எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பரம பக்தன் அந்தணன் ஒருவன்..காவிரி ஓடும் ஒரு ஊரின் நதிக்கரையில் வசித்து வந்தான்
ஒருநாள்,அவன் காவிரியில் நீராடிக் கொண்டிருந்த போது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தான்
அந்த சடலத்தின் தோள்பட்டையில் சங்கு, சக்கரம் ஆகியவை இருந்ததால், அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என, அதை எடுத்து..இறுதிச் சடங்குகளை அவனே செய்தான்
அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை,அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி ஒருவனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணனான அவன் செய்ததால், அவனை சாதியைவிட்டு ஒதுக்கி வைத்தனர்
அந்த அந்தணன், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினான்.
அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான் மக்களுக்கு., அந்த சடலம் ஒரு வைஷ்ணவருடையது அல்ல என்றும், ஆனாலும்..அவனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அந்தணன் ஒரு நல்லான் (நல்லவன்) என்றும்..அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு புரிய வைத்தார்
எம்பெருமானின் சக்கரம் அருளாழி எனப்படும்.நல்லான், அந்த சடலத்தின் அருளாழியையேப் பார்த்தான்.இதன் மூலம் அவனுக்கு எம்பெருமான் ,மீதான அருளின் ஆழமும் தெரிந்தது.தவிர்த்து அன்பு என்பது எதிர்ப்பார்ப்புடன் வருவது.அருள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது/நல்லான் அருளாழ்வம் கொண்டவன்
அந்த நல்லானைப் போல நான் அருளாழங்கண்டேனோ என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்
No comments:
Post a Comment