Sunday, October 30, 2016

62- அத்வைதம் வென்றேனோ எம்பெருமானைப் போலே

அத்வைதம் என்பது இரண்டற்ற நிலை

ஜீவனும், இறைவனும் (ஜீவாத்மா, பரமாத்மா) ஒன்று தான்..வேறு அல்ல..சகுல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது

நான் தான் பிரம்மம் என்ற அத்வைத  தத்துவம் ராமானுஜருக்கு திகைப்பூட்டியது

நானே பிரம்மம் என்று இருந்து விட்டால் கடவுள் வணக்கத்திற்கு வகை ஏது...பக்திக்கு இடம் ஏது.தன்னைவிட மேலான பரம்பொருள் என ஜீவன் உணர்ந்தால்தான் அந்த பரம் பொருளை வணங்க வேண்டும்..முக்தியடைய வேண்டும் என்ற எண்ணம் ஜீவனுக்கு ஏற்படும்.

பிரம்மம் தான் எல்லாம்..அதனால் ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் என்ர தன் கொள்கையை பரப்பி வந்தார்

அப்போது வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். யக்ஞமூர்த்தி நிரம்பக் கற்ற துறவி. வாதத்திறமை மிக்கவர்.

வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி, தான் தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாள் நிலவரப்படி யக்ஞமூர்த்தியின் பக்கம் ஓங்கி நின்றது.

  அன்றிரவு ராமானுஜர் திருவமுது செய்யாமல் இருந்தார். ஆழ்வார்கள் வளர்த்த திருமால் நெறி தன்னால் தோல்வி அடையாமல் காத்திடப் பெருமாளிடம் வேண்டினார். பெருமாளும் ராமானுஜரின் கனவில் தோன்றினார். உமக்கு, ‘‘இன்னுமொரு சீடனைத் தந்தருள்வோம்!’’ என்று குறிப்பாகக் கூறியருளினார். பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார்.


அந்த எம்பெருமானைப் போல வாதாடி அத்வைதம் வென்றவளா நான்? என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Friday, October 28, 2016

61- அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே

சோழ மன்னன் தொல்லைகளை பொறுக்க முடியாமல் ராமானுஜர் கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரத்திற்கு சென்று விடுகிறார்.

பெரிய நம்பிகள் இறந்தது, கூரத்தாழ்வார் பார்வை இழந்தது எல்லாம் முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்

பெரிய நம்பிகளின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் கூரத்தாழ்வார்

ராமானுஜரும் அங்கு இல்லாததால் அவர் மனம் மிகவும் வேதனைப்பட்டது.ஆறுதல் வேண்டி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்

ராமானுஜருக்கு நெருக்கமானவர்கள் யார் வந்தாலும் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று சோழ மன்னன் கட்டளை இட்டிருந்தான்

ஆகவே கோயில் வாயில் காப்பான் ஒருவன் அவரை உள்ளே விட மறுத்து விட்டான்

ஆனால் வேறொரு காப்பாளனோ, "ராமானுஜருக்கு இவர் வேண்டியவராய் இருந்தாலும், இவர் நல்லவர்.இவரை உள்ளே அனுமதிக்கலாம்' என்றபடியே அவரை கோயிலுக்குள் செல்ல அனுமதித்தான்

ஆனால் கூரத்தாழ்வார் சொன்னார்,"ராமானுஜருடன் பழக்கம் உள்லவன் என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்கிறேன் என்றால்..உள்ளே செல்கிறேன்.அதைவிட்டு..வேறு எந்த காரனத்தாலும் உள்ளே செல்ல அனுமதிக் கொடுத்தால்..அப்படியாயினும் உள்ளே சென்று எம்பெருமானை த்ரிசிக்க வேண்டாம்"

என்று சொல்லி விட்டு கூரத்தாழ்வார் வெளியேறினார்

அதுபோல நான் ஆசார்யாருக்கு வேண்டியவள் என்று கூறிவிட்டு அவன் வேண்டாம் என்றேனா..இல்லையே..அதனால் திருக்கோளூற் விட்டுச் செல்கிறேன் அன்றாள் அப்பெண்

60- அவன் போனானென்றேனோ மாருதியாண்டான் போலே

சோழ மன்னனின் தொல்லைகள் பொறுக்க முடியாமல் ராமானுஜர், ஸ்ரீரங்கத்திலிருந்து, கர்நாடகாவில் இருந்த திருநாராயணபுரத்திற்கு வந்து தங்கியிருந்தார்.ஆனால் அவரால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், கூரத்தாழ்வாரையும், பெரியநம்பிகளையும் மறக்க இயலவில்லை

ராமானுஜருக்கு மாருதியாண்டான் என்றொரு சிஷ்யன் இருந்தான்.அவன், அவ்வப்போது ஸ்ரீரங்கம் சென்று அங்கு கூரத்தாழ்வாரையும், பெரிய நம்பிகளையும் பார்த்து செய்திகளை அறிந்து வந்து ராமானுஜரிடம் கூறுவான்.அதுபோல ராமனுஜர் சொல்வதை அவர்கலீடம் சென்று உரைப்பான்

இதற்கிடையே, சோழ மன்னனுக்கு கழுத்தில் ஒரு பெரிய கட்டி வந்துஇறந்தான். மக்கள் அதனால் அவனை கிருமி பாண்டியன் என்பர்

அந்தச் செய்தியை அறிந்தான் மாருதியாண்டான்.அதேபோன்று, பெரிய நம்பிகள் இறந்த செய்தி, ஆழ்வார் கண்பார்வை இழந்தது எல்லாம் கேள்விப் பட்டு அச் செய்திகளை ராமானுஜருக்குத் தெரிவிக்க திருநாராயணபுரம் வந்தான்

ராமானுஜரைக் கண்டதும் "அவன் போனான்" (சோழமன்னன் இறந்தான்) என்பதைக் கூறினான்.ராமானுஜர் மகிழ்ந்தார்.

பின்னர், பெரிய நம்பிகள், கூரத்தாழ்வார் பற்றிக் கேள்விப்பட்டு மனம் வருந்தினார்

பின்னர், ஸ்ரீரங்கம் வந்தார்

மாருதியாண்டான் போல, "அவன் போனானேன்றேனொ" .இல்லாத நான் திருக்கோளூரை விட்டுப் போனால் என்ன என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே- 59

நாதமுனியின் பெயர் ரங்கநாதமிஷ்ரர் ஆகும்

யோகவித்தை,தேவகான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் இவர்.ஆகவே, இவரை திருவரங்கநாத முனிவர் என்று அழைத்தனர்.அதுவே நாதமுனியாயிற்று.

இவர் கிபி 824 ஆம் ஆண்டு வீரநாராயணபுரத்தில் பிறந்தவர் (இப்போதைய காட்டுமன்னார்கோயில்)

இவர் நம்மாழ்வாரை வரவழைத்து பாசுரங்களைப் பெற்றார் .இவர் இல்லையெனில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்கள் காணாமல் போயிருக்கும்

இவர் ஸ்ரீராமன் மேல் அளவு கடந்த பக்தியைக் கொண்டவர்.எல்லாவற்றிலும் இறைவனைக் காணுபவர்

ஒருநாள், அவர் யோக நிஷ்டையில் இருந்த போது, சோழ மன்னன் இவரைக் காண வந்தான்.ஆனால், பார்க்க முடியாமல் திரும்பினான்.பின், அதை அறிந்த நாதமுனியார் , சோழனின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் வரை மன்னனைக் காண நடந்தே  சென்றார்.இவரது இச்செயலைப் பற்றி சிஷ்யர்கள் கேட்ட போது ..தான் மன்னனை, கிருஷ்ணனாகவே எண்ணுவதாகக் கூறினார்

மற்றொரு முறை இவர் தியானத்தில் இருந்தார்.அப்போது இரு மனிதர்கள் (மிருகங்களைப் பழக்குபவர்கள்), ஒரு பெண்,குரங்குடன் வந்தனர்.இவரைப் பார்க்க முடியாமல் திரும்பினர்.விஷயம் அறிந்த இவர், ஸ்ரீராமன், லட்சுமணன், சீதா பிராட்டி, அனுமன் ஆகியோரே அவர்கள் என அவர்களைத் தேடி கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி நடந்தே சென்றார்

அவர்களைக் காண முடியாது வருந்தினார்..அந்த இடத்திலேயே உயிரிழ்ந்தார்,

அது போல எம்பெருமானைக் காண  நெடுந்தூரம் போனேனோ  நாதமுனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, October 27, 2016

நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர் நம்பியைப்போலே - 58

இடையற்றூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் இடையற்றூர் நம்பி.

இவர் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்திற்கு தவறாமல் முதல்நாளே சென்று, கடைசி நாள் உற்சவம் முடியும் நாள்வரை அங்கேயே இருப்பார்.

பின்னர், திரும்பி வந்தும் அது பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

அவருக்கு நூறு வயது ஆனாது.உடல் தளர்ந்தது.அதனால் அம்முறை பிரம்மோற்சவத்திற்கு முதல்நாளே அவரால் செல்ல இயலவில்லை.ஆ றாவது நாள்தான் அவர் அங்கு சென்றடைந்தார்.ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டு நம்பெருமானை தரிசித்தார்

நம்பெருமாளும் ,பவனி வரும்போது  அவரைப் பார்த்து"முதல்நாளே வரும் நீ ஏன் இம்முறை ஆறாம் நாள் வந்தாய்?"என வினவினார்

அதற்கு இடையற்றூர் நம்பி, தன் உடல்நிலையேக் காரணம் என்றார்.

அதைக்கேட்ட நம்பெருமாள்.."சரி...இனிமேல் நீ இங்கேயே நில் (இரு)" என்ற நம்பெருமாள் அடுத்தத் தெருவிற்கு பவனி செல்கையில், இடையற்றூர் நம்பி நின்ற இடத்திலேயே உயிரிழ்ந்தார்.

என்னை அதுபோல எம்பெருமான் நில் என்று சொல்லப் பெற்றேனா இடையற்றூர் நம்பியைப் போலே..என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்  

Wednesday, October 26, 2016

இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே - 57

திருநாராயணபுரம் உற்சவர் செல்வநாராயணனின் சிலை, ஒரு சமயம் டில்லி பாதுஷாவிடம் இருந்தது.பாதுஷாவின் மகளுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி

ராமானுஜர் உற்சவரை மீட்க பாதுஷாவின் அரண்மனைக்குப் போனார்.அவர் சென்ற சமயம் இளவரசி அரண்மனையில் இல்லை.பாதுஷாவின் அனுமதியுடன் இளவரசியின் அந்தப்புரத்திற்குச் சென்று அங்கு செல்வநாராயணனின் விக்கிரகத்தைக் கண்டார்.

அவர் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகியது.இதோ..என் செல்வப்பிள்ளை என உரக்கக் கத்தினார்

அந்தச் சிலை உடனே சின்னஞ்சிறு கண்ணனாக மாறியது.தன் சின்னஞ்சிறு   பாதங்களில் சலங்கை ஒலி ஒலிக்க...ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால்..அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டது

அதுபோல இரு (கைகளால்)மிடறு (கழுத்து) பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப்போலே என ராமானுஜரிடமே திருக்கோளூர்ப் பெண் சொல்லிவிட்டு..இல்லையே ஆகவே இங்கு தங்க தனக்கு என்ன் தகுதி இருக்கிறது என்றாள்

(ராமானுஜரின் மடியில் இருந்த குழந்தை  பின் விக்கிரகமானது.அதை அவர் திருநாராயணர் கோவிலுக்கு எடுத்து வந்தார்.பாதுஷாவின் மகள் பின்னர் பெருமாளைத் தேடி வந்துநாராயணபுரத்தில் செல்வநாராயணப் பெருமாளின் திருவடியில் ஐக்கியமானாள்.மூலவரின் பாதத்தில் வரநந்தினி என்ற  பெயரில் இருப்பதாக ஐதீகம்.வரநந்தினியை பீபீ நாச்ச்சியார் என்பர் உள்ளூர் மக்கள்,இக்கோயிலில் ராமானுஜரும் உபதேச முத்திரையுடன் காட்சியளிக்கிறார்)  

இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே - 56

வடுகநம்பி ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர்.ராமானுஜருக்கு தொண்டு செய்வதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டார்.ராமானுஜர் இவரது பாதங்களில் தனது கால்களை நீட்டியபடி தனது இறுதி மூச்சை விட்ட பெருமை வடுகனம்பிக்கு உண்டு

ஸ்ரீரங்கநாதருக்கு ரங்கநாதன் என்று பெயர்.உற்சவருக்கு நம்பெருமாள் என்று பெயர்.ஒருமுறை ராமானுஜர் நம்பெருமானின் கண்ணழகில் மயங்கி, "வடுகா..நம்பெருமானின் கண்களைப் பார்," என்றார்.

ராமானுஜரைத் தவிர வேறு எவரையும் ரசித்தறியா வடுகநம்பி,அவரைப் பார்த்தபடியே, "என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று சொல்லி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்


இப்படிப்பட்ட வடுகநம்பி ஒருமுறை பாய் காய்ச்சிக் கொண்டிருந்தார்.அப்போது நம்பெருமாள் திருவீதி புறப்பாடு சென்று கொண்டிருந்தது.

ராமானுஜர், "வடுகா..நம்பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும்.விரைந்து வா" என்றார்

அங்கு வந்து உம்பெருமாளைப் பார்த்துக் கொண்டிருந்தால்,இங்கு நம்பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்கள்" என்று கேட்டார்.வடுகநம்பி.

அவரைப் பொறுத்தவரை ராமாநுஜரே நம்பெருமாள்

அந்த வடுகநம்பியைப் போல ஆசார்ய பக்தியில், பெருமாளையும் மறந்து, "இங்கு பால் பொங்கும் என்றேனா"(இல்லையே!).பின் நான் இங்கு ஏன் இருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

இருகையும் விட்டேனோ திரௌபதியைப் போலே - 55


சூதாட்டத்தில் தருமர் மயங்கி, வீடு, வாசல்,நாடு,நகரம் அனைத்தையும் பணயம் வைத்து இழக்கிறார்.கடைசியில், சகோதரர்களையும், தன்னையும், திரௌபதியையும் தோற்றார்

கௌரவர் சபைக்கு பாஞ்சாலி, துச்சாதனனால் அழைத்து வரப்படுகிறாள்.அவளைத் துகிலுரிகையில்... தன்னைக் காக்க கண்ணன் ஒருவனால்தான் முடியும் என அவனை சரணாகதி அடைகிறாள்

ஆரம்பத்தில், தனது இருகைகளால் மானம் போகாது மறைத்து கண்ணனைக் கூப்பிடுகிறாள்.கண்ணன் வரவில்லை

பின், ஒரு கையால் மானத்தை மறைத்து, மறுகையால் கண்ணனை வணங்கி அலறுகிறாள்.கண்ணன் வரவில்லை

இறுதியாக, தன் இருகைகளையும் மேலே தூக்கி, முற்றிலும் அவனே கதி என "கோவிந்தா: " என அலறுகிறாள்.கண்ணன் வந்து ரட்சிக்கிறான்

எம்பெருமானை, சரணாகதி என வந்துவிட்டால், நம்மை அவன் காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்

நான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் சரணம் என இருகையும் விட்டேனா...ஆகவே எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி உள்ளது..ஆகவே..நான் போகிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே - 54

அனுமனை தென் திசைக்குச் சென்று சீதை இருக்குமிடத்தைத் தெரிந்துவரும்படி ராமன் உரைத்தான்.அடையாளமாகக் காட்ட கணையாழியைக் கொடுத்தான்.தானும், சீதையும் அறிந்த சில ரகசிய  நிகழ்வுகளையும் கூறியனுப்பினார்

கடலைக் கடந்த அனுமன், ஊரெல்லாம் சீதையைத் தேடி அசோகவனத்தில் பிராட்டியைக் கண்டான்.கணையாழியை அளித்து விவரங்களைக் கூறினான்

அங்கு, அரக்கர்கள் அனுமனின் வாலுக்கு தீயை வைத்தனர்.அத்தீயைக் கொண்டே இலங்கையை எரித்தான் அனுமன்.

பின்னர் ராமன் இருக்குமிடத்திற்கு வந்து,அனுமன் வரவிற்காகக் காத்திருந்த ராமனிடம் "கண்டேன் சீதையை" என்றான்

சிறிய திருவடி என போற்றப்படுபவன் அனுமன்.

கண்டுவந்தேன் (சீதையை) என்றேனோ திருவடியைப் போலே..என்று இந்நிகழ்ச்சி பற்றி திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்

Tuesday, October 25, 2016

காட்டுக்குப் போனேனோ பெருமானைப் போலே - 53

ராமனுக்குப் பட்டாபிஷேகம்

மன்னன் தசரதன் அறிவித்து விட்டான்

சொல்ல வந்த மந்தரைக்கு பொன்மாலையை பரிசளித்தாள் கைகேயி..

"இது மகிழும் தரணமா? அவன் அரசனானால் உன் மகன் பரதன் என்னாவான்.ஆகவே ராமனை காட்டுக்கு அனுப்பு.உன் மகனை அரசனாக்கு: மந்தரை போதித்தாள்.மனம் மாறினாள் கைகேயி

மன்னன் தசரதன் முன்னர் ஒருசமயம் தன் உயிரைக் காத்த கைகேயிக்கு இரு வரங்களை அளித்திருந்தார்.அதை உபயோகித்துக் கொள்ள தீர்மானித்தாள்

"ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும்.பரதன் அரசாள வேண்டும்" மன்னனிடம் கேட்டாள்.பிடிவாதமாக இருந்தாள்.கொடுத்த வாக்கைக் காக்க மனனுக்கும் வேறு வழியில்லை.

ராமன் , லட்சுமணன், பிராட்டியுடன் வனத்திற்குக் கிளம்புகிறான்.தந்தையிடம் விடை பெறச் செல்கிறான்.

