Wednesday, November 9, 2016

73- உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!

பிள்ளை திருநறையூர் அரையர் வைஷ்ணவ ஆசார்யார் ஆவார்

ஒருசமயம் அவர் தன் குடும்பத்துடன் தோட்டியம் என்ற ஊருக்கு வேதநாராயணன் பெருமாள் கோயிலுக்குச் சென்றார்

அப்போது சில சமூக விரோதிகள் கோயிலுக்கு தீ வைத்தனர்

தீ வேகமாகப் பரவ ஆரம்பித்தது.மக்கள் சிதறி ஓடினர்.

எம்பெருமானின் உருவத்தைத் தீ அணுகுவதைக் கண்டார் அரையர்

அதைப் பொறுக்கமுடியாமல் எம்பெருமானின் உருவச்சிலையைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.அதைப் பார்த்த அவர் மனைவி, குழ்ந்தைகளும் சேர்ந்து எம்பெருமானைக் கட்டிப்படித்தனர்.

தீயின் உக்கிரம் பொறுக்காத குழ்ந்தைகள் கதறினர்..அப்போது அரையர், "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்.நாம் நேரே வைகுண்டம் சென்று விடலாம்" என்றார்

அப்படிப்பட்ட திருநறையூரார் போல தன் உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா என் கிறாள் திருனறையூர்ப் பெண்.

1 comment:

  1. திருநறையூரார் போல தன் உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா...நாராயணாய

    ReplyDelete