ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!’ இது வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது. 


அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் ராமானுஜர்.சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார்.பின், அவளை சமாதானப்படுத்தி அவள் அவளுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவள் சமைத்த உணவை உண்டார்

அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது.அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது

மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது.. 

81 - துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

திருவயினந்தபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார்

அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்

ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும்துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்..

அதற்கு   பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன்.ராமானுஜரைப் பின்பற்றுபவன்.நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம்.ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள்.இவை இரண்டும் ஒன்று சேராது.ஆகவேதான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்

(பகவர், ஒரு அந்தணரோ அல்லது சந்நியாசியோ அல்ல என்பதை நினைவில் கொள்க)

நான் அந்த பகவரைப்போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ (சென்றேனோ) இல்லையே..ஆகவே நான் இங்கு இருந்தால் என்ன வேரு ஊருக்குச் சென்றால் என்ன என் கிராள் திருக்கோளூர்ப் பெண்

Saturday, November 12, 2016

80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

எம்பெருமான் பல்லக்ககில் வீதி உலா வருகிறார்.அப்போது அதற்கு முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.

அப்படி சவுக்கை அடிக்கும் போது..ஒருமுறை அது பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழுகிறது.

அப்படி தெரியாமல் அடித்து விட்டதால் அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, "பட்டரோ..அதனால் பரவாயில்லை.எம்பெருமான் கைங்கரியத்தின் போது  விழுந்த அடி.மற்றொரு தோளிலும் விழவில்லையே என வருந்தினாராம்,

இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள்...

எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம்.அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்

எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கிறார்கள்

விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்

இதை அறிந்தவர்.."அடடா..எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்சசமஸ்காரம் செய்ய வேண்டினார்.

அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி..இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்

அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா இல்லையே என திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்  

Friday, November 11, 2016

79- வாயில் கைவிட்டேனோ எம்பாரைப் போலே

முதலில் கோவிந்த பட்டராய் இருந்த ஆச்சார்யார் எம்பார், ராமானுஜரின் உறவினர்

இவர் ஒருமுறை காசிக்குச் சென்று கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார் அவர்

பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள்ளர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர் எம்பார் பற்றி சொல்ல..அவரை திருமலைநம்பி, வைணவத்தில் ஈடுபட வைத்தார்.

ஒருசமயம், எம்பார்..தன் கையை , வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பாம்பின் வாயில் வைத்திருந்தார்.

இதைக்கண்ட ராமானுஜர், "பாம்பின் வாய்க்குள் கைவைக்கலாமா?"என வினவினார்.

உடனே எம்பார் சொன்னார்.."அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது.நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது.அதை எடுத்து விட்டேன்.அது ஓடிவிட்டது.'என்றார்.

மேலும் சொல்கையில், "வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். அதனால் பாம்பினிடம் இரக்கப்பட்டு, மனித நேயத்தால் அதன் வாயினுள் கையைவிட்டேன்" என்றார்

அந்த எம்பாரைப் போல கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ (இல்லையே! ஆகவே நான் இந்த ஊரில் இருந்தால் என்ன..வெளியே போனால் என்ன) என்கி றாள் திருக்கோளூர்ப் பெண்

78 - வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

கூரத்தாழ்வாரின் மகன் பராசர பட்டர்.அவர் குழ்ந்தையாக இருந்த போது, காவிரி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்

அப்போது, சர்வக்ஞ பட்டர் என்பவர் பல்லக்கில் ஏறி தனது சிஷ்யர்கள் படைசூழ வந்து கொண்டிருந்தார்.சிஷ்யர்கள் அவர் புகழைப் பாடி வந்தார்கள்

ராமானுஜர், கூரத்தாழ்வார்,முதலியாண்டான்,எம்பாரும் வசிக்கும் ஊரில் இப்படி ஒருவர் வருவதை பராசர பட்டர் விரும்பவில்லை.