"ராமா! நான் கொடுத்த வரத்திற்கு கட்டுப் பட்டுவிட்டேன்.நீ என்னை மதியாமல் அயோத்தியைக் கைப் பற்றியிருக்கலாமே" என் கிறான் மன்னன்

"தந்தையே! நான் ராஜ்ஜியத்திற்கு ஆசைப்படவில்லை.உங்கள் வாக்கைக் காப்பாற்றுவேன்.பதினான்குஆண்டுகள் வனவாசம் புரிந்து திரும்புவேன்' என்றான்

தன் தந்தையின் வாக்கைக் காக்கக் காட்டிற்கு சென்றேனோ பெருமானைப் போல நான் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Monday, October 24, 2016

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே - 52

கண்ணன் மீது அன்பு மிக்கவன் ததிபாண்டன்.ஆயர்பாடியில் தயிர் விற்பவன்.கண்ணன் அவ்வப்போது இவனிடம் குறும்புகள் செய்வது வழக்கம்

கன்றுகள், தாய்ப்பசுவிடமிருந்து அதிகம் பாலைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என அதன் வாயைக் கட்டி வைத்திருப்பார்கள்.அதற்கு ததிபாண்டன் காவல்.கண்ணன் அவ்வப்போது அவனுக்குத் தின்பண்டங்களைக் கொடுத்து அவனை வெளியே அனுப்பிவிட்டு பாலைக் குடித்து விடுவான்

அதனால், ஒருநாள் கண்ணனை இதற்கெல்லாம் சேர்த்து பழி வாங்க வேண்டும் என ததிபாண்டன் காத்திருந்தான்

ஒருமுறை, கோபியர்கள் கண்ணனைப் பற்றி யசோதையிடம் புகார் அளிக்க, யசோதை கண்ணனை அடிக்க கையில் ஒரு குச்சியுடன் வந்தாள்.அதைக் கண்ட கண்ணன் அவளது கையில் சிக்கிவிடாமல் ஓடினான்

ததிபாண்டன் இல்லத்தில் பெரிய பெரிய தாழிகளில்தயிர் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும்.அப்படிப்பட்ட காலியான ஒரு தாழியைத் திறந்து அதனுள் அமர்ந்து விட்டான்.இதைப் பார்த்துவிட்ட ததிபாண்டன் அந்தத் தாழியை மூடி அதன் மீது அமர்ந்து கொண்டான்

அங்கு கையில் குச்சியுடன் வந்த யசோதை , அவனைப் பார்த்து, "கண்ணன் இங்கு வந்தானா" என்றாள்

"இல்லையே!" என்றான் ததிபாண்டன்.யசோதை அவ்விடத்தைவிட்டு அகன்றாள்.கண்ணன் தாழியைத் திறக்கச் சொல்லியும் ததிபாண்டன் கேட்கவில்லை

:உன்னை வெளியே விட வேண்டுமானால் ஒரு நிபந்தனை" என்றான்

என்ன

"எனக்கு மோட்சம் வேண்டும்.கண்ணா, நீ யாரென நான் அறிவேன்.நீ எனக்கு மோட்சம் கொடுத்தால்தான் உன்னை வெளியே விடுவேன்" என்கிறான் ததிபாண்டன்

கண்ணன் நிஷ்டையில் ஆழ்ந்தான்.வைகுண்டத்திலிருந்து தேருடன் தேவர்கள் வந்தனர்.கண்ணன் அமர்ந்திருந்த தாழியுடன், ததிபாண்டனையும் சேர்த்து வைகுண்டம் எடுத்துச் சென்றனர்

(வைகுண்டம் போனால்..இன்னமும் அப்பானையைப் பார்க்கலாம் என்பது வைணவர்கள் நம்பிக்கை)

இப்படியாக கண்ணனை தாழிக்குள் மறைத்து, அவனைக் காக்க இங்கில்லை என்றேனோ ததிபாண்டன் போல என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

இங்கும் உண்டு என்றேனோ பிரஹலாதனைப் போல் - 51

தனது தவ வலிமையால் அனைத்து தேவர்களையும் பணிய வைத்த அசுரன் இரண்யன்

அவனது மகன் பிரஹலாதன் , எல்லாமே மகாவிஷ்ணுவின் சொரூபம் என நினைப்பவன்.அவன், எட்டெழுத்து மந்திரத்தின் மீது பற்றுறுதியால் இருந்ததால் மரணத்துக்கும் அஞ்சாமல் இருந்தான்

"இரண்யா நம" என தன் தந்தை சொல்லச் சொன்னதைச் சொல்ல மாட்டேன் என்றதுடன்"ஓம் நாராயணாய நமஹ" என்ற திருமந்திரத்தைச் சொல்லி வந்தான் என்றேனோ பிர

;நீ சொல்லும் உன் மகாவிஷ்ணு எங்கிருக்கிறான்?" என இரண்யன் கேட்க, "அவர் தூணிலும் இருப்பார்...துரும்பிலும் இருப்பார்" என்றான் பிரகலாதன்

அதன் பிறகு தூணிலிருந்து நரசிம்மனாக எம்பெருமான் வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்தார்

அப்படிப்பட்ட பிரகலாதனைப் போல , எங்கும் நாராயணன் உண்டு  என்றேனோ என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Sunday, October 23, 2016

இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே - 50

சபரி வேட்டுவக் குலத்தைச் சேர்ந்தவள்.

 மதங்க மாமுனிவரின் சிஷ்யை.மதங்கருக்கு மோட்சக் காலம் வந்தது..

தனக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என சபரி, தன் குருவான மதங்கரிடம் வேண்டினாள்.

"இந்தக் காட்டின் வழியே ஸ்ரீராமன் வருவார்.அவருக்குக் கைங்கர்யம் செய்துவிட்டு, நீ மோட்சம் அடைவாயாக" என்றார் முனிவர்

தன் தள்ளாத அவயதிலேயும், ராமன் வருவான்...ராமன் வருவான் ..எனக் காத்திருந்தாள் சபரி

ராமன் வந்தான்..

வீடு போற்றற்குரிய மெய்நெறியினை முற்றும் அறிந்தவர்கள் கூறுவதைப் போல சபரிக் கூறியதையெல்லாம் ராமன் கேட்டான்.

இதைத் தவிர சபரிக்கு வேறு என்ன வேண்டும்.அவளுக்கு அதுவே இனியதானது

(இதைத் தவிர வேறு ஒரு கதையும் சொல்வதுண்டு.அது கதை தானேத் தவிர ராயணத்தில் அது பற்றியில்லை.அந்தக் கதை..
சபரி..தான் உண்ணும் பழங்களில் இனிப்பையறிந்து, அதை ராமனுக்குக் கொடுக்க எடுத்து வைத்து கொடுக்க ராமனும் அக்கனிகளை உண்டானாம்)

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே - 49

பெருமாளின் திருவடியை இக்கரை என்கிறார் பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில்

நமக்குப் பிடித்த ஒன்று நமக்குப் போதும்.அது நம்முடையது.இது நம் மனதிற்குப் பிடிக்கிறது என்றால் அது இக்கரையாகும்.பெரியாழ்வார் வைகுண்டத்தை இக்கரை என்கிறார்

அக்கரையில் விபீடணன்,,

அவன், இக்கரையில் இருக்கும் ராமனே ..அவர் இருக்கும் இடமே தன்னை கரை சேர்க்கும் என அகக்ரையிலிருந்து, இக்கரைக்கு வருகிறான்.அதாவது ராமனிடம் அடைக்கலம் ஆகிறான்

அப்படி வீபீடணனைப் போல ராமனைத் தேடிச் சென்றேனா என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடையாரைப் போலே - 48

பத்து வருடங்கள் தண்டகாரண்யத்தில் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ராமன் அகத்தியரின் குடிலுக்கு வருகிறான்.அவனுக்கு, அகத்தியர் ஆயுதங்களைக் கொடுக்கிறார்.

அவற்றைப் பெற்றுக் கொண்டு திரும்புகையில் ஜடாயூவைப் பார்க்கின்றனர் ராம லட்சுமணனும் பிராட்டியும்

ஜடாயூ, தசரதனின் நண்பன்.வயதில் மூத்தவர்,அருணனின் புதல்வர், கழுகளுக்கெல்லாம் அரசன்.அவருக்கு பிராட்டியை ராமன் அறிமுகப்படுத்துகிறான்

 அதற்குப்பின், ராவணன் பர்ணசாலையுடன் சீதையைத் தூக்கிச் செல்லும் போது ஜடாயூ பார்க்கிறார்.ராவணனுடன் போரிடுகிறார்.ராவணன் ஜடாயூவை வாளால் வெட்டி வீழ்த்துகிறான்

சீதையைத் தொலைத்த ராமனும் லட்சுமணனும் அவளைத் தேடிச்செல்கையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜடாயூவைப் பார்க்கின்றனர்.ராவணன், பிராட்டியைக் கொண்டுச் சென்ற தெந்திசையைக் காட்டிவிட்டு ஜடாயூ மரணம் அடைந்தது

ஜடாயூவிற்கு ,ராமன் நீர்க்கடன் செய்கிறான்.

இதைவிட ஜடாயூவிற்கு வேறென்ன பாக்கியம் வேண்டும்

அப்படிப்பட்ட ஜடாயூ போல சீதாபிராட்டிக்கு கைங்கர்யம் என்னால் செய்ய முடியவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Saturday, October 22, 2016

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே - 47

தன் குடிலில் தர்ப்பப் பாயில் படுத்திருந்த ராமனைப் பார்த்து குகன், "ஐயனே...இங்கு என் குடிலில் உங்களுக்கு உண்ண தினைமாவு உள்ளது.தேவர்கள் விரும்பும் கறிசோறு உள்ளது'உங்களை வைத்துத் தாங்க அடிமைகள் நாங்கள் இருக்கிறோம்.விளையாட மான் களும், கங்கை நதியும் உண்டு.நீங்கள் இங்கேயே தங்கி இருக்கலாம்" என்றான்

"குகனே! நெடுங்காலம் வனத்தில் இருந்து அவதியுறுவேன் என எண்ணூகிறாயா?பதினான்கு  வருடங்கள்  ..அவ்வளவுதான்.நீ எங்களை கங்கையின் தென் கரையில் கொண்டு சேர்ப்பாய்.அங்கு இருக்கும் முனிவர்களுடன் புனித வாழ்வை மேற்கொண்டு விடுகிறோம்.நீ ஓடத்தை எடுத்து வா" என்றான் ராமன்

மறுப்பு ஏதும் பேசாத குகன் ஈஅமனையும், சீதாபிராட்டியையு ம், லட்சுமணனையும் படகில் ஏற்றி அக்கரையில் சேர்க்கிறான்..
ராமனும் குகனுடன் ஐவரானோம் என குகனை தன் சகோதரனாக ஏற்கிறான்

அப்படிப்பட்ட குகனைப் போல எம்பெருமானை அக்கரையில் விடும் பாக்கியம் கிடைத்ததா எனக்கு என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே - 46

ராமன் காட்டுக்குச் செல்லுகையில் அவனுடனேயே செல்கிறான் லட்சுமணன்.

ராமனுக்கு, ஒரு கூட்டம் செய்ய வேண்டிய காரியங்களை ஒற்றையாளாய் லட்சுமணன் செய்கிறானாம்.ரமனுக்கு, அவனைப் போல குறிப்பறிந்து பணியாற்றிட யாரும் இல்லையாம்

பஞ்சவடியில் அவர்கள் தங்க பர்ணசாலை அமைக்கிறான் லட்சுமணன்.பின், ராமனைக் கூப்பிட்டுக் காட்டுகிறான்

அதில் யாகம் நடத்த ஒரு இடம், கடவுள் அறை,சமையல் செய்ய் ஒரு அறை என ஒவ்வொன்றாய்க் காட்டுகிறான்.ஒரு அறையைக் காட்டி.."அது.." என ராமன் கேட்டானாம்.அந்த அறை தாங்களும், சீதா பிராட்டியும்   தங்க என் கிறான் லட்சுமணன்

ராமனின் சிந்தையறிந்து செயல் படும் லட்சுமணனைத் தழுவிக் கொண்ட ராமன்"ஒரு தண்ணீர்ப் பந்தலைப் போல அல்லவா நம் தந்தை உன்னை எனக்குத் தந்துவிட்டு சென்றுள்லார்" என அகமகிழ்ந்தான்

லட்சுமணன் அவதாரம் செய்ததே ராமனுக்கு கைங்கர்யம் செய்ய..அப்படிப்பட்ட லட்சுமணனைப் போல நான் எதுவும் செய்யவில்லையே என்று சொல்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Friday, October 21, 2016

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே - 45

ஸ்ரீராமனை காட்டுக்கு அனுப்பும் முன் கைகேயி பரதனை தன் தந்தையின் நாடான கேகேயத்திற்கு அனுப்புகிறாள்

பரதன் திரும்பி வந்து,. தன் தாயின் இழி செயலால் மனம் வருந்தி மீண்டும் ராமனை காட்டிலிருந்து அழைத்து வர படையுடன் செல்கிறான்

நடுவழியில் அவனைக் காணும் பாரத்வாஜ முனிவர், "நாட்டை ஆள்வதை விடுத்து படையுடன் எங்கே செல்கிறாய்?" என்றார்

முறையுடன் பெறப்படும் அரசை ஆள்வேனேத் தவிர, சதிச் செயலால் பெறப்படும் அரசு எனக்கு வேண்டாம்" என்கிறான் பரதன்

மறுநாள் சித்திரக் கூடம் செல்லும் பரதனை..காட்டிலும் விடாது ராமனைத் துரத்துவதாக எண்ணிய லட்சுமணன், போர்க்கோலம் பூணுகிறான்

ராமனோ. லட்சுமணனை சமாதானம் செய்கிறான்.பின், பரதன் மூலம் தந்தை மறைந்த செய்தியைக் கேள்விப் பட்டு நிர்க்கடன் செலுத்துகிரான் ராமன்

அடுத்து, பரதனின் தவக்கோலத்திற்கான காரணத்தைக்  .கேட்கிறான்.பரதனோ,   ராமனை மீண்டும் அயோத்திக்கு வந்து நாடாள வேண்டும் என்கிறான்

தந்தையின் வாக்கு பொய்க்கக்கூடாது என ராமன் கூறி பரதனே நாடாள வேண்டும் என்கிறான் ராமன்.

பரதன் பிடிவாதமாக இருக்கிறான்

வேறு வழியில்லாத ராமன் , பரதனை நோக்கி,"இது என் ஆணை.பதினாங்கு ஆண்டுகள் நீ அரசாள்வாய்' என்று கூறியதும், பரதன் மறு பேச்சு பேசாது சம்மதிக்கிறான்

இப்படிப்பட்ட பரதனைப் போல "வைத்த இடத்து இருந்தேனா" என்கிறாள் திருக்கோளூற்ப் பெண்

பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே - 43

கண்ணனையும், பலராமனையும் அழைத்துவர கம்சன் அக்ரூரரை அனுப்பினான் என்பதை திருக்கோளூர்ப் பெண் சொன்ன முதல் காரணத்தில் பார்த்தோம்

அக்ரூரர், தேரினைச் செலுத்த, கண்ணனும், பலராமனும் தெருவில் வரும் போது மக்கள் கண்ணனைத் தரிசிக்கக் கூடினர்.பெரும் கூட்டம்.முண்டி அடித்தனர்.அக்கூட்டத்தில் ஒரு பெண்மனியும் இருந்தாள்,அவள் கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு முன்னே வந்தாள்.ஆனால் அவளால் நிமிர்ந்து கண்ணனைப் பார்க்க முடியவில்லை.அவள் முது கூனி இருந்தது.

அவள் ஊர் மக்களுக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து,பிழைப்பு நடத்தி வந்தாள்.

பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனத்தை அரைத்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள்.கண்ணன் வந்தால் தன் கைகளாலேயே அவனுக்கு சந்தணம் பூச வேண்டும் என்றிருந்தாள்

வைணவ சம்பிரதாயத்தில் ஒரு வழக்கம் உண்டு

மடிதடவாத சோறு,சுருள் நாறாக பூ, சுண்ணாம்பு கலவாத சந்தனம் இவையே எம்பெருமானுக்கு ஏற்றவை

(மடி தடவாத சோறு என்றால் கைமாறு எதிர்பாராத விருந்தோம்பல் - இதை செய்தவர் விதுரர் ஒருவரே)

மணம்  வீசும் மாலைகள் (இதை பூ வியாபாரி அளித்தார் என பார்த்தோம்)

இப்போது இந்த க்கூனி சந்தனத்துடன் நிற்கிறாள்

கண்ணன் பலராமனுடன் வந்துக் கொண்டிருக்கிறார்கள்

தேரை நிறுத்தி அப்பெண்மணியைக் கூப்பிட்டு, "நல்ல சந்தனம் இருந்தால் எனக்குப் பூசு" என்றான் கண்ணன்..அவளும், கண்ணனின் திருமேனியில் சந்தனத்தைப் பூசினாள்

"இந்த சந்தனம் நன்றாய் இல்லையே.வேறு இல்லையா?
 என்கிறான் கண்ணன்

:வேறு சந்தனம் என்றால் என் மேனியைத்தான் சந்தனமாக பூசிக் கொள்ள வேண்டும்.ஏற்றுக் கொள்" என்றாள்

கண்ணன் சிரித்தவாறே அவளது கூன் முதுகைத் தொட்டு அவளை நிமிர்த்தினான்.

அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு சந்தனம் பூசக் கொடுத்தேனா கூனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப்பெண் 

Thursday, October 20, 2016

மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே - 42


 இந்திரத்துய்மன் என்ற புராணகால பாண்டி வேந்தன் அகத்திய முனிவரைக் குலகுருவாகக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் அகத்தியரை வரவேற்று உபசரிக்காமல் அலட்சியம் செய்தான். அதனால் வெகுண்ட அகத்தியர், இந்திரத்துய்மனை யானையாகப் பிறக்கும்படி சபித்து விட்டார்.

இந்திரத்துய்மன் திரிகூடாசலம் என்ற மலையை அடுத்திருந்த காட்டில் யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தபோதும் திருமால் பக்தி தொடர்ந்தது. 

அன்றாடம், யானை ஆற்றில் நீராடி, அருகில் இருந்த தாமரைத் தடாகத்திற்குச் செல்லும். அங்கிருந்து பெரிய தாமரை மலர் ஒன்றைத் தன் துதிக்கையில் எடுத்து வந்து, திருமாலின் அர்ச்சாமூர்த்தத்தின் திருவடியில் சமர்ப்பிக்கும். 

அதே காட்டில் இருந்த பொய்கையில் தேவலர் என்ற முனிவர் நீராடிக் கொண்டிருந்தார். ஒரு கந்தர்வன் முனிவரின் காலைப் பிடித்து இழுத்து, முனிவருக்குத் துன்பம் கொடுத்தான். முனிவர் கந்தர்வனை முதலையாகப் பிறக்கும்படி சபித்தார். கந்தர்வன் சாபவிமோசனம் வேண்டினான். 

ஒரு திருமாலடியார் காலைக் கவ்வும்பொழுது, சாபம் நீங்கும் என்று முனிவர் விமோசனம் கூறினார். 

நாட்கள் சென்றன

 கஜேந்திரன் என்ற திருமால் பக்தி மிகுந்த யானையின் காலை முதலை கவ்வி இழுத்தது. தன்னை விடுவித்துக் கொள்ள யானை போராடியது. 

இறுதியில் பெருமாளே காக்க வல்லவர் என்று தெளிவு பெற்று, பெருமாளை, ‘‘ஆதிமூலமே!’’ என்று கூவியழைத்தது. 

கருட வாகனத்தில் விரைந்து வந்த பெருமாள், யானையின் காலுக்கு ஊறு விளையாமல், முதலையின் தலையைத் தன் சக்கரத்தால் கொன்றார். முதலை கந்தர்வ உருவம் பெற்றது. கந்தர்வன் பெருமாளைத் துதித்துச் சென்றான். 

இறுதியில் யானையும் மோட்சம் அடைந்தது

‘‘மூலமென்று அழைத்தேனோ யானையைப் போலே?’’ -கஜேந்திரன் என்ற யானையைப் போல் தான், பெருமாளை ‘‘ஆதிமூலமே!’’ என்று அழைத்து அருள் பெறவில்லையே !  என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

மண்பூவை இட்டேனோ குரவநம்பியைப் போலே - 41


குரும்பருத்த நம்பி (குரவை நம்பி)என்பவர் திருமலையில் குயவனாக இருந்தார்.மண்பானைகள் செய்து வியாபாரம் செய்து வந்தா.தினமும் மீதி இருக்கும் மண்ணில் பூ செய்து திருமலையப்பனுக்கு சமர்ப்பித்து வந்தார்.திருமலையப்பனும் அவர் அளிக்கும் புஷ்பத்தை  ஏற்று தலையில் சூடிக் கொண்டார்


அந்த ஊரை தொண்டைமான் சக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.அவன் தினமும் சொர்ணப் பூவை அளித்து பெருமானை வேண்டிக் கொள்வான். ஆனால்..சில தினங்களாக திருமலை ஆண்டவனிடம் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்தான் 

திருமலையப்பன்  தலையில் மண் புஷ்பத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டு, தன் சந்தேகத்தை அவரிடமே கேட்டு விடுவோம் என பெருமாலைப் பார்த்து...

"ஸ்வாமி, தங்களிடம் சில நாட்களாக வித்தியாசம் தெரிகிறதே?" என்று கேட்டான். 
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லையே?" 

"இல்லை ஸ்வாமி, தங்கள் சிரசிலே புதிதாக மண் புஷ்பம் காணப்படுகிறது.  எனக்குத் தெரியாமல் தங்களுக்கு அணிவிப்பது யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" 

"அதுவா, அது ஒரு அன்பன் எனக்கு ஆசையாக கொடுத்தான். ஆனால் அவன் சூட்டும் போது என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளான்." 

"அப்படி என்ன சுவாமி நிபத்தனை விடுத்துள்ளான், என்னிடம் கூறக் கூடாதா?" 

"அவன் அனுமதி இல்லாமல் யாருக்கும் அவனைப் பற்றி சொல்லகூடாது.எதற்கும் நாளை அவனிடம் அனுமதி கேட்டு உனக்குச் சொல்கிறேன்" 

மறுநாள் தொண்டைமான் சக்ரவர்த்தி வந்து கேட்டுவிடுவானே என்று, திருமலையப்பனும் குயவன், எப்போதும் போல மண் புஷ்பத்தைக் கொடுக்கும் போது, 
"குயவா, ஒரு நிமிஷம் இரு, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும்." 

"ஸ்வாமி,என்னிடமா?" 

"ஆமாம், தொண்டமான் சக்ரவர்த்தி இந்த புஷ்பம் யார் கொடுக்கிறார்கள் என்று கேட்கிறான். 
நீ தான் சூட்டுகிறாய் என அவனிடம் தெரிவிக்கலாமா?" 

"வேண்டாம் ஸ்வாமி. நான் தான் புஷ்பம் சூடுகிறேன் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் செய்வது சாதாரண தொண்டு, அதை உலகம் அறியச் செய்யவேண்டுமா? வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்று இருக்கும் போது, சாதாரண ஒரு புஷ்பம் கைங்கர்யம் யாருக்கும் தெரியப்படுத்தாதிர்கள் ஸ்வாமி. அப்படி தெரியப் 
படுத்தணும் என்றால் எனக்கு உடனே நீங்கள் முக்தி கொடுக்கவேணும்" 
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் நம்பி. 

தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார் திருமலையப்பன். காலையில் எப்போதும் போல தொண்டமான் சக்ரவர்த்தி வந்தார்,. 

திருமலையப்பன் நேற்று நடந்த விஷயத்தைக் கூறி, தான் அவனுக்கு முக்தி கொடுக்க தீர்மானித்து விட்டு, மன்னரிடம் புஷ்பம் யார் சமர்ப்பிக்கிறார்கள் என்று கூறினார். 

அந்த குரவை நம்பியைப் போல மண்பூவை இறைவனுக்கு இட்டேனா நான் (இல்லையே) அதனால் இந்த ஊரைவிட்டுப் போகிறேன் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Wednesday, October 19, 2016

அடி வாங்கினேனோ கொங்குப் பிராட்டியைப் போலே - 40

வைணவத்தில் ஆசார்ய சம்பந்தம் இல்லாது  எம்பெருமான்  சம்பந்தம் இருந்தும் பயனில்லை.ஆசார்ய சம்பந்தம் இருந்தா ல் எ ம்பெருமான் சம்பந்தம் தானே அமைந்து விடும்.இதற்கு கொங்கு பிராட்டியின் சரித்திரமே ஒரு உதாரணம்

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்  .அவர் மடத்தில் சமைத்த உணவைத் தவிர வேறு எங்கும் உணவு உண்ணக்கூடாது என்ற நியமம் வரும் வரையில் அவர் வெளியில் பிட்சைக் கேட்டு உண்பதே வழக்கம்.இதற்கு மாதுகரம் என்று பெயர்.

இந்த மாதுகரம், ஒரு திருவிழாவைப் போல நடக்கும்.நூற்றுக் கணக்கான பக்தர்கள் உடன் வருவர்.அப்படி ஒருமுறை ஸ்ரீராமானுஜர் சென்ற போது ஒரு பெண்மணி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

அப்பெண்மணி கொங்கு தேசத்திலிருந்து வந்தவள்.தனது தேசத்தில் நீண்ட நாள் மழை இல்லாததால், அதை ஸ்ரீரங்கநாதரிடம் முறையிட ஸ்ரீரங்கம் வந்திருந்தாள்.வந்த இடத்தில், ஸ்ரீராமானுஜரை வீதி என்றும் பாராது, அதிகாரிகள், செல்வந்தர்கள், வயதானோர் எல்லாம் தண்டனிடும் காட்சியைப் பார்த்தாள்.அதனால், அவரை தடுத்து நிறுத்தினாள்

:"மற்றவர்கள் தண்டனிட்டு சேவிக்கும் அளவிற்கு தங்களிடம் இருப்பது என்ன?" என்றாள்

"என்னிடம் இருக்கும் ஒன்று மற்றவர்களி டம்  இல்லை.மற்றவர்களிடம் இருக்கும் ஒன்று என்னிடம் இல்லை" என்றார் ஸ்ரீராமானுஜர்

"அந்த ஒன்றை எனக்கு உபதேசிக்க வேண்டும்"

அப்பெண்ணை மடத்திற்கு வருமாறு பணித்தார்.அங்கு அவளுக்கு த்வயம் என்னும் மந்திரத்தை உபதேசித்து பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து வைணவப் பெண்ணாக மாற்றினார்.

நெடுநாட்கள் கழித்து ஊருக்குக் கிளம்ப நினைத்தாள் அப்பெண்.அப்போது அவர் உபதேசித்த த்வய மந்திரம் அவளுக்கு மறந்து போனது.அதை அவள் ஸ்ரீராமானுஜரிடம் கூறினாள்.அவரும் அவளுக்கு த்வயத்தை மீண்டும் உபதேசித்தார்.அவள் கிளம்பும் போது தனது திருவடிகளை (பாதுகைகளை) அவளுக்கு அளித்தார்

இதெல்லாம் நடந்து பல ஆண்டுகள் கழித்து, ஸ்ரீராமானுஜர் கொங்கு தேசம் வந்தார்.அப்போது அந்த அம்மையார் சமைத்த உணவை ஒரு சிறு அறைக்குள் எடுத்துச் சென்றுவிட்டு வருவதை அவரின் சீடர்கள் பார்த்தனர்.அறையினுள் சென்று பார்த்த போது,ஸ்ரீராமானுஜர் அவளுக்கு அளித்த பாதுகைகள் வைக்கப்பட்டு, அவற்றிற்கு அவள் நைவேத்தியம் செய்து விட்டு வருவதைப் பார்த்தனர்

அப்படிப்பட்ட கொங்கு பிராட்டியைப் போல திருவடிகளை தான் பெறவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Tuesday, October 18, 2016

அனுப்பிவையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே - 39

தசரதருக்கு புத்திரப் பாசம் அதிகம்.

ஆகவேதான் அரக்கர்களை வதம் செய்ய ஸ்ரீராமரை அனுப்ப மறுக்கிறார்

விசுவாமித்திரரும் கோபம் கொள்கிறார்

இந்நேரத்தில் வசிஷ்டருக்கு நடக்கப் போகும் சம்பவங்கள் ஞானதிருஷ்டியால் தெரிந்தது

ஸ்ரீராமருக்கும், சீதா பிராட்டியாருக்கும் திருமணம் நடக்க வேண்டியது கட்டாயமல்லவா?ஆகவே அவர் தசரதரைப் பார்த்து, "மன்னா!  உமது புதல்வனுக்கு நல்லது ஒன்று நடந்தால் அதை நீ த்டுப்பாயா?" என்கிறார்.

அத்துடன் இல்லாது, "வெள்ளம் பெருகு, நாடு நலம் பெறுவது போல, உன் புதல்வர்களால் நிறைய நல்ல செயல்கள் நடக்கப் போகின்றன.அதனை தடுத்து விடாதீர்.உமது புதல்வனை அவருடன் அனுப்புக" என்றார்

தசரதரும் மனம் மாறி, தன் புதல்வர்கள் ஸ்ரீராமனையும், லட்சுமணனையும் விசுவாமித்திரருடன் அனுப்பி வைத்தார்

அன்று வசிஷ்டர் சொன்னது போல "அனுப்பிவையும் " என்று சொல்லவில்லையே நான் என்கிறாள் அப்பெண்.

அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே - 38

திருப்பாணர் தன் யாழை எடுத்து சுருதி சேர்த்து அரங்கனை சேவித்து காவிரிக்கரையில் பாக்களைப் பாடும் வழக்கம் கொண்டவர்.இவர் ஏன்..கோயில் அருகில் பாடாது காவிரிக்கரையில் இருந்து பாடுகிறார்?

அவர் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்

 ஒருநாள் அவர் அப்படிப் பாடிக்கொண்டிருக்கையில், திருவரங்கன் கோயில் லோகசாரங்கர் என்ற ஜீயர் காவிரியில் குளிக்க வந்தார்.ஜீயருடன் வந்த பக்தர்கள் பாணரை விலகி இருக்கச் சொன்னார்கள்

ஜீயரும், ஏதாவது செய்து அவனை அப்புறப்படுத்துங்கள் என்றார்

தொண்டர்கள் பாணரை கல்லால் அடிக்க ஆரம்பித்தனர்.மெய்மறந்து பாடிக்கொண்டிருந்த பாணர் கலல்டியால் ஏற்பட்ட காயங்களால் சுய நினைவு அடைந்தார்.அனைவரிடமும், தன்னால் ஏற்பட்ட தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விலகினார்

தன் பக்தன்மேனியில் கல்லடிப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டத்தால், ஸ்ரீரங்கரும் தனது அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தார்

இதனைக் கண்ட ஜீயர் உடல் நடுங்கியது.அரங்கன் மேனியில் இரத்தம் வடிந்த காரணம் தெரியாது, மன சஞ்சலத்துடன் ஜீயர் உறங்கப்போனார்

அவர் கனவில் பெருமாள் தோன்றி'என் பக்தனைக் கல்லால் அடித்து  பாவம் செய்து விட்டீர்.நாளை அந்தத் திருப்பாணரை உமது தோளில் சுமந்து என் சந்நிதிக்கு வாரும்.அப்போதுதான் குருதி நிற்கும்" என்றார்

லோகசாரங்கர்..தோள்களில் பாணரைச் சுமந்து சந்நிதி வந்தார்.பகதர்கள் கூட்டம் கூடியது.அரங்கன் மேனி குருதியும் நின்றது

திருப்பாணர், எம்பெருமானின் தரிசனம் கண்டு மெய்மறந்து சேவித்தார்.அமலனாதிபிரான் என்று தொடங்கி பத்து பாசுரங்களை மங்களசாசனம் செய்தார்

பாசுரங்கள் முடிந்ததும் அரங்கன், திருப்பாணரை தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டார்

அபப்டி திருப்பாணரைப் போலே, பண்ணிசைத்து அவன் மேனியுடன் கலந்தேனோ நான் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Monday, October 17, 2016

அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே - 37

கஜேந்திரதாசன் என்று அழைக்கப்பட்டவர் திருக்கச்சி நம்பிகள்.காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமான் அவரிடம் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர்

பெருமாளுக்கு சரீரம் மூலம் செய்யும் கைங்கர்யமே பெரிய கைங்கர்யமாகும்  என வாழ்ந்து வருபவர்.அவரிடம் ஸ்ரீராமானுஜர் சில சந்தெகங்களைக் கேட்டார்.திருக்கச்சி மயிலிறகால் செய்யப்பட்ட அந்த பெரிய ஆலவட்டத்தைத் தூண் மீது சாய்த்துவிட்டு வந்தார்

அவர் ஸ்ரீராமானுஜரைப் பார்த்து, "நான் முதலில் ஸ்ரீரங்கப் பெருமாளுக்கு ஆலவட்டம் வீசச் சென்றேன்.அவரொ, தான் காவிரிக்கரையில் இருப்பதாகவும், திருமலை வெங்கடநாதனுக்கு ஆலவட்டம் வீசச்சொன்னார்.ஆனால், அந்த திருவேங்கடநாதனோ, தான் மலைகள் சுழ்ந்த இடத்தில் இருப்பதாகவும், யாகக்குண்டங்கள் நிரைந்த காஞ்சியில் இருக்கும் எம்பெருமானுக்கு ஆலவட்டம் வீசச் சொன்னார்கள்.காஞ்சியில் எனது கைங்கர்யம் தொடருகிறது.அதனாலேயே, எம்பெருமானிடம் பேசும் பாக்கியம் கிடைத்தது" என்றார்.

ஸ்ரீராமானுஜர், "என்னிடம் ஆறு கேள்விகள் உள்ளன.அதற்கான பதிலை, பெருமாளிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றார்.

அவரது ஆறு கேள்விகள்

1) பரம்பொருள் என்பவர் யார்
2)நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய உண்மை தத்துவம் எது?
3)பரமனை அடைவடஹ்ற்கான உபாயம் எது?
4) மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா/
5)மோட்சம் பெறுவது எப்போது
6)குருவாக யாரை ஏற்பது?

ஸ்ரீராமானுஜர் எழுப்பிய சந்தேகங்களை திருக்கச்சியார் பெருமாளிடம் கேட்க, அவர் உரைத்த பதில்கள் .

விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை தந்துவங்களாயின

1)பரம்பொருள் நாமே! அனைவரும் அடைய வேண்டிய பரம்பொருள் நாமே

2)பேதமை தர்சனம்.எதுவும் மாயைஅல்ல.எல்லாமே உண்மை.விசிஷ்டாத்வைதமாகிய ஆத்மா இறைவன்.இதுபற்றிய வேறுபாடே தத்துவம்

3)உபாயம் ப்ரபத்தியே..அகங்காரத்தை விடுத்து இறைவனை சரணடைவதே உபாயம்.அதாவது பிரபத்தி எனும் சரணாகதியே உபாயம்

4)அந்திமஸ்மிருதி வேண்டாம்.இறக்கும் தறுவாயில் மட்டும் இறைவனை எண்ணினால் போதாது.உடல் நன்றாக திறனோடு இருக்கையிலேயெ இறைவனை நினைத்தால் போதுமப்படியிருந்தால் இறக்கும் நேரத்தில் இறைவனுக்கு நம் சிந்த்னை வரும்

5)சரீரம் விடுகையில்மோட்சம் சரணம்.அடைந்தவருக்கு உடலை விடுகையில் மோட்சம்

6)பெரிய நம்பிகளை குருவாகப் பற்றுவது

(இப்படி ஒரு பதிலைத்தான் ராமானுஜம் எதிர்பார்த்தார் )

இப்படி எம்பெருமானிடம் நேரில் பேசும் பாக்கியத்தை நான் பெற்றேனோ திருக்கச்சியார் போலே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Sunday, October 16, 2016

இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார்ப் போலே - 36

தன் பெயர், குலம், கற்ற வேதம், அரங்கன் ஆகிய அனைத்தையும் மறந்து தாசியின் வீடே கதியாகிக் கிடந்தார் தொண்டரடிப் பொடியார்

கண்ணன் கம்சனைக் காண வந்த போது மாலாக்காரர் (மாலை வியாபாரம் செய்பவர்) ஒருவர் கண்ணனுக்கு மாலை அணிவித்து அழகு பார்த்தாராம்.அவரது உண்மை அன்பை ஏற்ற கண்னன் அவருக்கு முக்தியளித்தாராம்

அதேபோன்று அரங்கன் கோயில் அருகில் நந்தவனம் அமைத்து, தினமும் துளசிமாலையக் கட்டி அரங்கனுக்குச்  சூடி அழகுப்பார்த்தவர் விப்ரனாராயணன் எனும் அந்தணர் (இவரே தொண்டரடிப்பொடியார்)

அபப்டிப்பட்டவர் புலனடக்கம் இழந்து தாசிவீடே எனக் கிடந்தார்.அனைத்துப் பொருளையும் இழந்தார்.