தன் கையினால் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்ட அவர், அந்த பல்லக்கை தடுத்து நிறுத்தி சர்வக்ஞரிடம், நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு என சொல்ல முடியுமா? என்றார்.

"மண் கோடிக்கணக்கில் இருக்கும்...மண்ணை எண்ண முடியுமா" என்ற சர்வக்ஞர் கேலியாக சிரித்தார்

உடனே பராசரர்.."என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்"சொல் பார்ப்போம்" என்றார்

"ஒரு கைப்பிடி மண்" என்றார் பட்டர்

சிறுவனின் திறமையைக் கண்டு தலைவணங்கிய சர்வக்ஞர். அந்தக் குழ்ந்தை யார் என வினவ..கூரத்தாழ்வாரின் மகன் என அறிந்தார்.

குழ்ந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார்

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழ்ந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.கெட்ட கண்கள் அவர் மீது பட்டுவிடப் போகிறது" என்றாள்

பின்னாளில்..பராசர பட்டர் வளர்ந்ததும், ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர் , பராசரரை அழைத்து,திருநாராயணபுரம் சென்று,அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறு கூறினார்

பட்டரும் அப்படியே திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார்
அவருக்கு நன் ஜீயர் எனப் பெயரிட்டார்.அவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க வைத்தார்

நான் என் வாதத் திறமையால் பட்டரை வென்றேனோ என்பதையே "வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே" (இல்லையே..அதனால் நான் இங்கிருந்தால் என்ன ஆல்லது இவ்வூரை விட்டு வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, November 10, 2016

77 - நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

நீரோருகம் என்றால் தாமரை மலராகும்

காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான் .அவன் தீவிர ஸ்ரீநாரயணரின் பக்தன்.தினசரி கோயில் குளத்திலிருந்து தாமரை மலரைப் பறித்து வந்து எம்பெருமானை அலங்கரித்து வந்தான்

அவன் நல்ல நீச்சல் வீரன்.ஆகவே, அவனுக்கு அந்த அகந்தை இருந்தது.கங்கை ந்தியின் ஒரு கரையிலிருந்து அடுத்தக் கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிப்பான்.

ஒருசமயம், அவன் அவன் அப்படி நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான்.கங்கை அவனை அடித்துச் சென்றது.அவனது நீச்சல் திறமை எடுபடவில்லை.அவன் கொஞ்சம் கொஞ்சமாக முழுகத் தொடங்கினான்.

தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை அறிந்து வைத்திருந்த அவன், கஜேந்திரனின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து காத்த நாராயணனின் நினைவு வர.."எம்பெருமானே..நான் உனக்கு சரணாகதி" என ஸ்ரீநாராயணனிடம் சரணாகதி அடைந்தான்,

ஆந்த சமயம் காற்று பலமாக விச..நதியில் ஒரு பெரிய அலை எழுந்தது.அது , அவனை கரையில் சேர்த்தது.

இறைவனின் அருள்தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன் அகந்தையை விட்டொழித்தான்.பின், எம்பெருமானுக்கு பணிவிடையே தன் பணி என மலர்களால் இறைவனை தினமும் அலங்காரம் செய்து  வாழ்ந்து வந்தான்

அப்படிப்பட்ட காசிசிங்கனைப் போல தினமும் தாமரை மலரை எம்பெருமானுக்கு இட்டேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன , வெளியேறினால் என்ன என திருக்கோளூர் பெண் கூறினாள் 

Wednesday, November 9, 2016

76 - நீரில் குதித்தேனோ கணப்புரத்தாளைப் போலே

ஒருசமயம், ஸ்ரீநம்பிள்ளை, ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார்.

இரவு நேரம்..இருள்..நதியில் வெள்ளம் வரும் அபாயம்..

பாதை வழியில், படகுக் காரன், படகில் இருப்பவர்களிடம், "படகின் பாரம் அதிகமாய் உள்ளது.யாரேனும் நீந்தத் தெரிந்தவர் படகில் இருந்து  நீரில் குதித்தால்..மற்றவர்களைக் காப்பாற்ற இயலும்" என்றான்

நீர் மட்டம் ஏறிக்கொண்டே இருந்தது.

அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகுக் காரரிடம் "எங்கள் ஆச்சாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள்.நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்' என வாழ்த்திவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டாள்

படகும் சற்று பாரம் குறைந்ததால், முழுகிவிடாது கரை சேர்ந்தது.

ஆனாலும், நம்பிள்ளைக்கு தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்

அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள் குரல் கேட்டது"சுவாமி! நான் பத்திரமாக இருக்கிறேன்.சிறு தீவு ஒன்றிற்கு வந்து விட்டேன்.தாங்கள் கவலைப்பட வேண்டாம்"

நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார்.பின், படகுக்காரன் , படகை எடுத்துச் சென்று அவரை காப்பாற்றி அழைத்து வந்தான்.

வந்தவர், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "சுவாமி! தாங்கள்தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள்
"உனது நம்பிக்கை அதுவானால் அப்படியே இருக்கட்டும்" என்றார் நம்பிள்ளை

ஆச்சாரியாரின் உயிரைக் காப்பாற்ற நீரில் குதித்த கணப்புரத்தாளைப் போல நான் செய்தேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன..வெளியேறினால் என்ன என்று கேட்டாள் திருக்கோளூர்ப் பெண் 

75- யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே

ராமானுஜரின் ஐந்து ஆச்சார்யர்களில் திருமலை நம்பியும் ஒருவர்.இவர் ராமானுஜரின் தாய் மாமன் ஆவார்

ராமானுஜர், திருமலைக்கு முதன் முறையாக வந்த போது, ராமானுஜரின் சீடர்கள் அவரை மலை மீது ஏறி..எம்பெருமானுக்கு மங்களாசாசனம் செய்ய வேண்டினர்.தவிர, ஆனந்தாழ்வாரின் நந்தவனத்தையும் பார்க்க வேண்டினர்

ஆனால், ராமானுஜரோ, அந்த மலை ஆதிஷேசன் என்றும்..அதில் தன் கால்கள் படலாமா" ? என்றும் யோசித்தார்.

ஆனால், சீடர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் மலை மீது ஏற ஒப்புக் கொண்டு ஏறினார்

அச்சமயம் திருமலை நம்பி, இறைவனின் பிரசாதங்களுடன் கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தார்.வழியில் ராமானுஜரைப் பார்த்தார்.

ராமானுஜர், "என்னப் போன்ற சிறியோன் ஒருவனுக்காக தாங்கள் ஏன் இறங்கி வர வேண்டும்? வேறு யாரேனும் சிறியர்களை அனுப்பியிருக்கலாமே!" என்றார்

அதற்கு நம்பி, "தேடிப் பார்த்ததில் என்னை விட சிறியோன் யாரும் தென்படவில்லை" என்றார்

ஒவ்வொரு வைஷ்ணவரும் வேறு ஒரு வைஷ்ணவரைக் கண்டால் அவரைவிட தாழ்ந்தவராக எண்ண வேண்டும்.ஆழ்வாரும் அப்படி எண்னிக் கொண்டவர் தான்

அந்த திருமலை நம்பி தன்னை சிறியோன் என்றுக் கூறிக் கொண்டது போல நான் கூறினேனா...இல்லையே...நான் ஏன் இங்கு இருக்க வேண்டும் என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

74 - என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!

உபரிசரன் தர்மத்தின் படி நாட்டை ஆள்பவன்.அதனால் தர்மதேவதை மகிழ்ந்து அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்கும் வசுஆக அவனை ஆக்கியது

ஒருநாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் யாகத்தில் பலியிடும் விலங்குகள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்தது.

வேதத்தின்படி, எந்த ஒரு விலங்கினையும் கொல்லக் கூடாது.ஆனால், யாகம் நடைபெறுகையில் ஆடு போன்ற விலங்கினை தீயில் இடுவது வழக்கமானது.