"காசிருந்தால் வா...இல்லையேல் வெளியே போ" என தாசி தேவதேவி அவரை வெளியில் துரத்தி கதவை அடைத்தாள்

அவள் வீட்டுக் கதவு தட்டப்பட்டது."பணமிருந்தால் வா...என்று சொன்னேனே!" எங்க் கதவைத் திறந்தவள், வாயிலில் நிற்பவரைப் பார்த்து, "யார் நீ?" என்றாள்

"நான் விப்ரநாராயணனுக்கு வேண்டற்பட்டவன்.அவரிடம் காசில்லை.ஆதலால் எனக்குச் சொந்தமான பொன்வட்டியைக் கொடுக்கிறேன்.அவனை அனுமதி" என்றார்

தெவதேவி பொன்வட்டியை வாங்கிக்கொண்டாள்.விப்ரநாராயணனுக்கு கதவுத் திறந்தது

மறுநாள் கோயில் திறக்கப்பட்டது.பெருமாலின் வட்டியைக் காணவில்லை.கோயிலில் இருந்த கடைநிலை ஊழியர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவனை அடித்துச் சிறையில் அடைத்தனர்
 அந்த கடைநிலை ஊழியரின் காதலி தேவதேவியின் சேடிப் பெண்.அவல் வந்து, விப்ரநாராயணனின் நண்பர் ஒருவர் பொன்வட்டியைக் கொடுத்ததைக் கூறினாள்.

விப்ரநாராயணன்  சிறையெடுக்கப்பட்டார்.

தன் தவறை உணர்ந்த தொடரடிப்பொடியாழ்வார்..தன் குலப்பெருமையை இழந்து, நாயினும் கீழானேனே என வருந்தினார்.திருமாலை என்ற 45 பாசுரங்கள் பாடினார்

மன்னனின் கனவில் பெருமாள் தோன்றி வட்டியைக் கொடுத்தது தானே என்று சொல்லி விப்ரநாராயணரை அகம், புறம் இருச் சிறைகளிலிருந்தும் விடிவித்தார்

ஒருமாலை அவர் அவர் அரங்கனுக்குக் கட்டும் துளசிமாலை
இரண்டாவது மாலை அவர் மீது பாடப்பட்ட 45 பாசுரங்கள் அடங்கிய திருமாலை

அப்படி இருமாலைகளை நான் எம்பெருமானுக்கு ஈந்தேனா தொண்டரடியார்ப் போல ..(இல்லையே .) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Saturday, October 15, 2016

இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே - 35

ஊர்மக்கள் புரம் பேசுவதைக் கேட்டு ஸ்ரீராமன் . லட்சுமணனிடம், சீதாப்பிராட்டியைக் காட்டில் கொண்டு சென்று விடப் பணித்தார்.

லட்சுமணனும், தேரில் தேரில் பிராட்டியை ஏற்றிக்கொண்டு, காட்டின் மையப் பகுதிக்கு வந்தான்.

சீதையை இறக்கிவிட்டு விட்டு தலை குனிந்து நின்றான்.

"பெண்களுக்கு கணவந்தான் தெய்வம்.அவர் கட்டளைக்கு அடி பணிகிறேன்.ஸ்ரீராமனின், கர்ப்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்''என்பதையும் அவரிடம் சொல்" என்கிறாள் பிராட்டி

வால்மீகி முனிவர் சீதைக்கு அடக்கலம் கொடுத்தார்.சீதையும் அவரது ஆசிரமத்தில் அழகான இரு குழந்தைகளைப் பெற்றாள்

அக்குழந்தைகளை கையில் வாங்கிக் கொண்டார் வால்மீகி.தன் தர்ப்பைப்புல்லின் மேல் பாகமான குசம் என்று ஒரு குழ்ந்தைக்கும், கீழ் பாகமான இலவம் என ஒரு குழந்தைக்கும் பெயரிட்டார்.

இராமகாதையை அவர்களுக்குச் சொல்லி ஊரெல்லாம் அதை பாட வைத்தார்.

ஸ்ரீராமன் அசுவமேத யாகம் செய்தார்.பரதன் ஒருநாள் இரு சிறுவர்களையும் அவரிடம் அழைத்து வந்தான்.அவர்கள் பாடிய இராமகாதையை ஸ்ரீராமனேக் கேட்டார்.

இதற்குக் காரணமானவர் வால்மீகி.இரு குழ்ந்தைகளை வளர்க்கும் பேறினைப் பெற்றவர்.அப்படிப்பட்ட பேறு எனக்குக் கிடைக்கவில்லையே

"இரு மன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்  

Friday, October 14, 2016

இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே! - 34

திருக்கோவிலூர்...

ஒருநாள்...இரவு நேரம்..பெரும் மழை..

எம்பெருமானை சேவிக்க வந்த பொய்கையாழ்வார் மழைக்கு ஒதுங்க எண்ணினார்.ஒரு மாளிகை திறந்திருந்தது.அம்மாளிகையின் கதவைத் தட்டினார்

மிருகண்டு முனிவர் வந்தார்..

"மழை நிற்கும் வரை இங்கு தங்க இடம் உண்டா?" என்றார் பொய்கையாழ்வார்

இந்த இடைக்கழிதான் உண்டு என்றபடியே ஒரு ரேழியைக் காட்டிவிட்டு போனார்

சின்ன ரேழி..வெளிச்சமும் இல்லை.ஒருவர் மட்டுமே படுக்க முடியும்.சரி , அங்கேயே டஹ்ங்கிவிட்டு, காலையில் பெருமாளை சேவிக்கலாம் என எண்ணினார்

மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை.பொய்கையாழ்வார் போய்க் கதவைத் திறந்தார்.இப்போது பூதத்தாழ்வார்

"மழைக்கு த்ங்க இடம் கிடைக்குமா"?

"சின்ன இடைக்கழி உள்ளது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.வாருங்கள்"

பூதத்தாழ்வார் உள்ளே போனார். மீண்டும் கதவு தட்டப்பட்டது.

பூதத்தாழ்வார் போய்க் கதவைத் திறந்தார்.வெளியே பேயாழ்வார்

"வெளியே மழை.தங்க இடம் உண்டா?'

"ஒரு இடைக்கழி இருக்கிறது.ஒருவர் படுக்கலாம்.இருவர் இருக்கலாம்.மூவர் நிற்கலாம்.வாருங்கள்"

ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இயலாமல் இருட்டு

அதே சமயத்தில், சந்நிதியில் வந்து நம்மைப் பாடி மங்களாசாசனம் செய்வார்கள் என எதிர்பார்த்த திருவிக்கிரமன், அவர்களது பாசுரங்களைக் கேட்க, அவர்கள் புலன்களுக்கு அகப்படாமல்  இடைக்கழியில் வந்து நெருங்கி நின்றார் (இதனாலேயே..இங்கு பெருமாளுக்கு நெருக்கி நின்ற பெருமாள் என்று பெயர்)

திடீரென எண் நெருகக்ம்.தங்கியுள்ள நான்காவது நபர் யார்? எனத் தெரியாது பொய்கையாழ்வாரும்,பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற..நெடிய உருவுடன்  உலகளந்த பெருமாள்..திருவிக்கிரமன் பேயாழ்வார் முன் எழுந்தருளினார்

பின், அவர்கள் ஒவ்வொரு திவ்வியத்தலங்களுக்கும் சென்று ஆளுக்கு நூறு பாசுரம் மூலம் 300 திருவந்திகளைப் பாடி..முதலாழ்வார்கள் என்று சிறப்புப் பெற்றனர்

அபப்டிப்படட் எம்பெருமானை இடைக்கழியில் இருட்டில் கண்ட பெருமை எனக்கு இல்லையே என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, October 13, 2016

இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே - 33

ஸ்ரீநாராயணர் முன்னிலையில் சாதி பேதம் கூடாது என உரைத்தது வைஷ்ணவம்.ஸ்ரீராமாநுஜர் அதற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர்.

இனி நம்பாடுவான் கதை

108 திவ்விய தேசங்களில் திருக்குறுங்குடியும் ஒன்று.மகேந்திர மலை என்ற மலையை அடுத்து அமைந்துள்ள இவ்விடத்தில் எம்பெருமான், நின்ற நம்பி,இருந்த நம்பி,கிடந்த நம்பி,திருப்பாற்கடல் நம்பி,மலைமேல் நம்பி என ஐந்து விதமாக எழுந்தருளியுள்ளார்.வராக அவதாரம் எடுத்த பெருமாள் தன் உடலைக் குறுக்கிக் கொண்டதால் இத்தலத்திற்கு இப்பெயர்


நம்பாடுவான் ஒரு வைணவ பக்தர்.பாணர் குலத்தில் பிறந்தவர்.தன்னுடைய குலத்தின் காரணமாக கோயிலின் வாயிலில் நின்று பாடிவிட்டு செல்வது அவரது வழக்கம்.அவரது பண்ணில் மயங்கி பெருமாளே அவரை நம்பாடுவான் என அழைக்க, அதுவே நிரந்தரமானது

ஒருநாள் அவர் பண்ணிசைக்க சந்நிதி வாசல் செல்கையில், ஒரு ராட்சசன் தடுத்து;'உன்னை உணவாக உண்ணப் போகிறேன்" என்றது

"இன்று ஏகாதசி.எம்பெருமானின் முன் பாடிவிட்டு , என் ஏகாதசி விரதத்தையும் முடித்துவிட்டு வருகிறேன்.அதுவரை பொறுத்திரு" என்றார்

ராட்சசனும் அவர் சொன்ன வாக்குறுதியை நம்பி அவரை அனுப்பியது

சந்நிதி அடைந்து, வழக்கம் போல, சந்நிதியிலிருந்து விலகிப் பாடினார் நம்பாடுவான்,

ஆனால், எம்பெருமான், கொடி மரம், கருடன் ஆகியவற்றை விலகி இருக்கச் சொல்லி அங்கிருந்த வண்ணமே சேவை சாதித்தார்

பின்னர், கொடுத்த வாக்கைக் காக்க ராட்சசனிடம் சென்றார்.வழியில் ஒரு முதியவர், "நீ போகாதே! தன் உயிரைக் காத்துக் கொள்ள வாக்குத் தவறினால் தவறில்லை" என்றார்

ஆனால், கொடுத்த வாக்கைக் காப்பதுதான் ஸ்ரீவைஷ்ணவின் த்ருமம்" என் நம்பாடுவான்  மறுத்துவிட்டார்

திரும்பி வாக்குத் தவறாது வந்தவரைப் பார்த்த ராட்சசன். நான் உன்னை உண்ணாதிருக்க ஒரு நிபந்தனை.நீ பாடிய பாடல்களின் பலனை எனக்கு அளித்திடு" என்றான்

ஆனால் நம்பாடுவான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனாலும் ராட்சசன் சொன்னான் "நான் முற்பிறவியில் ஒரு அந்தணன்.எனக்கு சாபவொமோசனம் வேண்டுமாயின்..நீ எம்பெருமான் முன் பாடிய கைசிக பண்ணின் பலனையாவது எனக்குக் கொடு" என்றான்

"சரி" என இசைந்தார் நம்பாடுவான்.இன்றும் கைசிக ஏகாதசி (கார்த்திகை மாதம்) அக்கோயில் விழா கொண்டாடுகிறது

அறநெறி பிறழாது நம்பாடுவான், ராட்சசன் இளைப்பின் தாகத்தை தீர்த்ததால்."இளைப்புவிடாய் தீர்த்தேனொ நம்பாடுவான் போலே" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

கொன்டு திரிந்தேனோ திருவடியைப் போலே - 32

வைஷ்ணவத்தில் இரு திருவடிகள்

பெரிய திருவடிகள் - கருடாழ்வார்.
இரண்டாவது திருவடி - ஹனுமான்

கருடன் தன் தாயான வினதையின் அடிமைத்தனத்தை நீக்கும் பொருட்டு அமிர்தகலசத்தை  தேவர்களிடம் இருந்து கவர்ந்து  வரச் சென்று தேவர்களுடன் போரிட்டு இறுதியில் மகாவிஷ்ணுவின் ஆணைப்படி பணிந்து அவர்க்கு வாகனமாகிறார்

பெரியாழ்வார் கூடல் மாநகர் மன்னன் சந்தேகத்தைத்  தீர்த்து, பொற்கிழியைப் பெற்றுக் கொண்டு யானை மீதேறி மதுரை வீதிகளில் , , யானை மீதேறி பவனி வரும் போது, எம்பெருமான் தேவி சகிதம் கருட வாகனத்தில் காட்சியளித்தார்

ஆழ்வார்திருநகரியில் கருடனுக்கென தனி உற்சவமே உண்டு.இங்குக் கோவில் வெளிச்சுவரில் அமர்ந்திருக்கும் கருடன் விஷேசமானவன்

இந்த கருடனுக்கு அருள்பட்சிராஜர் என்ற பெயரும் உண்டு.ஒருமுறை இஸ்லாமியர்கள் படையெடுப்பின் காரணமாக திருவுருவச் சிலைகளுக்கு, பாதுகாப்பின்மை ஏற்பட , நம்மாழ்வாரின் காய்ச்சிய திருமேனியை எடுத்துக் கொண்டு கோழிக்கோட்டில் மறைத்து வைத்தனர்

மீண்டும் அமைதித் திரும்பியதும், ஒளித்து வைத்த சிலையைத் தெடிச் செல்கையில். ஒளித்த இடம் மறந்து விடுகிறது.அப்போது கருடன் பறந்து வந்து.இடத்தை அடையாளம் சொன்னது,நம்மாழ்வார் சிலை மீண்டும் சந்நிதியில் எழுந்தருளச் செய்தனர்

கருடாழ்வார் போல எம்பெருமானை சுமந்து செல்லும் பாக்கியம் தனக்கு இல்லையே என்பதையே, திருக்கோளூர்ப் பெண் :கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே என சொல்கிறாள்

Wednesday, October 12, 2016

குடை முதலானதானேனோ அனந்தாழ்வான் போலே - 31

காச்யபர் என்ற மகரிஷிக்கு கத்ரு,வினதை என இரு மனைவிகள்.இவர்கள் காச்யபரிடம் புத்திரபாக்கியம் வேண்டும் என வேண்டினர்.

கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என வரம் கேட்டாள்

வினதை தனக்கு அறிவுடை இரண்டு புத்திரர்களைக் கேட்டாள்.அவளுக்கு அருணனும், கருடனும் பிறக்கின்றனர்.சூரியனின் தேரோட்டியாகிறான் அருணன்.

கத்ருவின் ஆயிரம் புதல்வர்களும் ஆயிரம் அரவங்களாக பிறக்கின்றனர்.அவர்களுள் மூத்தவன் ஆதிசேஷன்

ஆதிசேஷன், தன் சகோதரர்கள் எப்போதும் பொறாமைக் குணம் கொண்டவர்களாக இருப்பதாலும், கருடனுடன் எப்போதும் சண்டையிடுபவர்களாகவும் இருப்பது கண்டு மனவேதனையடைந்தார்.

பிரம்மாவிடம், "என் மனம் எப்போதும் தர்மசிந்தனையில் இருக்க வேண்டும்" என வேண்டினார்

அதற்கு பிரம்மா, எப்போதும் அதன் மையப்புள்ளியிலிருந்து அசைந்த வண்ணம் இருக்கும் பூமியைஅதன் அச்சிலிருந்துஅசையாது உனது ஆயிரம் தலைகளால் பிடித்துக் கொள்' என்கிறார்.

இந்த பூவுலகை ஆதிசேஷன் தலையில் தாங்கி வருவதாக மகாபாரதம் கூறுகிறது

அப்படிப்பட்ட ஆதிசேஷனை எம்பெருமான் தன் படுக்கையாக்கிக் கொண்டார்.

அந்த ஆதிசேஷன் பிராட்டியுடன் இருக்கும் எம்பெருமானுக்குக் குடையாகவும்,சிங்காதனமாகவும், நிற்கும்போது காலணியாகவும், அவர் பள்ளிக் கொண்டபோது பாற்கடலில் பாயாகவும்,எப்போதும் ஒளி மிகுந்த விளக்காகவும், பரிவட்டமாகவும் அணைத்துக் கொள்ளும் போது தலையணையாகவும் விளங்குவதாகப் பாடல் உண்டு

ஸ்ரீராமானுஜரின் சீடர்களில் ஒருவர் பட்டர்.அவருக்கு சர்வதந்திரஸ்வதந்திரம்
என்னும் சிறப்புப் பெயர் உண்டு.இது பிடிக்காத ஒருவர் அவரை சோதிக்க எண்ணி ஒரு குடத்தினுள் பாம்பு ஒன்றைப் போட்டு அதன் வாயை இறுக்க மூடி அவரிடம் கொடுத்து, "உள்ளே என்ன இருக்கிறது" எனக் கேட்டார்

கையில் குடத்தை வாங்கிய பட்டர்..குடத்தினுள் பாம்பு அசைவதை உணர்ந்தார்."இது எம்பெருமானின் குடை" என்றார்

"பட்டரே! உள்ளே இருப்பது பாம்பு.உங்கள் எண்ணம் தவறு" என்றார் அவர்

அதற்கு பட்டர், "இந்த பாம்புதான் எம்பெருமானுக்கு குடையாக இருப்பதாக பொய்கையாழ்வார் பாடியுள்ளார்' என பதிலுரைக்கிறார்
அந்த குடை முதலானது போல அனந்தாழ்வார் விளங்கினாரே..நான் அப்படியில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்.

Tuesday, October 11, 2016

கடித்து பெற்றேனோ திருமங்கையாழ்வாரப் போலே - 30

சிறுவாலி என்ற நாட்டின் குறுநில மன்னராக விளங்கியவர் பரகாலர் என்னும் திருமங்கையாழ்வார்.இவர் குமுதவல்லியின் அழகில் மயங்கி முறையாகப் பெண் கேட்டுச் செல்கிறார்

ஆனால், குமுதவல்லியோ, வைஷ்ணவரைத் தவிர வேறொருவரை மணக்க மாட்டேன் என்கிறாள்.அதனால் பரகாலர், பஞ்சசமஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீவைஷ்ணவர் ஆகிறார்.

இப்போது, குமுதவல்லி, அவர் 1008 வைஷ்ணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனையை  விதிக்கிறாள்.அதையும் அவர் நிறைவேற்றுகிறார்

குமுதவல்லி சொன்னதற்காக, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், பெருமாள் கோயில்கள் திருப்பணிகளுக்கும் தன் செவத்தை செலவிடுகிறார்.அதனால், தன்னை குறுநிலமன்னனாக ஆக்கிய சோழ அரசருக்கு அவரால் கப்பம் செலுத்த முடியவில்லை.

அதனால் கைதாகிறார்.

அன்றிரவு பெருமாள் அவர் கனவில் தோன்றி, வேகவதி நதிக்கரையில் புதையல் இருக்கும் ரகசியத்தைக் கூறுகிறார்.சோழ மன்னன் அனுமதியுடன், சிறையில்   இருந்து வருபவர்..புதையலைக் கண்டெடுக்கிறார்

அதில் ஒருபகுதியை கப்பம் கட்டிவிட்டதால் , மீதத்தை பழையபடி செலவிடுகிறார்

மீண்டும் வறுமை

பரகாலராகிய திருமங்கையாழ்வார் இப்போது புது முடிவுக்கு வருகிறார்.
களவு புரிந்து கைங்கர்யம் செய்ய வேண்டும் என்பதே அது

நா ன் கு பேருடன் கூட்டு சேர்ந்து வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறார்.செல்வந்தர்கள் தாக்கப் படுகின்றனர்.பொருள்கள் களவாடப்பட்டு எம்பெருமானின் கைங்கர்யத்திற்கு செலவிடப் படுகிறது.

ஒருநாள் பெருமாள், அந்தண வேடமிட்டு லட்சுமியுடன் ஒரு திருமண கோஷ்டி போல தன் பரிவாரங்களுடன் கிளம்பினார்

அவர்களைப் பார்த்ததும் திருமங்கையாழ்வார் "நில்" என்றார்"நகைகள்   எல்லாவற்றையும் கழட்டுங்கள்" என்றார்

பெருமாளும் பயந்தவர் போல நகைகள் அனைத்தையும் கழட்டினார்.லட்சுமியும் கழட்டினார்.கடைசியில், பிராட்டியின் மெட்டி மட்டுமே இருந்தது.

அதைக்கூட விட்டு வைக்க மனமில்லாத திருமங்கையாழ்வார்..அதையும் கழட்டுங்கள் என்றார்.ஆனால் அதை அவரால் கழட்ட முடியவில்லை.

உடனே ஆழ்வார் மண்டியிட்டு கழட்டப் பார்த்தார்.இயலவில்லை.பின்னர், தன் பற்களால் கடித்து கழற்றினார்

எம்பெருமான் சிரித்துக் கொண்டே "நீர் நமது கலியனோ" என்றார்

கழற்றிய ஆபரணங்களை ஒரு பட்டுத் துணியில் மூட்டையாய்க் கட்டி தூக்க முயன்றார் ஆழ்வார்.தூக்க முடியாமல் கனத்தது.

உடன் பெருமாள் "என்னிடம் ஒரு மந்திர சக்தி உள்ளது.அதைச் சொன்னால் எளிதாகத் தூக்க முடியும்" என்றார்.அருகில் இருந்த ஆலமரத்தடியில் அவரை அமர்த்தி, திருமந்திரத்தை ஓதினார்

திருமங்கையாழ்வார் கதறினார்."கண்டுகொண்டேன் நாராயணா என்ற நாமம்" என கூத்தாடினார்

பின்னர் தன் அனுபவங்களை

ஆசு, சித்திரம்,மதுரம்,விஸ்தாரம் என நான்குவகைக் கவிகளாகப்    பாடினார்.

நான்கு வேதங்களின் உட்பொருளை நான்கு பிரபந்தங்களாகப் பாடினார்.

சிக்க்ஷை, வியாகரணம்,கல்பம்,நிருத்தம்,ஜோதிசம்,சந்தஸ்  என ஆறு பிரிவுகளின் உட்பிரிவை பெரிய திருமொழி,திருக்குறுதாண்டகம்,திருநெடுந்தாண்டகம்,திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடலில் பாடி வைத்தார்

நாலாயிர திவ்வியபிரபந்தத்தில் அதிக பாசுரங்களை பாடி எம்பெருமான் சந்நிதிகளை மங்களாசாசனம் செய்தார்

மெட்டியை கல்லால் கடிக்கப்  போக ;எட்டெழுத்து மந்திரத்தை பகவானே ஆசானாக இருந்து உபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர் திருமங்கையாழ்வார்

அந்த பாக்கியத்தைப் பெறாத நான் இங்கிருந்தாலென்ன..போனாலென்ன என்கிறாள் திருல்லோளூர்ப் பெண்.
  

கர்மத்தால் பெற்றேனோ ஜனகனைப் போலே - 29

மிதிலை மன்னர் ஜனகர், பிரம்மஞானம் அடைய ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்தார்.தன் ஞான குருவைத் தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்.

ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிரம்ம ஞானிகளின் சபையினைக் கூட்டி, வாதம் நடத்தி, எவர் வாதத்தில் வெல்கின்றனரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் பசுக்களும் தருவதாக
  அறிவித்தார்.பல ஞானிகள் கூடினர்.யாக்ஞவல்கியரும் வருகிறார்

இச்சபையில் யார் தன்னை பிரம்மஞானி என்கிறாரோ அவரே ஆயிரம் பொற்காசுகளும்,பசுக்கலையும் ஓட்டிச் செல்லலாம்.

அதில், யாக்ஞவல்கியரே பிரம்ம ஞானி ஆகிறார். ஜனகர்  சீடராகச் சேர்ந்து  கர்மஞானம் கற்று மிகப்பெரிய ஞானியாக விளங்கினார்

ஜனகரின் ஞானத்தை வெளியுலகிற்கு அறிவிக்க பிரம்மஞானி விரும்பினார்.தனது மந்திர சக்தியால் மிதிலை நகரம் நெருப்புப் பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார்.சீடர்கள் அனைவரும்,..தங்கள் சொத்துகளை காத்துக் கொள்ள அலறி அடித்து ஓடினர்.ஆனால், ஜனகரோ அசையவில்லை.

பின்னர், ஓடிய சீடர்கள் அது மாயை என உணர்ந்து, வெட்கித் தலை குனிந்தனர்.

யாக்ஞவல்கியர், ஜனகரைப் பார்த்து,"ஜனகரே! அனைவரும் ஓடிய போதும் நீங்கள் ஏன் ஓடவில்லை?" என்றார்

"ஆத்மா அழிவற்றது.இடையில் வருபவை அழியக்கூடியவை.ஆத்மஞானம் அடைய வேண்டுமானால், எனது இப்போதய நிஷ்டையிலிருந்து நான் வெளியே வருவதாக இல்லை" என்றார் ஜனகர்

ஜனகர், ஒரு ராஜ்ஜியத்தின் மன்னனாய் இருந்த போதும் கர்மஞானத்தைக் கடைபிடித்து வந்தார்

அந்த ஜனகரைப் போல கர்மஞானத்தை நான் கடைபிடிக்கவில்லையே..நான் ஏன் இந்த ஊரிலிருக்க வேண்டும் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

Monday, October 10, 2016

அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே - 28

சஞ்சயன் ,திருதராஷ்டரின் ரத சாரதி,அவனது, அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக உயர்த்திவிட்டது.

அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.தனக்கு வியாச மகரிஷி அளித்த மந்திரசக்தியால் திருதராஷ்டிரரின் அரண்மனையில் அமர்ந்தபடி குருக்ஷேத்திரக் காட்சிகளை  நேரில் பார்ப்பது போன்று தன் மன்னனுக்குக் கூறினான்

கௌரவர்கள் சார்பில், பாண்டவர்களிடம் சஞ்சயன் தூது செல்கிறான்.அதற்குமுன் திருதராஷ்டிரரிடம், தர்ம, நியாயங்களைப் பேசுகிறான்.ஆனால், தூதுவனாகிவிட்டபடியால், பாண்டவர்களிடம் போர் புரியாததால் ஏற்படும் நன்மைகளைக் கூறுகிறான்.அதன்பின் கிருஷ்ணரைப் பார்க்கச் செல்கிறான்.

நேரம் கடந்துவிட்டபடியால், கிருஷ்ணர் தன் படுக்கையறையில் இருக்கிறார்.
சஞ்சயனை அங்கேயே வரச் சொல்கிறார்.அவன் உள்ளே நுழைந்த போது, கிருஷ்ணர், சத்யபாமாவின் மடியில் தலைவைத்து படுத்திருக்க, அவருடைய பாதங்களை தன் மடியில் தாங்கியபடி அர்ஜுனனின் பாதங்கள் திரௌபதியின் மடியில் இருக்கும் படி படுத்திருக்கிறார்கள் (சஞ்சயனை தன் படுக்கையறைவரை சஞ்சயனை அனுமதித்ததன் மூலம் தங்களுக்குள்ளே உள்ள நெருக்கத்தை உணர்த்தினார் கிருஷ்ணர்)

கிருஷ்ணர், போரைத் தவிர்த்தல் இயலாது எனக் கூறி சஞ்சயனைத் திருப்பி அனுப்புகிறார்

சஞ்சயன் தான் தூது சென்று கொண்டு வந்த செய்தியையும், கிருஷ்ணர் தன்னை படுக்கையறைவரை அனுமதித்ததையும் கூறுகிறான்

அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்ற சஞ்சயன் போல நான் இல்லையே..(நான் எதற்கு இவ்வூரில் இருக்க வேண்டும்) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே - 27

ஸ்ரீராமர், லட்சுமணன்,சீதா பிராட்டி ஆகியோர் தண்டகாரண்யத்தில் முனிவர்களின் ஆசிரமத்தில் தங்கி, அவர்களுக்கு துன்பம் ஏற்படாமல் பத்து ஆண்டுகள் காத்தனர்

பின், மூவரும் கிளம்பி அகஸ்தியரின் ஆசிரமம் வந்தனர்

அகஸ்தியர் ராமனை வரவேற்றார்.ராமனும் அவரை வணங்கி நின்றார்.பின், அகஸ்தியர் சிவபெருமாள் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த சிவதனுசுவை ராமருக்குக் கொடுத்தார்

தவிர்த்து ஒரு வாளினைக் கொடுத்தார்
உலகம் முழுதும் ஒரு தட்டில் வைத்துஅகஸ்தியர் கொடுத்ததை மற்றொரு தட்டில் வைத்தாலும்...அகஸ்தியர் கொடுத்ததற்கு இணையாகாதாம்...கம்பர் சொல்கிறார்

தவிர்த்து, ஒரு சமயம் சிவபெருமான் மேருவை வில்லாக வளைத்து,மகாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டு திரிபுரத்தை எரித்ததாகக் கூறப்படும் அம்பினையும் கொடுத்தார்

அப்படி அகஸ்தியரைப் போல எம்பெருமானுக்கு நான் ஆயுதங்களைக் கொடுக்கவில்லயே (எனக்கு இங்கு இருக்க என்ன தகுதி) என்கிறாள் அப்பெண்

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே - 26

கண்ணனும், சுதாமனும் (குசேலரின் பெயர்) சாந்திபனி முனிவரிடம் குருகுலவாசத்தில் கல்வி பயின்று வந்தனர்

ஒருநாள் முனிவர், காட்டிலிருந்து காய்கறிகளும்,அடுப்பெரிக்க சுள்ளியும் கொண்டுவரச் சொல்லி இருவரிடமும் பணித்தார்.இருவரும் அதற்காக காட்டிற்குள் போனபோது, பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது.அதனால் இரவு முழுதும் ஒரு பெரிய மரத்தடியில் தங்கினர்

மறுநாள், முனிவர் இவர்களைத் தேடி வந்த போது, இரவு முழுதும் அவர்கள் பட்ட சிரமங்களைக் கேட்டறிந்தார்.பின், "குருவிற்காக இவ்வளவு துன்பப்பட்ட நீங்கள் பிற்காலத்தில் வளத்துடன் வாழ்வீர்களாக" என ஆசிர்வதித்தார்

அதன்பின்னர்...

துவாரகையில் கம்சனை அழித்த பின்னர் கண்ணன் துவாரகையின் மன்னன் ஆனான்.குசேலரோ அளவிற்கு அதிகமாகக் குழந்தைகளைப் பெற்று வறுமையில் வாடினார்

ஆனால், ஆச்சார்யனின் வாக்கு பலிக்காமல் இருக்கக் கூடாது இல்லையா..

அதனால் , குசேலரின் மனைவியின் மனதிற்குள் புகுந்து கொண்டு கண்ணன் அவளை இப்படி பேச வைத்தான்..

"உங்கள் பால்ய சிநேகிதர், கண்ணன் இப்போது மன்னனாக இருக்கிறார்.அவரிடம் போய் நீங்கள் உதவிக் கேட்கக் கூடாதா"

குசேலரும், மனைவி கட்டிக்கொடுத்த சிறு அவல் மூட்டையுடன் கண்ணனைப் பார்க்க கிளம்பினார்

கண்ணன் , குசேலரிடம் பேசியபடியே, "அண்ணியார் என்ன கொடுத்து அனுப்பினார்?" என்று கேட்ட வாறே குசேலரின் மடியில் கட்டியிருந்த அவல் மூட்டையை உருவி, அதிலிருந்து ஒரு பிடி அவலை உண்டார்.

பின்னர் குசேலரின் வறுமை ஒழிந்தது என நாம் அறிவோம்

அப்படிப்பட்ட குசேலரைப் போல கண்ணனுக்கு நான் அவலையா கொடுத்தேன்..எனக்கு இங்கே தங்கி இருக்க என்ன தகுதி உள்ளது? என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Sunday, October 9, 2016

அனுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே - 25

ஸ்ரீராமர், ராவணனால் சிறையெடுக்கப்பட்ட சீதா பிராட்டியை லங்கைக்குச் சென்றால் தானே மீட்க முடியும், ராவணனையும் வதம் செய்ய முடியும்.

அதற்குக் கடலைக் கடந்தாக வேண்டும்.கடலைக் கடப்பதெனில் கடல் பாலம் ஒன்றை அமைத்திட வேண்டும்..

அதனால், கடலில் பாலம் கட்ட அவருக்கு வானரங்கள் உதவி செய்தன..பெரிய ..பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டன.பாறைகளைத்தான் போட்டனவேத் தவிர..பாறைகளுக்கிடையே..பூச்சு வேலை நடைபெறவில்லை

இதைப்பார்த்த அணில்கள், பெரும் படையுடன் கூடின.அவை நீரில் நனைந்து மணலில் புரண்டன.ஒட்டிக் கொண்ட மணலை பாறைகளின் இடுக்குகளில் உதிர்த்து விட்டுப் போயின...பூச்சு வேலைக்கு உதவுவது போல

பெரு யாத்திரைசெல்லும் பாறைகளைத் தூக்கிச் செல்லும் வானரங்களுடன், உடலில் மணலை ஒட்டிக் கொண்டு அணில்கள் அனுயாத்திரை செய்தன

அப்படி, அணில்களும், குரங்குகளும் ஸ்ரீராமருக்கு கைங்கர்யம் செய்ததைப் போல ஏதும் செய்யாது மரம் போன்ற மனதுடன் இருப்பதாக தொண்டரடிப் பொடி ஆழ்வார் வருந்தி பாடியுள்ளார்

அணில் செய்த அந்த கைங்கர்யம் மிகவும் சிறியது தான்.ஆனால்..அந்த அளவு கைங்கர்யம் செய்யும் பாக்கியம் கூட எனக்கு இல்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே - 24

ஒருத்தி மகனாய் பிறந்து, ஒருத்தி மகனாய் வளர்ந்தவன் கண்ணன்

கண்ணன் குழ்ந்தைப் பருவத்தை அனுபவித்தவள் யசோதை மட்டுமே!இந்த ஆதங்கம் தேவகிக்கு இருந்தது

கிருஷ்ணர் கம்சனை வதம் செய்து, பெற்றோரை சிறை மீட்ட போது, தேவகி கேட்டுக் கொண்டதால், தான் பிறந்த கணத்திலிருந்து, அந்தக் கணம் வரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கண்ணன் தாய்க்குக் கட்சிப் படுத்திக் காட்டினான்

அதேபோல ஆழ்வார்கள் தங்களை யசோதையாகப் பாவித்து கண்ணனைக் கொண்டாடினார்கள்

அந்த அளவிற்கு பெருமை வாய்ந்த யசோதையா நான் (இல்லையே) அதனால் நான் ஊரைவிட்டுச் செல்கிறேன் என்றாள் திருக்கோளூர்ப் பெண்

ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே - 23

வசுதேவர்- தேவகிக்கு கிருஷ்ணர் பிறந்தார்..சிறைச்சாலையில்

நான்கு புஜங்கள்..அவற்றுள் கதை,சங்கு,சக்கரம்,தாமரை மலர்,மார்பில் மருவாக ஸ்ரீவத்சம்,பட்டுப் பீதாம்பரம், கஹ்ழுத்தில் மாலை,வைர மணிமுடி,காதில் மின்னும் குண்டலங்கள்...கண்ணன் அலங்காரப் புருஷனாகக் காட்சியளித்தார்