அனால், விலங்குகளை கொல்லக்கூடாது என்பதால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள்

இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் உயிரினமான் ஆட்டையே இட வேண்டும் என்றனர்

இருவர்களுக்குள் தகாராறு ஏற்ப்ட அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி அவர் முடிவைச் சொல்லச் சொன்னார்கள்

உபரிசரனைப் பொறுத்தவரை அனைத்து உயிர்களும் தன்னைப் போல என எண்ணுபவன்.ஆகவே, அவன் ரிஷிகள் சொன்னதும், செய்வதுமே சரி என்றான்

இதனால் கோபமுற்ற தேவர்கள் அவனை பாதாள உலகம் செல்ல சபித்தனர்.

ஆனால்..அதனால் அவன் கலக்கமடையவில்லை.அது, அவனுள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை

அப்படிப்பட்ட உபரிசரன் போல பிற உயிர்களும் என்னைப் போல என்றேனா என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்


73- உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!

பிள்ளை திருநறையூர் அரையர் வைஷ்ணவ ஆசார்யார் ஆவார்

ஒருசமயம் அவர் தன் குடும்பத்துடன் தோட்டியம் என்ற ஊருக்கு வேதநாராயணன் பெருமாள் கோயிலுக்குச் சென்றார்

அப்போது சில சமூக விரோதிகள் கோயிலுக்கு தீ வைத்தனர்

தீ வேகமாகப் பரவ ஆரம்பித்தது.மக்கள் சிதறி ஓடினர்.

எம்பெருமானின் உருவத்தைத் தீ அணுகுவதைக் கண்டார் அரையர்

அதைப் பொறுக்கமுடியாமல் எம்பெருமானின் உருவச்சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.அதைப் பார்த்த அவர் மனைவி, குழ்ந்தைகளும் சேர்ந்து எம்பெருமானைக் கட்டிப்படித்தனர்.

தீயின் உக்கிரம் பொறுக்காத குழ்ந்தைகள் கதறினர்..அப்போது அரையர், "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.நாம் நேரே வைகுண்டம் சென்று விடலாம்" என்றார்

அப்படிப்பட்ட திருநறையூரார் போல தன் உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா என் கிறாள் திருனறையூர்ப் பெண்.

70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

திருக்கோட்டியூர் நம்பி. திருமலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரை காண ஸ்ரீரங்கம் வந்தார்.திருமலையாண்டான் ஆளவந்தாரின் சீடர்

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலையாண்டானையும் வணங்கினார்.நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன்.திருவாய்மொழியை ஆளவ்ந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர்.நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்

ராமானுஜரும் ஒப்புக் கொண்டார்.திருமலையாண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறினார்.இது ஆண்டானுக்கு எரிச்ச்ல் மூட்டியது

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

  "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
    அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
    அறியாமைக் குறள் ஆய்,நிலம் மாவலி மூவடி என்று
   அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்

இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள்,பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல.தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்

இதனால் கடுப்பான ஆண்டான், பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டார்

இதையெல்லாம் அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ' எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார்.அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும் 'என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார்

திரும்ப பாடம் ஆரம்பமானது.ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது

ஆண்டான் யோசித்தார்,ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார்.பின் கேட்டார்"நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை.அவர் பேசிக் கேட்டதும் இல்லை.அப்படியிருக்க இவ்வளவு சரியான ப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"

அதற்கு ராமானுஜர் நான் ஒரு ஏகலைவன் என்றார்

அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே...என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்





Saturday, November 5, 2016

72- உயிராயபெற்றேனோ ஊமையைப்போலே

ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத ஒருவர் இருந்தார்.தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கு அவர் ஆற்றி வந்தார்

ஒருநாள், ராமானுஜர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார்

அறையின் கதவை தாளிட்டப் பின்னர்,  பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதித்தார்.பின், அந்தப் பாதுகைகளை அவரிடமே கொடுத்துவிட்டார்

இந்நிகழ்வுகளை கூரத்தாழ்வார், ஒரு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தார்

"நானும் ஏதும் அறியாதவனாய் , வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால் எனக்கு ராமானுஜரின் ஆசி இதுபோல கிடைத்திருக்குமே" என எண்ணினார்

அந்த, வாய் பேச முடியாதவர்,  ராமானுஜரையே தன் உயிராய் எண்ணி  பணிபுரிந்தவாறே தன் வாழ்நாளைக் கழித்தார்

(அவரைப்போல )உயிராயப் பெற்றேனோ ஊமையைப் போலே . இல்லையே என் கிறாள் ராமானுஜரிடமே  திருக்கோளூர்ப் பெண்

71 -சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!