வசுதேவர், குழ்ந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.இந்த அவதாரப் புருஷன் மூலம் கம்சன் வதம் நடக்கப் போகிறதே! ஆனால் குழந்தை இப்படி இருந்தால்...என பதபதைப்புடன் "நீயே மூவுலகை ரட்சிக்கும் நாராயணன் என நான் அறிவேன்,ஆனால், இந்தக் கோலம் உனக்கு இப்போது உசிதமல்ல.உனது தெய்வ அம்சங்களான நான்கு தோள்கள், சங்கு, சக்கரத்தை மறைத்துக் கொள்" என வேண்டினார்

கண்ணனும் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு மானிடக் குழந்தை ஆனார்

எம்பெருமானின் ஆழியை மறைத்துக் கொள்ளச் சொல்லி வசுதேவர் கேட்க கண்ணனும் கேட்டாரே! அந்த பாக்கியம் நான் செய்யவில்லையே! என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே -22

வசுதேவரின் மனைவி தேவகி. தேவகியின் சகோதரன் கம்சன்

வசுதேவர்- தேவகிக்கு பிறக்கப் போகும் எட்டாவது குழந்தை, கம்சனுக்கு எமன் ஆவான்

இதைக் கேள்விப்பட்ட கம்சன் அவர்களைக் கொல்ல முயற்சிக்கிறான்

அப்போது, தேவகி, தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை, அவனிடமே தந்து விடுவதாகக் கூற, கம்சனும், அவர்களை மதுரை சிறையில் அடைக்கிறான்

தேவகிக்குப் பிறந்த எட்டாவது குழ்ந்தை சங்கு சக்கரத்துடன் பிறக்க, தேவகியும் "நீ யார்?" என வினவுகிறாள்

"முன்பு ஒருமுறை சுவாயம்புவ மனுவின் காலத்தில், அதாவது கிருதயுகத்தில் கிருதபா- ப்ருச்னி புதல்வனாக நாராயணன் அவதரித்தார்.ஹரி என அவருக்குப் பெயர்.அந்தத் தம்பதிகள் இருவரும் அடுத்து வரும் இரு யுகங்களிலும் நாராயணனே தங்களுக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என வேண்டுகின்றனர்

எனவே, த்ரேதா யுகத்தில் அதிதி காச்யபர் தம்பதிக்கு வாமனனாகவும், அடுத்து துவாபரயுகத்தில் தேவகி, வசுதேவருக்கு கிருஷ்ணனாகவும் அவதரித்தார்

எம் பெருமான் தேவகியின் வயிற்றில் வந்து பிறப்பதற்கு தேவகி எவ்வளவு பேறு பெற்றிருக்க வேண்டும்...அப்படிப்பட்ட பேறு எனக்கு இல்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

தேவுமற்றறியேனோ மதுரகவியாரைப் போலே - 21

மதுரகவியாழ்வார் பிறந்த மண் திருக்கோளூர்

இவரது ஊருக்கு அருகாமையில் உள்ள திருக்குருகூரில் உள்ள நம்மாழ்வாரின் திண்மையை மதுரகவியார், அயோத்தி செல்கையில் அறிந்தார்.வானத்தில்  ஒளியைப் பார்த்து திருக்குருகூர்   வந்து அங்கு  நம்மாழ்வார் பதினாறு வருடங்களாக ஒரு புளிய மரத்தடியில்  அசைவின்றி இருப்பதை காண்கிறார்

இதை முன்னரே சொல்லியுள்ளோம்

வைணவத்தில் பகவத் சம்பந்தம் கிடைக்கிறதோ இல்லையோ ஆச்சார்ய சம்பந்தம் இருந்தால் போதும்.பகவத் சம்பந்தம் தானே வந்து சேரும்.ஆனால், ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் நேரடியாக பெருமாள் சம்பந்தம் எளிதானது அல்ல.வைணவத்தின் சூட்சமே அதில்தான் அடங்கியுள்ளது

மதுரகவியாழ்வார் அதற்கு ஒரு உதாரணம்

நம்மாழ்வாரின் மறைவிற்கு பின்னர், அவரது தங்கத்தினால் ஆன திருமேனியை ஊர் ஊராக எடுத்துச் சென்று அவர் புகழ் பாடி வந்தார்

நம்மாழ்வாரின் பாடல்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென மதுரையில் இருந்த தமிழ்ச் சங்கத்திற்கு பாடல்கள் எழுதப்பட்ட ஓலைகளை எடுத்துச் செல்கிறார்

"கண்ணன் கழவினை நண்ணும் மணமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாராணமே'

என்ற இருவரிப் பாடலை சங்கப்பலகை ஏற்றுக் கொண்டது.

ஆச்சாரியனைத் தவிர வேறு கடவுளை தான் அறிந்ததில்லை என்று தலையில் வைத்து கொண்டாடும் நதுரகவியாழ்வாரைப் போல தான் கொண்டாடவில்லையே என்கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Saturday, October 8, 2016

அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே - 20


ராமாயணகாலம் ரிஷிகளீன் காலம் எனலாம்

த்ரேதா யுகத்தில் எத்தனை ரிஷிகள் இருந்துள்ளனர்

விசுவாமித்திரர், வசிஷ்டர்,அத்திரி,கௌதமர்,அகத்தியர்...இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்

விசுவாமித்திரர் தசரதரிடம் ஒரு உதவி கேட்டு வந்தார்

அவரது சித்தாஸ்ரமத்தில் நடைபெறவுள்ள யாகத்துக்கு ஆறுநாட்கள் காவலாக ராமனை அனுப்புமாறு கேட்டார்

இதைக் கேட்ட தசரதருக்கு..அவர் தன் உயிரையேக் கேட்பது போல இருந்ததாம்

அப்போது விஸ்வாமித்திரர் சொன்னார்

"அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி
மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா"

(நான் ராமனை மஹாத்மா என உண்மையில் அறிகிறேன்.மஹாதேஜஸ்வியான விஷிஷ்டரும் கூட இதை அறிவார்.அனைவரும் இதை அறிவார்கள்)

அப்படி விஸ்வாமித்திரர் "அஹம்வேத்மி: என்று சொன்னது போல நான் சொல்லவில்லையே (பின் நான் ஏன் இங்கிருக்க வேண்டும்) என் கிறாள் அப்பெண்

அவன் தெய்வம் என்றேனோ மண்டோத்ரியைப் போலே- 19

ஒரு நிலையில் "இவள்தான் சீதையோ" என சந்தேகப்பட்டானாம் அனுமன், மண்டோதரியைப் பார்த்து

மண்டோதரியின் கற்பு நெறியை போற்றும் கம்பர், தன் புத்தரர்களான அக்ககுமரனும், இந்திரஜித்தும் மாண்டபோது கதறி அழுதாள் என் கிறார்,மகளிரின் அறிவுரைகளைக் கேட்கும் போக்கு மன்னர்களுக்கு இல்லையே என வருந்துகிறாளாம்.

ராவணன் இறந்த பின் ராமனின் வில் திறமையைப் பாராட்டுகிறாள்

ஆனால் வால்மீகி ராமாயணத்திலோ, ராவணன் இறந்து கிடப்பதைக் கண்டவள்..

:அன்புக் கணவரே! உங்கள் சக்தி அளப்பறியது.இருப்பினும் ராமனை உங்களால் எதிர்க்க முடியாது.மிகுந்த தவ வலிமையிலும், அதனால் பெற்ற வரத்தினாலும் நீங்கள் கர்வம் அடைந்துள்ளீர்கள்.அதனால் இப்புவிக்கு பாரமாகி விட்டீர்கள்.இந்த ராமன், மகாவிஷ்ணுவின் அவதார  ம் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டீர்கள்" எனக் கதறுகிறாள்

ஆக மண்டோதரி ராமனை ஒரு அவதாரமாகவேக் காண்கிறாள்.

அப்படிப்பட்ட மண்டோதரியைப் போல..ராமனை தெய்வம் எனக் கூறமுடியாமல் போனதால் நான் இங்கிருந்து என்ன பயன் என் கிறாள் அந்தப் பெண்

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே - 18

"அன்பினால் தாயை க்காட்டிலும் இனியவள்" என் கிறார் கம்பர் திரிசடையைப் பற்றிக் கூறுகையில்.

சீதைக்கு அசோகவனத்தில் கிடைத்த ஒரே ஆறுதல் திரிசடைதான்

அவளின் ஆறுதலால்தான் சீதை அசோகவனத்தில் உடிருடன் இருந்தாள் என்றே கூறலாம்

சீதை, தனக்கு ஏற்பட்ட கெட்ட சகுனங்களைக் கூறி அவளிடம் வருத்தப்பட்டாள். அதற்கு திரிசடை, தான் கனவு ஒன்று கண்டதாகக் கூரி, அவளுக்கு ஆறுதல் சொன்னதுடன் அக்கனவுப் பற்றிக் கூறுகிறாள்

"ராவணன், தன் பத்து தலைகளிலும் எண்ணெய் பூசிக்கொண்டு, கழுதை மீது ஏறி, யமன் இருக்கும் திசை நோக்கிப் போவதாகவும்,அவனின் புதல்வர்கள்,உறவினர்கள் அவன் சென்ற வழியிலேயே செல்வதாகவும்,அப்படிச் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வராதது போலவும் கனவு கண்டேன்.ராவணன் யாக குண்டங்களில் அகினிக்குப் பதிலாக செங்கரையான் புற்று வளரக் கண்டேன்..அவனது அரண்மனை ஒளி இழ்னஹ்து, இடி தாக்கி நொறுங்குவதாகக் கண்டேன்.பெண்யானைக்கு மதம் பிடித்தது போலவும், முரசுகள் இடியைப் போல முழங்குவது போலவும்,வானத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் கீழே வீழ்வது போலவும்..சூரியன் இரவு உதிப்பது போலவும்..கனவு கண்டேன்

மேலும், இலங்கை நகரே அழிவது போலவும், கோட்டை மதில்கள் தீப்பற்றி எரிவது போலவும், மங்கல கலசங்கள் கீழே விழுந்து நொறுங்குவது போலவும், எங்கும் இருள் சூழ்வது போலவும் கனவு கண்டேன்" என்று தான் கண்ட கனவுகளை அடுக்கிக் கொண்டே போனாள்

இப்படி துயரத்தில் ஆழ்ந்த சீதைக்கு ஆறுதல் கூறினாள் திரிசடை,இதன் மூலம் சீதைக்கு ஆறுதல் கிடைக்குமல்லவா?

அப்படி சீதையின் துயரை குறைக்க திரிசடை ஆறுதல் சொல்வது போல, நான் சீதைக்கு ஆறுதல் ஏதேனும் சொன்னேனா" என் கிறால் திருக்கோளூர் பெண்

Friday, October 7, 2016

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே - 17

ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்துக் காட்டிய அவதாரம் ஸ்ரீராம அவதாரம்
பல நல்ல நெறிகளை தன் வாழ்வின் மூலம் உபதேசித்தவர்

பகவானின் அம்சமான ராமர், நினைத்திருந்தால், ஒரே நாளில் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டிருக்க முடியும்.அப்படி செய்யாது, காடு.மலை,செடி கொடிகளிடம் எல்லாம் "சீதையைக் கண்டீர்களா?"என புலம்பியிருக்க வேண்டாம்.

சீதையைத் தேடி ராமலட்சுமணர்கள் வந்த போது ஜடாயூவைப் பார்த்தனர்.ஜடாயூ ராவணனால் வீழ்த்தப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.இவர்களுக்காகவே காத்திருந்தாற் போல , சீதையை, ராவணன் தூக்கிச்சென்ற வழியையைக் காட்டிவிட்டு உயிரை இழந்தது.அதற்கான ஈமச்சடங்குகளை ராமர் செய்தார்

பின்னர், ஜடாயூ சொன்ன வழியே சென்ற போது, கபந்தன் என்ற அரக்கனைப் பார்த்தனர்.அவனுக்குத் தலையில்லை,பானை போன்ற வயிறு.குகை போன்ற வாய்,கண்.பனைமரம் போன்ற  பருத்த தோள்கள்

அந்தத் தோள்களால் ராமலட்சுமணனை வாயில் போட்டுக் கொள்ள முற்பட, அவர்கள் அதன் தோள்களை வெட்டினர்.பின், அந்த அரக்கனைக் கொன்றனர்.பின், அரக்கனின் வேண்டுகோளுக்கு இணங்க, அவனைத் தகனம் செய்த போது .சிதையில் இருந்து அழகிய உருவம் கொண்ட ஒருவன் வெளிப்பட்டான்.அவன் ஒரு கந்தர்வன் என்ன்றும், ஒரு முனிவரின் சாபத்தால் அரக்கன் ஆனதாகவும் கூறினான்

பின்னர், அவன் ராம லட்சுமணரிடம்,"மேற்குமுகமாய்ச் சென்றால் ரிஷ்யமுகம் என்னும் மலையும் அதன் அருகே பம்பை நதியும் இருக்கும்.அவ்விடத்தில் சூர்ய அம்சமான சுக்ரீவன் என்ற வானரத்தலைவன், தன்  மனைவி, ராஜ்ஜியம் ஆகியவற்றை வலிமைமிக்க அவன் சகோதரன் வாலியிடம் இழந்து சுற்றிக் கொண்டிருக்கிறான்.அவனை நண்பனாகக்   கொண்டு ராவணனிடம் இருந்து சீதையை மீட்கலாம்" எனக் கூறினான்

அந்தக் கபந்தனைப் போல ஸ்ரீராமனுக்கு வழிகாட்டவில்லையே நான் என் கிறாள்  திருக்கோளூர்ப் பெண்

யான் சத்தியம் என்றேனோகிருஷ்ணனைப் போலே - 16

மகாபாரதத்தில் அளவுக்கு அதிகமாக பொய் பேசும் கதாபாத்திரம் கிருஷ்ணனே  எனச் சொல்வார்கள்.அப்படிப்பட்ட கிருஷ்ணர் ஒருமுறை சத்தியம் செய்கிறார்

அது, "நான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது உண்மையானால்'  என்று.அந்த சத்தியத்தை எப்படிக் காப்பாற்றுகிறார்?

மகாபாரதப்  போர் முடிந்து, பாண்டவர்களால் கௌரவர்கள்,தன் தந்தை ஆகியோரை இழந்த அசுவத்தாமன், பாண்டவர்களை பழி வாங்க எண்ணுகிறான்.அப்போது, உறக்கத்தில் இருக்கும் உபபாண்டவர்களை, பாண்டவர்கள் என எண்ணி வெட்டிக் கொன்று விடுகிறான்.இதை அறிந்ததும் பாண்டவர்கள் , அசுவத்தாமனனை த் தேடி வியாசரின் குடிலுக்கு வருகின்றனர்

பாண்டவர்கள் வருவதை அறிந்த அசுவத்தாமன், ஒரு புல்லை உருவி அதை பிரம்மாஸ்திரமாக பாண்டவர்கள் மீது ஏவுகிறான்.அர்ச்சுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவுகிறான்.இதனால் விளைவுகள் மிகவும் மோசமாகும் என்பதால் வியாசபகவான், அதைத் திரும்பப் பெறுமாறு அறிவுறுத்துகிறார்.
அர்ச்சுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப்பெறுகிறான்.ஆனால், அசுவத்தாமனுக்கோ, திரும்பப் பெறு மந்திரம் தெரியாது.அந்த அஸ்திரம் உத்தரையின் வயிற்றில் வளரும் ஒரே குலக்கொழுந்தான புரட்சித்துவை பதம் பார்க்கச் செல்ல, கிருஷ்ணர், தனது சுதர்சன சக்கரத்தை உத்தரையின் கருப்பைக்குள் செலுத்தி சிசுவை காப்பாற்றிவிடுகிறார்

இருப்பினம் அந்த சிசு பிறக்கும் போது உயிரில்லாமல் பிறக்கிறது.உத்தரையோ, கிருஷ்ணரே சரணாகதி என அவர் காலில் விழுந்து கதறுகிறாள்.அப்போது, கிருஷ்ணர் 'நான் எப்போதும் சத்தியம் பேசுவது உண்மையானால், இக்குழ்ந்தை உயி ர் பிழைக்கட்டும்" என குழ்ந்தயை தன் கால் கட்டைவிரலால் நீவுகிறார்.குழந்தை உயிர் பெறுகிறது

கிருஷ்ணர் சத்தியம் பேசுவாரா என்பது கேள்விக்குறியானாலும், சத்திய சங்கல்பத்தின் காரணமாகத் தான் எனக் கூறி விடலாம்.ஆனால் அவர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது எப்படி?

இந்த கேள்வி , நாரதருக்கு எழ, பிரம்மாவிடம் போய்க் கேட்கிறார்.பிரம்மாவோ, உன் சந்தேகத்தை நித்திய உபவாசி துர்வாசர் தீர்த்து வைப்பார் எங்கிறார்.

நாரதருக்கோ மீண்டும் சந்தேகம்.ஒருவேளை பசியைக் கூட பொறுக்க முடியாத துர்வாசர் எப்படி "நித்திய உபவாசி" என.

அந்த சந்தேகத்தை கிரிஷ்ணர் தீர்த்து வைப்பார் என் கிறார் பிரம்மா

நாரதர், துர்வாசரிடம் சென்று கேட்டார்.துர்வாசர் சொன்னார்.." ராம அவதாரத்தின் போது ஒருமுறை ராமர் காட்டினுள் செல்கையில், அங்கு இருந்த ரிஷிகள் எல்லாம், ராமனின் தோள்களின் அழகைப் பார்த்து விட்டு,, ஆஹா..இந்தத் தோள்களை நாம் ஒருமுறையாவது பற்ற மாட்டோமா? என்று.அடுத்து, கிருஷ்ண அவதாரத்தில், அந்த ரிஷிகள் எல்லாம் கோபிகைகளாக அவதரித்தனர்.இதுவே, பதினாயிரம் மனைவியர் என்பது.ஆண்டவன் ஒருவனே சரணாகதன் மற்றவர்கள் சரணம் அனுஷ்டிப்பவர்கள்.அவ்வளவுதான்"

நாரதர் அடுத்த சந்தேகத்தை கிருஷ்ணரிடம் வந்து கேட்டார்.

உடன் கிருஷ்ணர், "நாரதா! சற்று நேரம் பொறு.துர்வாசர் இன்று சற்று அதிகம் உண்டுவிட்டார்.அதனால் எனக்கு வயிற்று வலி.ருக்மணியிடம், சற்று சுக்கும், வெல்லமமும் வாங்கி சாப்பிட்டுவிட்டு வருகிறேன்' என்று உள்ளே சென்றார்.

நாரதருக்கோ, துர்வாசர் அதிகம் உண்டால் கிருஷ்ணருக்கு வயிற்றுவலி எப்படி வரும்? என

அதற்கு கிருஷ்ணர், "துர்வாசர் தான் உணவு உண்பதற்குமுன்  சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து எனச் சொல்லி உண்கிறார்.ஆ கவே, அவர் உண்ணூம் உணவு  என்னை வந்தடையும்.அவரோ நித்திய உபவாசியாகிறார்" என்றார்

அப்படிப்பட்ட கிருஷ்ணர் போல "யான் சத்தியம்" என்றேனா...இல்லையே.. என் கிறாள் திருக்கோளூர் பெண்

Thursday, October 6, 2016

ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே - 15,

முலசேகர ஆழ்வார் சேர மன்னர்

சோழர்களையும், பாண்டவர்களையு ம் வென்றவர்.சக்கரவர்த்தியாக இருந்தாலும் கூட லௌகீக விஷயங்களில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை.பரத்வம் என்பது எது..அதை அடைவது எப்படி என்பதிலேயே கவனம் எல்லாம் இருந்தது

திருமாலின் திருவடிகளே முடிவான பரத்வம் என்ற உண்மை அவருக்கு புரிந்தது.அந்த பரத்வத்தை அடைய வேண்டி, பஞ்ச சமஸ்காரங்களையும் கடைப்பிடித்து இறை தொண்டாற்றி வந்தார்

ஸ்ரீராமனிடம் அளவற்ற ஈடுபாடு உண்டு

ஒருமுறை ராமாயண உபந்யாசம் நடந்து கொண்டிருந்த போது, ராமனை எதிர்த்து கரன் என்பவன்பெரும் மனைவியுடன் வந்த கட்டத்தை மிக ரசமாக, நேரில் நிகழ்ந்த நிகழ்ச்சி போல சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது குலசேகரர், "காட்டில் ராமர் எப்படையும் இல்லாமல் கரனை எப்படி எதிர் கொள்வார் > "எனக் கூறி தன் தளபதிக்கு பெரும் படையை ராமனுக்கு ஆதரவாக அனுப்ப உத்தரவிட்டார்

அதேபோல அவருக்கு திருவேங்கடமுடையானுடனுடன் கூட ஈடுபாடு உண்டு. கண்னனுக்கு அடிமையாக இருக்க விரும்பினார்.திருமலையில் கோனேரி திர்த்தத்தில் ஒரு கொக்காக பிறக்க விருப்பம் என்றவர்...உடனே..கொக்கை வேடன் அம்பெய்தி கொன்று விட்டால்...என்ற சந்தேகம் வர..மீனாய் பிறக்க விருப்பம் என்றார்..உடனே மீண்டும் சந்தேகம் மீனை கொக்கு உண்டுவிட்டால்...இப்படி ஒவ்வொரு பிறப்பாக பிறக்க விரும்பிய குலசேகரர் கடைசியில், வேங்கடவன் கோயில் வாசல் படியாக இருக்க விரும்புகிறார்.

இந்த பாசுரம் பாடப்பட்ட பின்னரே..வேங்கட மலையில் சந்நிதிக்கு முன் இருக்கும் படிக்கட்டு குலசேகரர் படிக்கட்டு என அழைக்கப் பெற்றது

தேவருலகை ஆளும் பேறு கிடைத்தாலும் விரும்ப மாட்டேன்.திருவேங்கடவன் அருளாட்சி செலுத்தும் திருமலைமீது ஏதாவது ஒன்றாக இருக்க மாட்டேனா என் கிறார்

அதனால்தான் திருக்கோளூர் பெண்பிள்ளை "ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போல" என் கிறார் 

அவன் சிறியேனென்றேனோ ஆழ்வாரைப் போலே - 14

இவ்வாக்கியத்தி ல் கூறப்பட்டுள்ள ஆழ்வார் நம்மாழ்வார் ஆகும்.ஆழ்வார்கள் பெருமானின் ஒவ்வொரு அம்சமாகப் பிறந்ததாகக் கூறும் வைணவர்கள் நம்மாழ்வாரை மட்டு ம்விஷ்ணுவின் எட்டு அம்சங்களில் இருந்து சிறிது சிறிதாகப் பெற்று அவதரித்ததாகக் கூறுவர்

இவர் பிறக்கும் போதே சடம் என்னும் மாயைக்குக் காரணமான வாயுவை வென்றதால் அழுதல், அசைதல் இன்றி ஜடமாக இருந்தார்.குழந்தையைப் பெற்றவர்கள் பெருமாள் சந்நிதிக்கு எடுத்துச் சென்றனர்.அங்குக் குழ்ந்தை தவழ்ந்து சென்று கோவிலில் இருந்த தலவிருட்சமான உறங்காப் புளியமரப் பொந்தில் சென்று அமர்ந்து யோக நிலையில் இருந்தது

அயோத்தி சென்ற மதுரகவி ஆழ்வார், தெந்திசையில் இருந்து ஒளி வான்வழி வருவதைக் கண்டு அத்னைத் தொடர்ந்து வந்தார்.ஆழ்வார்திருநகிரியை அடைந்தார்.அங்கு இருந்த உறங்கா புளிய மரப்பொந்தில் இருந்து ஒளி வருவதையும் அதில் ஒருவர் யோகநிஷ்டையில் இருப்பதையும் கண்டார்.அவரது நிஷ்டையைக் கலைக்க ஒரு கல்லை அவர் மீது எறிய..படுத்திருந்தவர் கண் திறந்தார்

மதுரகவி அவரைப் பார்த்து"செத்ததன் வயிற்றில்  சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்" என்றார்

நம்மாழ்வார் சிரித்தவாறே, 'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்றார்

அந்த உடலின் இன்ப துன்பங்களை அனுபவித்து அந்த உடலிலேயே கிடக்கும் என அதற்குப் பொருள்


நம்மாழ்வாரால் எங்கும் செல்லமுடியாது என்பதை உணர்ந்த மகாலட்சுமி பெருமாளிடம் விண்னப்பிக்க, அதன் காரணமாக நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் உள்ள பெருமால் அந்தந்த மூர்த்தியாக அவருக்கு சேவை சாதித்தார்

பெருமாளின் தரிசனம் கண்டு மகிழ்ந்த நம்மாழ்வார், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையே நான் கு  வேதங்களின் சாரமாக திருவிருத்தம்,திருவாசிரியம்,பெரியதிருவந்தாதி,திருவாய்மொழி என்ற பிரபந்தங்களாக இயற்றினார்

அதில், திருவந்தாதியில் கூறுகிறார்..

இந்த உலகமும்  , மேலுலகமும் உன்னிடம் உள்ளன.நீயோ என் செவி வழியாக என் மனதினுள் நுழைந்து எனக்குள்ளே தங்கி விட்டாய்.எனவே நான் உன்னைவிட பெரியவனா அன்றி நீ பெரியவனா என்று எம் பெருமானே நீயே கூறு என் கிறார்

(ஆழ்வார்திருநகரியில் பெருமாள் பங்குனி உத்தரத்தின் போது வீதி புறப்பாடை முடித்துக் கொண்டு காலையில் 9 மணி வாக்கில் தாயார் சந்நிதிக்கு வருவார்.பெருமாளுக்கு வேறு நாச்சியார்கள் தொடர்பு காரணமாக..தாயார் சந்நிதி கதவை சாத்தி மூடுவர்.பெருமாள் எவ்வளவு சொல்லியும் தாயார் சமாதானம் ஆக மாட்டார்.நம்மாழ்வார் தாயாரிடம் சென்று சமாதானம் செய்ய, தாயாரும் சம்மதித்து "சரி" என சந்நிதிக் கதவைத் திறக்க சம்மதிப்பார்..ஆகவே நம்மாழ்வார் பெருமானைவிட பெரியவர் என பெருமைப்படுவதில் தவறில்லை)

அந்த பெருமை தனக்கு இல்லையே என் கிறாள் அப்பெண்  

ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே - 13

திருமழிசை என்பது திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஊராகும்.பல முனிவர்கள் வாழ்ந்த இத்தலத்தில் பார்கவர் என்ற மகாமுனிவர் தவமேற்கொண்டார்.

அந்த தவத்தைக் கலைக்க அப்சரஸ் போன்ற பெண் முற்பட்டார்.அதன் விளைவாக அவர்கள் இருவருக்கும் பிண்ட வடிவில் ஒரு சிசு பிறந்தது

அந்த பிண்ட வடிவமான ஆண் சிசுவை ஒரு கோயிலில் போட்டு விட்டு அகன்று விட்டனர் இருவரும்

கருணையே வடிவான மகாலட்சுமி தாயார் அந்தக் குழந்தையின் மீது கருணை கொண்டு அதன் அவயங்களை வளர்ச்சியடையச் செய்து பூரணனாக்கினாள்.பின்னர், அக்குழந்தையின் அழு குரல் கேட்டு அவ்வழியேச் சென்ற பிரம்புக் கூடை முடையும் ஒருவன் அக்குழந்தையை எடுத்து வளர்த்தான்.அக்குழந்தையே திருமழிசை ஆழ்வார் ஆவார்

திருமழிசை ஆழ்வார் வேதங்கள் அனைத்தும் கற்றார்.பல சமய நூல்களையும் கற்று தேர்ச்சி பெற்றார்

பின், பேயாழ்வாரை ஒருமுறை சந்தித்தார்  ,

 தனது வாதத் திறமையினாலும்,யோகநிஷ்டையினாலும் பல யோகிகளை வெற்றி கண்டார்

அப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வாரைப் போல ,பல சமயங்களையெல்லாம் ஆராய்ந்து இறுதியாக வைணவமே சிறந்தது எனக் கொண்டவளா நான் என்பதையே ஆராய்ந்துவிட்டேனோ திருமழிசையார் போல  என் கிறாள் இப்பெண்

எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே - 12

ஆழ்வார்களில் பட்டர்பிரான் என்றால் அது பெரியாழ்வார் எனப் போற்றப் படும் விஷ்ணு சித்தரையே குறிக்கும்.இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார்

வேறு எந்த ஆழ்வாருக்கும் இல்லாத பெருமை இவருக்கு உண்டு.பெரியபிராட்டியை மகளாகவும், ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாகவும் அடையும் பேறு பெற்றவர்,கருடனின் அம்சம் எனக் கருதப் பட்டார்

எப்போதும்  வில்லிபுத்தூரிலுள்ள  வடபத்ரி பெருமானைச் சிந்தனையில்     கொண்டிருந்ததால் விஷ்ணு சித்தர் எனப்பட்டவர் ஆவார்

தாய் மாமன் கம்சனின் அழைப்பை ஏற்று கண்ணன் , பலராமனுடன் கோகுலத்திலிருந்து புறப்பட்டார்.வழியில் ஒருவர் கண்ணனுக்கும்,பலராமனுக்கும் மாலைகள் அணிவித்தார்.அதை ஏற்றுக்கொண்ட கண்ணன், அந்த பூ வியாபாரிக்கு அருள் செய்தார்.அவ்வியாபாரி வீடு பேறு பெற்றார் என்ற கதையைக் கேட்ட   விஷ்ணு சித்தரும், தானும் பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்ய விரும்பினார்.அதனால், தன் குடிலை ஒட்டி பூந்தோட்டம் அமைத்து..பூக்களை இ றைவனுக்கு சமர்ப்பித்து வந்தார்

வல்லபதேவ பாண்டிய மன்னன் ஒரு வைணவ பக்தன்.ஒருநாள் அவன் மாறு வேடத்தில் இரவில் நகர் வலம் வந்தான்.அப்போது வைதீக அந்தணன் ஒருவன் ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான்.வேறு ஊர்க்காரன் என்பதால் மன்னன் அவனை எழுப்பி, அவன் யார்? என விசாரித்தார்
அதற்கு  அவன் காசி சென்று விட்டு திரும்புவதாகவும், சேதுவிற்கு செல்வதாகவும் கூறினான்

மன்னனும் "பல ஊர்களுக்கு சென்றுள்ள நீ..எனக்கு ஏதேனும் நன்மொழிக் கூறு" என்றார்

அந்தப் பயணியும், "மழை காலத்திற்கு வேண்டியவற்றை மற்ற எட்டு மாதங்களிலும் இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் சேர்த்து வைப்பவனே புத்திசாலி" என்றிட்டான்

மன்னன் அதை மனதில் இருத்திக் கொண்டான்

அரண்மனை வந்ததும் யோசித்த மன்னன், தன்னிடம்  செல்வம் இருந்தாலும்,  மறுமை உலகிற்கு ஏதும் சேர்க்காமல் வறியனாக இருக்கிறேனே   என எண்ணினான்..உடனே, தன் நண்பரும்,சிறந்த வேதவித்துவுமான செல்வனம்பி என்பவரை அழைத்து"மறுமைக்கு உண்டானதைச் சேர்த்துத் த்ருபவன் யார்? " என்றான்

செல்வனம்பியும், இதை ஒரு போட்டியாக அறிவித்தார்.சரியான விடை கூறுபவருக்கு, கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ள பொற்கிழி பரிசளிக்கப் படும் என அறிவித்தார்

யார் யாரோ வந்து என்னென்னவோ சொல்லியும் மன்னன் மனம் அவற்றை ஏற்கவில்லை.

இந்நிலையில், இறைவன் விஷ்ணுசித்தரின் கனவில் வந்து, "இம்மைக்கும், மறுமைக்கும் உள்ள செல்வம் நான் தான் என உன் திறமையால் நிரூபித்து...பொற்கிழியைப் பெற்று செல்" என்றார்

"என்றைக்கும், ஏழேழு பிறவிக்கும் உள்ள செல்வன் நாராயணனே: என மன்னனுக்கு விளக்கிவிட்டு , பொற்கிழி கட்டியிருக்கும் கம்பத்தின் அருகேச் சென்றார்

கம்பம், அவர் பொற்கிழியை எடுக்கும் விதத்தில் வளைந்து கொடுத்தது.அதைக் கண்டு மன்னனும், மற்றோரும் மகிழ்ந்தனர்

பொற்கிழியை  எடுத்துக் கொண்டு விஷ்ணு சித்தர் கிள்ம்பினார்மன்னன்   தன் பட்டத்து யானையில் அவரை அமர்த்தி மதுரைத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான்

அப்படி விஷ்ணுசித்தர் சொன்னது போல "எம்பெருமான் நாராயணனே பரம்பொருள் என்றேனா? இல்லையே" என்றாள் அப்பெண்

Wednesday, October 5, 2016

பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே - 11

மற்ற ஆழ்வார்களுக்கு இல்லா பல சிறப்புகள் ஆண்டாளுக்கு உண்டு.மற்ற ஆழ்வார்களுக்கு மத்தியில் ஆண்டாள் மட்டுமே பெண்ணானவள்.செல்வாக்கும் மிக்கவள்

ஆண்டாள், ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசிச் செடியின் கீழே விஷ்ணுசித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வாரின் குமாரத்தியாக ஆனார்.பூமாதேவியின்  அம்சமாகப் பிறந்ததாக ஐதீகம்

பெண்களின் பருவங்களை ஏழு நிலைகளாகப் பிரிக்கலாம்

ஐந்தாம் வயதிலிருந்து ஏழாவது வயது வரை - பேதை
எட்டு வயதிலிருந்து 12 வயதுவரை - பெதும்பை
13 வயது மட்டும் - மங்கை
14 வயதிலிருந்து 19 வரை - மடந்தை
20 வயதிலிருந்து25 வயதுவரை- அரிவை
26 வயதிலிருந்து 32வரை  - தெரிவை
அதன் பிறகுபேரிளம் பெண்

(பகவத் விஷயங்களை வளர்த்துக் கொள்வதில் நமக்கு ஏழு நிலைகள் உள்ளன.அவை, அபிலாஷை,சிந்தனை,அனுஸ்ம்ருதி,இச்சா,ருசி,பரபக்தி,பரமபக்தி.ஒருப்பொருளைப் பார்த்ததும் அதன் மீது ஏற்படும் விருப்பம் அபிலாஷை எனப்படும்.அதன் பிறகு வேறோர் இடத்தில், வேறோர் காலத்தில் மீண்டும் அந்த பொருள் பற்றி நினைவு வருவத்ற்குப் பெயர் சிந்தனை.இந்தச் சிந்தனை அதிக நேரம் நிற்காது.அதற்கு அடுத்து அப்பொருளைக் குறித்து சிந்தனைப் போராட்டம் ஏற்படும் நிலைக்கு அனுஸ்மிருதி எனப்படும்.அனுஸ்மிருதிக்குப்பின் அப்பொருள் மீது இச்சை ஏற்படும்.இச்சை நிலைக்குப் பின் அந்தப் பொருளை அடைய வேண்டும் என்ற நிலைக்கு ருசி எனப்படும்.இந்நிலையில் எம்பெருமானுடன் கூடி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும்..இறைவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற இன்ப நிலையான சேர்க்கையும், அப்பெருமானைப் பிரிந்திருக்க வேண்டும் என்ற துன்ப நிலையான பிரிவும் சேர்ந்தது பரபக்தி ஆகும்.எம்பெருமானுடன் ஒன்றாக இருந்து வைகுண்டத்தில் பதவி வகிக்கும் நிலையே பரமபக்தி ஆகும்.இந்த ஏழு நிலைகளும் ஒரு பெண்ணின் தன்மையிலிருந்தே வைழ்ணவத்தில் பேசப்படுகிறது)

 

ஆண்டாள், பேதைப் பருவத்திலேயேஆண்டவனுடன் கலக்கும் ஒரு நிலையையும் அடைந்து விடுகிறாள்.பெருமாளின் வாத்சல்யம் அவளை எந்தவித பிரயத்னமும் இன்றி உத்தாரணம் செய்து விடுகிறது

ஆண்டாள் , வராகப் பெருமாளால் உத்தாரணம் பண்ணப்பட்ட பூமித்தாயார், அல்லவா?.
இறைவன் அவளின் பயத்தைப்   போக்கி அவளை மடியில் இருத்தி வேதங்கள் அனைத்தும் ஓதுகிறார்

அப்போது தாயாருக்கு ஒரு சந்தேகம்.ஏற்கனவே வேதம் அத்தனையும் கற்றுக்கொண்டு,, பரம்பொருளைக் கண்டுபிடித்து,எம்பெருமானையடைய ஜீவன் மிகவும் சிரமப் பட வேண்டுமே என சந்தேகம்

ஆகவே பெருமாளின் கட்டளைப்படி அவள் கோதை நாச்சியாராக பூவுலகில் பிறந்து, நான் கு  வேதத்திற்கும் நிகரான திருப்பாவையை படைக்கிறாள்

பூமித்தாயை அதிகம் தவிக்க வைக்காமல், உத்தாரணம் பண்ணிய பெருமாளே..ஆண்டாளையும் மிகச் சிறு வயதிலே யே  ஞானம் அடைய வைத்து திருப்பாவை என்ற வேதத்தின் சாரத்தை நமக்கு அளித்துவிட்டு உத்தாரணம் செய்து விட்டார்

அப்படிப்பட்ட, ஆண்டாளைப் போல சிறு வயதிலேயெ ஞானம் பெற்று எம் பெருமானை  அடையவில்லையே தான் என்பதையே "பிஞ்சாய் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே" என் கிறாள் திருக்கோளூர் பெண்.