திருவாய்மொழி விளக்கம் ராமானுஜர் ஐந்து ஆசிரியர்களிடத்தில் அரிய பொருள் விளக்கங்களைக் கேட்டறிந்தவர். எனினும், தன்னுடைய இயல்பான நுண்ணறிவால் அவற்றைச் சிந்தித்துச் செயல்பட்டவர். எட்டெழுத்து மந்திரம் முதலானவற்றைத் திருக்கோட்டியூர் நம்பியிடம் கேட்டுத் தெளியுமாறு ராமானுஜருக்கு பெரிய நம்பிகள் அறிவுறுத்தினார். திருவரங்கத்திலிருந்த ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளைக் காண, பதினெட்டு முறை சென்றார்.

திருக்கோட்டியூர் நம்பிகள் உபதேசித்த திருவெட்டெழுத்து மந்திரத்தை அவ்வூர் கோபுரத்தின் மீது நின்று ஆர்வமுள்ளோர் அனைவருக்கும் உபதேசித்தார், ராமானுஜர். குருவின் கட்டளையை மீறி அவ்வாறு உபதேசித்ததால் அவருக்கு நரகம் கிட்டும் என்றார் திருக்கோட்டியூர் நம்பி. திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது என்று கூறித் தன் ஆசானையும் பிரமிக்கச் செய்தார் ராமானுஜர். அத்துடன் திருக்கோட்டியூரார், ராமானுஜரை, திருமலையாண்டான் என்ற ஆசானிடம் நாலாயிரம் திவ்ய ப்ரபந்தங்களுக்கும் விளக்கம் கேட்டு அறியப் பணித்தார். 

அவ்வாறே ராமானுஜர் திருமலையாண்டானிடம் பாடம் கேட்டார். சில பாசுரங்களுக்கு, திருமலை ஆண்டான் கூறிய விளக்கங்களுக்கு மேலும் தெளிவான பொருள்கள் கூறி அவரை வியக்கச் செய்தார். ஏனெனில், ராமானுஜர் கூறிய சிறப்பு விளக்கங்கள் யாவும் ஆளவந்தார் கூறிய விளக்கங்கள் ஆகும். ஆளவந்தாரிடம் நேரில் பாடம் கேட்காத ராமானுஜர் அவர் கூறிய அதே சிறப்பு விளக்கங்களை விவரித்தது ஆண்டானுக்கு வியப்பாக இருந்தது! சூளுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே -‘சூள்’ என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து உறவு கொண்டனர். தான் அவ்வாறு உறுதியுடன் உபதேசிக்கவோ, உபதேசம் பெறவோ வாய்ப்புப் பெறவில்லையே என்று திருக்கோளூர்ப்பெண்பிள்ளை ஏங்குகிறார். - 

Friday, November 4, 2016

69- கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே

மாறனேரி  மகான் ஆளவந்தாரின் சீடராக விளங்கியவர்.பெரிய நம்பிக்கு நெருக்கமானவர்

இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார்.ஒருநாள் அவர் மண்ணைக் கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தார்.அதைப் பார்த்த பெரிய நம்பி அதைப் பற்றிக் கேட்டார்."மண்ணால் ஆன உடலுக்கு மண்ணை இடுகிறேன்' என சொன்னவர், அத்துடன் நிலலது கண்ணனும் மண்ணை உண்டதைச் சொன்னார்

ஆளவந்தார் ராஜபிளவைக் கட்டியினால் அவதிப்பட்டார்.மாறனேறி நபிகள், அதனைத் தான் வாங்கிக் கொண்டு ஆளவந்தாரைக் குணமடையச் செய்தார்.தமது நோயை வாங்கிக் கொண்ட நம்பிக்கு, பெரிய நம்பி பணிவிடைகள் செய்தார்.இப்படி, அவர்கள் சாதி பேதமின்றிப் பழகினர்

மாறனேறி நம்பி மறைந்து விட வேதியரான பெரிய நம்பி, அவருக்கு இறுதிக் கடன் களைச் செய்தார்.அதை விரும்பாத மற்ற வேதியர்கள்பெரிய நம்பியை விலக்கி வைத்தனர்.இது கண்ட அவரது மகள் கோபமுற்று திருவரங்கப் பெருமானிடம் நியாயம் கேட்கச் சென்றாள்.அப்போது, தேரில் உலா வந்து கொண்டிருந்த திருவரங்கனை நோக்கி' "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இருதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள் அந்துழாய் (பெரிய நம்பியின் மகள்)

தேர் அப்படியே நின்றது.அப்போது ராமானுஜர் அங்கு வந்தார்.பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்டார்
பெரிய நம்பிகள்"பறவை யினத்தைச் சேர்ந்த ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்ததையும்,விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிக் கடன் செய்ததையும் கூறி மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா" என்றார்

ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அதனால்தான் மாறனேரி நம்பிக்கு இறுதிக் கடன் செய்ததாகப் பெரிய நம்பி சான்றுகள் காட்டிப் பேசினார். மேற்கண்ட சான்றுகளை எடுத்துக்காட்டிப் பேசிய பெரிய நம்பிகள் முத்தாய்ப்பு வைத்தாற்போல் ஒரு கருத்தைத் தெரிவித்தார். 
‘‘ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார். அதாவது, கடலோசை ஓயாமல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது! அதனை எவர் பொருட்படுத்துகின்றனர்? முற்போக்குச் சிந்தனைகளையும் சீர்திருத்தக் கருத்துக்களையும் அவ்வப்போது தோன்றும் மகான்கள் சான்றோர்கள் கூறிக்கொண்டே இருக்கின்றனர். 

அவை வீணில் ஒலிக்கும் கடலோசையைப் போன்று அலட்சியம் செய்யப்படுகின்றனவே? என்று பெரிய நம்பி எடுத்துப் பேசினார்

. இதையே திருக்கோளூர்ப் பெண்பிள்ளை கடலோசை என்றேனோ பெரிய நம்பியைப் போலே?  என்றாள்

68 - கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே


"கள்வன்: என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு இருக்கும் பல பெயர்களில் ஒன்றாகும்.கள்வன்..எனில்..திருடுவது, ஏமாற்றுவது என்று பொருள்.எம்பெருமானின் பக்தர்களின் நலனுக்காக இதையும் செய்வார்.அவரது திவ்யதேசங்களில் ஒன்றில் கள்வன் என்ற பெயரிலேயே காணப்படுகிறார்

மகாபலி யாகசாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி..உலகை அளக்கிறார் எம்பெருமான்.அந்நேரம் அசுரர்களின் லோககுரு நாராயணனை கள்வன் என் கிறார்

நம்மாழ்வாரையும் லோககுரு எனலாம்.பல பாசுரங்களில் பெருமானை அவர் கள்வன் என் கிறார்.திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என் கிறார் (வாமன அவதாரத்தை)

தவிர்த்து, சிவபெருமான் ஒரு சமயம் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார்.அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான்.அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை..அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என் கிறார்


(தவிர்த்து திருவாய்மொழியில் ஒரு பாடல்-

கள்வா! எம்மையும் ஏழுலகும் நின் 
உள்ளே தோற்றிய இறைவ!’ என்று
வெள்ளேறன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்தி கழல் பணிந்து ஏத்துவரே.
பொழிப்புரை
வெண்மை நிறம் பொருந்திய இடபத்தை வாகனமாகவுடைய சிவனும் பிரமனும் இந்திரனும் மற்றைத் தேவர்களும், ‘கள்வனே! எங்களையும் மற்றை உலகங்ளையும்  நின்னிடத்தினின்றும் தோன்றச்செய்த இறைவனே!’ என்று, கருடவாகனத்தையுடைய இறைவனுடைய திருவடிகளை வணங்கித் துதிப்பார்கள்)

திருமங்கையாழ்வாரும் எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என் கிறார்

இப்படியெல்லாம் லோககுருக்கள்  எம்பெருமானை "கள்வன்" என்று அழைத்தாற்போல நான் அழைக்கவில்லையே..இவ்வூரில் இருக்க என்ன தகுதி என்றாள் திருக்கோளூர்ப் பெண்

67-அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் பல அறிஞர்கள் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள்

ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.

மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்

இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்

வயதானவர்,அறிவாளி,அனுபவம் நிறைந்தவர் அவர் ராவணனிடம் சொல்கிறார்

"ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப் போகாதே!
மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர்.அவர்கள் உனக்கு எதிரிகள்.மேலும், ராமன் ,ஒரு மனிதனாய்த் தெரியவில்லை.அவன் விஷ்ணுவின் அவதாரம்.நம் படை முழுதும் போரில் அழியும்.ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சமாதானமாய்ப் போய்விடு "

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை

அந்த மால்யவானைப் போல அனுகூலம் சொன்னேனோ (எம்பெருமான் பற்றி) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்



66-.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!

நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார்.ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை

நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப்படுத்தினார்.அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சி க்குத் திரும்பச் செல்ல நினைத்தார்.கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார்

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அதை ராமானுஜரிடம் சொன்னார்.கூரத்தாழ்வாரையோ அல்லது பன்னிரு ஆழ்வார்களையோக் குறித்து நூல் எழுதலாம்" என்றார் ராமானுஜர்

ஆனால், அமுதனாரோ. "ராமானுஜர் நூற்றந்தாதி;' என்ற நூலை எழுதினார்.ஒவ்வொரு பாடலும் ராமானுஜரின் பெயரை  வைத்து நூறு பாடல்கள் கொண்ட அந்தாதி அது

அந்நூல் ராமானுஜர் முன் அரங்கேறியது.அறிஞர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது

இதையே திருக்கோளூர்ப் பெண்'அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே" (இல்லையே) என் கிறாள் 

65- ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வவாரியாண்டானைப் போலே

ஆளவந்தார், திருவனந்தபுரம் புறப்பட்டு செல்வதற்கு முன்னால்தம் மடத்தின் பொறுப்பைதெய்வவாரியாண்டான் என்ற சீடரிடம் விட்டுச் சென்றார்.இந்த சீடர் குருபக்தி அதிகம் கொண்டவர் ஆவார்

ஆளவந்தாரின் பிரிவு அவரை வாட்டியது.அதனால் உடல் நலம் குன்றி படுக்கையில் வீழ்ந்தார்.

இதைக் கண்ணுற்ற உடன் இருந்தவர்கள் , ஆசானின் பிரிவே இதற்குக் காரணம் என அவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தனர்

அவரை பல்லக்கில் ஏற்றினர்.ஆசானைக் காணப்போகிறோம் என்ற எண்ணமே..அவருக்கு உடல் தேறத் தொடங்கியது

திருவனந்தபுரத்தில் எம்பெருமானை தரிசித்துவிட்டு ஆளவந்தார் திரும்பி வந்த போது பல்லக்கைக்  கண்டார்.மடத்தை பொறுப்பாக கவனிக்காமல் அவர் வந்ததைக் கண்டு"வாரியாண்டாரே! பரதன், ராமபெருமான் கட்டளைக் கிணங்க நந்திக்கிராமத்தைவிட்டு அகலாமல் இருந்தார்.ஆனால் நீயோ என் கட்டளக்கு கீழ் படியாது வந்துவிட்டாய்" என்று கடிந்து கொண்டார்.
அந்த வார்த்தைகளைத் தாங்க முடியாத வாரியாண்டார் மயங்கி விழுந்தார்

தன் பிரிவுதான் வாரியாண்டானின் நிலைக்குக் காரணம் என மற்றவர்கள் மூலம் அறிந்த, ஆளவந்தார் அவரை எழுப்பி..ஆறுதல் கூறினார்.

ஆளவந்தார், வாரியாண்டானை எம்பெருமானை தரிசித்துவிட்டு வரச் சொன்னார்.ஆனால் அவரோ "ஆரியப் பெருமானே எனக்கு  அரங்கனும் நீங்களே..அனந்தபத்மனாபனும் நீங்களே! உங்களைப் பிரிய இயலாது" என்றார்.

பின் குருநாதருடன்  ஸ்ரீரங்கம் திரும்பினார்.

"ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே" என இதையே திருக்கோளூர்ப் பெண் கூறினாள்

(இங்கு ஆரியன் என்பது உயர்ந்தவர் என்ற பொருளில் ஆளவந்தாரைக் கூறியது)

Thursday, November 3, 2016

64- அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப்போலே


அரையர் சேவை என்ற நாட்டிய நிகழ்ச்சியில் நடனக் கலைஞர்கள் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசையமைத்து, அபினயம் பிடித்துக் காட்டுவர்.ஆளவந்தார் எனும் வைஷ்ணவத் துறவி  இந்நிகழ்ச்சிகளைக் கண்டு பெருமாளின் பெருமைகளில் மூழ்கித் திளைப்பார்

தமக்குப் பிறகு வைஷ்ணவத்தைக் காக்க ராமானுஜரே சரியானவர் எனத் தேர்ந்தெடுத்த்வர் இவரே ஆவார்

ஒருநாள் நடந்த அரையர் சேவையில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார் ஆளவந்தார்

திருவாய்மொழியில் வரும் "ஆனந்தபுரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை இவரைப் பார்த்து மூன்று முறை பாடி நடித்தனர்

அதைக் கேட்ட ஆளவந்தார், அரங்கன், தன்னையே யே அரையர் வாய்மொழி மூலம் அனந்தபுரம் செல்ல அறிவுறுத்துவதாக உணர்ந்தார்.

உடனே அனந்தபுரம், என்ற திருவனந்தபுரத்திற்கு சென்று பத்மனாப சுவாமியை தரிசித்து, பெருமான் சேவையில் ஈடுபட்டார்

இந்நிகழ்ச்சியையே "அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே" என்றாள் திருக்கோளூர்ப் பெண்

63- அருளாழங்கண்டேனோ நல்லானைப் போலே


எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பரம பக்தன் அந்தணன் ஒருவன்..காவிரி ஓடும் ஒரு ஊரின் நதிக்கரையில் வசித்து வந்தான்

ஒருநாள்,அவன் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த போது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தான்

அந்த சடலத்தின் தோள்பட்டையில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்ததால், அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என, அதை எடுத்து..இறுதிச் சடங்குகளை அவனே செய்தான்

அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை,அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி ஒருவனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணனான அவன் செய்ததால், அவனை சாதியைவிட்டு ஒதுக்கி வைத்தனர்

அந்த அந்தணன், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினான்.

அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான் மக்களுக்கு., அந்த சடலம் ஒரு வைஷ்ணவருடையது அல்ல என்றும், ஆனாலும்..அவனுக்கு   இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணன் ஒரு நல்லான் (நல்லவன்) என்றும்..அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு புரிய வைத்தார்

எம்பெருமானின் சக்கரம் அருளாழி எனப்படும்.நல்லான், அந்த சடலத்தின் அருளாழியையேப் பார்த்தான்.இதன் மூலம் அவனுக்கு எம்பெருமான் ,மீதான அருளின்  ஆழமும் தெரிந்தது.தவிர்த்து அன்பு என்பது எதிர்ப்பார்ப்புடன் வருவது.அருள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது/நல்லான் அருளாழ்வம் கொண்டவன்

அந்த நல்லானைப் போல நான் அருளாழங்கண்டேனோ என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்