Tuesday, October 4, 2016

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே - 10

பிரம்மனால் படைக்கப்பட்ட பேரழகி அகல்யா.கௌதம ரிஷியின் மனைவி

தினமும் விடியற்காலை சேவல் கூவியதும், கௌதமர் நதியில் நீராட சென்றுவிடுவது வழக்கம்

இதை அறிந்த இந்திரன், ஒருநாள், விடிவதற்கு முன்  சேவல் போலக் கூவி   விடிந்தாற்  போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான்.கௌதமரும், வழக்கம் போல நீராடச் சென்று விட்டார்

அவர் இல்லாத அந்நேரத்தில் இந்திரன், கௌதமரி ன் உருவத்தில் குடிலுக்குள் சென்று அகல்யையைப் புணர்ந்தான்

அகல்யாவிற்கும், அது தன் கணவனில்லை எனத் தெரிந்தது.ஆனாலும் அவள் அவனைத் தடுக்கவில்லை

ஏதோ சந்தேகம் ஏற்பட  கௌதமர் வீடு திரும்பினார்/.அங்கு இருவரையும் ஒன்றாகக் கண்டு கோபம் மேலிட அகல்யாவைக் கல்லாகப் போகுமாறு சபித்தார்

இந்திரனுக்கும், அவன் எதை அடைய வேண்டும் என ஆசைப்பட்டானோ, அது ஆயிரமாக  அவனது உடல் முழுதும் வரட்டும் என சபிக்கிறார்

இருவரும், சாப விமோசனம் கேட்டு வேண்ட...இந்திரன் உடலில் அவை ஆயிரம் கண்களாக மாறட்டும் என விமோசனம் கொடுத்தார்.

அகலிகைக்கோ, பின் ஒரு நாளில் ஸ்ரீராமன் பாதங்கள் பட்டு, திரும்பப் பெண்ணாக மாறுவாள் என்றார்


ஸ்ரீராமன், விஸ்வாமித்திரருடன் மிதிலைக்கு வருகையில் கிடந்த கல்லில் ,   அவரது பாதம் பட அகலிகை பெண்ணாக மாறினாள்..

 ஸ்ரீராம பிரானின் பாதம் பட்ட அகலிகையா நான் ..எனக்கு இந்த ஊரில் இருக்க என்ன தகுதி என்பதை "முதலடியைப் பெற்றேனா அகலிகையைப் போலே' என்று உரைத்தாள் அப்பெண்

மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்து போலே - 9

மிகக் கொடிய பாவங்களுடன் உருவெடுத்தவன் மகாபாபியான க்ஷத்ரபந்து.அவன் தனது கொடுமையான செயல்களால் தாய்,தந்தை,மக்கள், மித்திரர் அனைவராலும் கைவிடப்பட்டு கானகத்தில் அலைந்துத் திரிந்து கொண்டிருந்தான்

ஒருநாள் முனிவர் ஒருவர் கடும் வெயிலில் வழி மறந்து காட்டினுள் வந்து விட்டார்.அவரை கஷத்ரபந்து பார்த்து விட்டான்

அவர் பரிதாப நிலை கண்டு , அவர் மீது இரக்கம் மிகுந்ததால் க்ஷத்ரபந்து அவரிடம் "முனிவரே, நீங்கள் வழி தவறி வந்துவிட்டீர்கள்.களைப்புடன் வேறு இருக்கறீர்கள்.அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் அருந்துங்கள்.நீங்கள் போக வேண்டிய சரியான வழியும் இதுதான்" என அவருக்கு வழியைக்காட்டிவிட்டு ,ஒரு குளத்தையும் காட்டினான்

முனிவர் குளத்தருகில் போனபோது, கால்கள் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார்.அவரை, குளத்தினுள் குதித்து க்ஷேத்ரபந்து காப்பாற்றியதுடன், அவருக்குக் கிழங்குகளை உண்ணக் குடுத்து..கைகால்களையும் பிடித்துவிட்டான்

அம்முனிவர் அவனை நோக்கி, "நீ யாரப்பா...உன் வரலாறு என்ன" என வினவினார்

அதற்கு க்ஷத்ரபந்து, :"ஐயா..நான் சூரிய வம்சத்தில் விஸ்வநாதன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவன்" என்று கூரிவிட்டு, தான் செய்த கொடுமையான செயல்களையும் கூறினான்

முனிவரும்  , அவனை கொடுமையான செயல்களை விட்டொழிக்கச்  சொன்னார்

"ஐயா...காமம், குரோதம்,லோபம், மோகம்  என்ற தீய குணங்களுக்கு ஆளான நான் எப்படி அவற்றை விட்டொழிப்பேன்" என்றான் க்ஷத்ரபந்து

அவனை எப்படியும் திருத்திட வேண்டும் என முனிவர், "இடைவிடாது கோவிந்த நாமத்தைச் சொல்லிக்கோண்டிரு" என்றார்..

அவனும், கோவிந்த நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருக்க ஆரம்பித்தான்.

பின், ஒருநாள் இயற்கை எய்தி, மீண்டும் நல்குடியில் பிறந்தான்

இதையே அப்பெண் "க்ஷத்ரபந்து போல மூன்றெழுத்தைச் சொன்னேனோ'என் கிறாள்.


தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே - 8


மகராஜா   உத்தானபாதனுக்கு   இரு மனைவிகள்.மூத்த்வள் சுநீதிக்கு பிறந்த்வன் துருவன்.இரண்டாம் மனைவி சுருசிக்குப் பிறந்தவன் உத்த்மன்.
உத்தானபாதனுக்கு சுநீதியைவிட சுருசி மீது அன்பு அதிகம்.

ஒருநாள் துருவனை மன்னன் தன் மடியில் அமர்த்தி, முத்தமிட்டான்.அதைக்கண்ட சுருசி கோபமடைந்து துருவனை விரட்டி அடித்தாள்.

துருவன் அழுதபடியே, அவள் தன்னை விரட்டியதன் காரணம் கேட்க"உன் தந்தை மடியில் அமர நீ என் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும்.இல்லையெனில் மாகாவிஷ்ணுவிடம் வரம் பெற வேண்டும்" என்றாள்.

துருவன் உடனே இறைவனை நாடி கானகம் போனான்.

வழியில், நாரதர் வந்து, "நீ சிறுவன்...திரும்பிப்போ" என்றார்.துருவன் கேட்கவில்லை

மகாவிஷ்ணுவைக் காண்பதே என் குறிக்கோள்.அதற்கான உபாயத்தைக் கூறுங்கள் என்றான்.

அதற்கு நாரதர், "முதலில் உணவில் நாட்டக் கூடாது.உணவு உண்பதை விட வேண்டும்" என்றார்

உண்ணுவதை நிறுத்தினான் துருவன்.பின்னர், தண்ணீர் அருந்துவதையும் நிறுத்தினான்.அவனின் தியானம், உச்சநிலைக்குச் சென்றது.இறைவன், அவன் ஆத்மாவிற்குள் நுழைந்தார்.அதை, துருவன் உணர்ந்து கொண்டாலும்,அவனது லட்சியம் விஷ்ணுவை நேரில் பார்க்க வேண்டும் என்பதே

நாரதர் அதற்கும்   ஒரு உபாயம் சொல்கிறார். "பிரணவத்தில் சுவாசத்தை நிலை நிறுத்த வேண்டும்"

துருவன் அதன்படி செய்ய ..எங்கும் "ஓம்" என ஓங்காரம் ஒலிக்கிறது. மகாவிஷ்ணு அவன் முன் தோன்றி, அவனை மடியில் தூக்கி வைத்துக் கொண்டார்

அப்படிப்பட்ட துருவனைப்போல, சர்வலோகத்திற்கும் தந்தையான மகாவிஷ்ணுவைத் தேடி அலையும் பொருட்டு "தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே" என் கிறாள் அந்தப் பெண்

Monday, October 3, 2016

தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே - 7

அத்திரி மகரிஷி,அனுசூயா தம்பதிகள் குடில் அமைத்து வசித்து வந்தனர்
அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் குழந்தை களாக பிறக்க வேண்டும் என ஆசை.அதற்காக கடுமையாக பிரார்தித்து வந்தனர்

மும்மூர்த்திகளும், அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினர்.துறவிகள் போல அவர்கள் வேடமிட்டு,அத்திரியின் குடிலுக்கு வந்தனர்.அப்போது மகரிஷி வீட்டில் இல்லை

அனுசூயா, தினமும் தன் கணவருக்கு பாத பூஜை செய்து, அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்ட பின்னரே பணிகளைத் தொடங்குவார்.அந்தத் தீர்த்தம் எப்போதும் அவர்கள் இல்லத்தில் இருக்கும்

அனுசூயா வந்த துறவிகளை வரவேற்றார்.உணவு எடுத்துவர உள்ளே சென்ற போது அவர்கள் "தாயே! எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது,எங்களுக்கு யார் உணவிட்டாலும் அவர்கள் நிர்வாண (திகம்பரராக) நிலையிலேயே அதைச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அந்த உணவை நாங்கள் ஏற்போம்" என்றனர்

அனுசூயாவிற்கு இதில் ஏதோ தெய்வசங்கல்பம் இருப்பதுபோலத் தெரிந்தது.உடனே அவர் ,"ஆகா..அப்படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, எப்போதும் வீட்டில் வைத்திருக்கும் கணவரின் பாத பூஜை தீர்த்தத்தை எடுத்து"இறைவா...நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையானால் இந்தத் துறவிகளை குழந்தையாக மாற்று' என்று கூறியபடியே அந்த தீர்த்தத்தை அவர்கள்மீது தெளித்தார்

மூவரும் குழந்தைகள் ஆகிவிட்டனர்.பின், அவர்கள் விருப்பப்படியே அவர்கள் பசியை பாலூட்டிப் போக்கினார்

அத்திரி முனிவரும் வந்தார். தனது ஞானதிருஷ்டியால் வந்த வர்கள்  மும்மூர்த்திக ள்  என அறிந்தார்.அக்குழந்தைகளை அணைத்தார்.மூன்று தலைகளும், ஆறு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆனது

இத்தகவல் அறிந்த முப்பெரும் தேவியரும், அவரவர் தங்கள் கணவர்களைத் திருப்பித்தர வேண்டினர்
 அக்குழந்தை   தங்களுடனேயே வளர வேண்டும் என அத்திரியும், அனுசூயாவும் சொன்னார்கள்,அதற்கு தேவியர்கள் ஒப்புக்கொண்டால், அவர்களது கணவன்மார்களைத் திருப்பித் தருவதாகக் கூறினர்

மூவரும் அதற்கு இசைய, அனுசூயை மும்மூர்த்திகளை மானசிகமாக வேண்டினார்.அப்போது மூவரும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை அவர்களுடன் வளர ஆசிர்வதித்து,அக்குழந்தை ஒரு முனிவராக வளரும் என்றனர்

அக்குழந்தையே  தத்தாத்ரேயர் ஆவார்


இதையே திருக்கோளூர் பெண் 'தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போல" என் கிறாள்

Sunday, October 2, 2016

பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே - 6

கண்டாகர்ணன் , இறைவனுக்கு நிவேதனமாக நரமாமிசமே படைத்து  வந்தான்

அவன் முதலில் சிவ பக்தனாய் இருந்தான்.அப்போது மற்ற தெய்வங்களின் பெயரைக் கேட்பதையே வெறுத்தான்.அதனால் காதுகளில் மணியைக் கட்டி வைத்திருந்தான்.யாரேனும், பிற தெய்வப்பெயரைக் கூறினால், உடன் தலையை ஆட்டி மணிகளை  ஒலிக்கச் செய்து, அது தன் காதில் விழாதபடி பார்த்துக் கொண்டான்

ஒரு சமயம் அவன் சிவனிடம், தனக்கு முக்தியளிக்குமாறு வேண்டினான்.

ஈசனும், "கண்டாகர்ணா! நீ திருமாலை வழிபட்டு முக்தியடையலாம்" என்றார்

கண்டாகர்ணன், தன் காதுகளில் கட்டியிருந்த மணிகளை   அகற்றினான்.பின், குபேரனிடம் சென்று, தனக்கு வழி காட்டுமாறு வேண்டினான்.குபேரன் அவருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து, "கண்டாகர்ணா! இனி நீ சைவத்திற்கு மாற வேண்டும் "என்றார்

"அது என்னால் இயலாதே" - கண்டாகர்ணன்

"அப்படியாயின், வயது முதிர்ந்த இறந்த விலங்குகளை உண்ணலாம்"- குபேரன்

 பின், குபேரன் ,கண்டாகர்ணன்  , கிருஷ்ண அவதாரக் காலத்தில் வாழ்ந்ததால், துவாரகைக்கு செல்ல பணித்தார்

துவாரகை செல்லும் வழியில், உணவேதும் கிடைக்காது கண்டாகர்ணன் வருந்தினான்.பசி அதிகமானது.வேறுவழியின்றி, தன்னருகேக் கிடந்த மனிதப் பிணத்தை சமைத்து பக்குவப் படுத்தினான்

பின், அதை நாராயணனுக்கு நிவாதனம் செய்தான்

கண்டாகர்ணனுக்கும், அவன் தம்பி நந்திகனுக்கும் கண்ணன் முக்தியளித்தார்.

இதையே, "பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே என் கிறாள் அப்பெண்.

பிணமெழுப்பிவிட்டேனோ தொண்டைமானைப் போலே - 5

கிருஷ்ண சர்மா என்னும் அந்தணன் ஒருவன், தன் மனைவியையும், மகனையும் மன்னன் தொண்டைமானின் காவலில் விட்டு விட்டு காசியாத்திரைக்குச் சென்றான்.

அவன் திரும்பி வரம் நேரத்தில், அவர்கள் இறந்துவிட்டனர்.

மன்னனுக்கு, அந்தணன் வந்ததும் இதை எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை.ஆதலால் அவனிடம், அவர்கள் இருவரும் அரசவை தோழிகளுடன் திருமலை யாத்திரை சென்றுள்ளனர் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவர் என்றும் கூறினான்

பின் மன்னன், ஸ்ரீனிவாசபெருமாளை நோக்கிக் க த றி அழுது,அவர்களை பிழைக்க வைக்க வேண்டினான்

ஸ்ரீனிவாச பெருமாளும், மன்னனை, வடவேங்கட மாமலைக்கு அவர்கள் பிணத்தைக் கொணருமாறு உத்தரவிட்டான்.

மன்னன் தொண்டைமானும் அவ்வாறே செய்ய, அங்கு இருவரும் உயிர் பிழைத்தனர்

திருக்கோளூர் பெண்ணும் 'தனக்குத்  தொண்டைமானைப் போல பக்தியில்லையே" என்பதையே...

"பிணமெழுப்பி விட்டேனோ தொணடைமானைப் போலே" என்றாள்

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே - 4

ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்தார்.ஆனால், திருக்கோளூர் பெண்ணோ.ராவணனை வதைத்தது சீதா பிராட்டியே என் கிறாள்.

தசமுகனான, ராவணன் அழிய வேண்டும் என்பதற்காகவே சீதை,ராமனுடன் காட்டிற்கு வந்தாள்.தசமுகனுக்கு அழிவு ஏற்படும் வகையில் மாயமானைக் கேட்டாள்,லட்சுமணனைத் திட்டி அனுப்பினாள்.ராவணன் வந்தான்.சீதையைத் தூக்கிச் சென்றான்.இலங்கையில் சிறை வைத்தான்

"இலங்கையை மட்டுமல்ல.அகில புவனங்களையும்  சுடுவே ன்  ஆனால். நான் அப்படிச் செய்தால் அது ராமனின் வில்லாற்றலுக்குக் குறையை ஏற்படுத்தும்" என்று சீதை அனுமனிடம் கூறியதாகக் கம்பராமாயணம் சொல்கிறது

ராமன், ராவணனை வதைத்தாலும் அவன் அழிவிற்கு சீதையின் செயல்களேக் காரணமாக இருந்ததால், திருக்கோளூர் பெண்  ,"தசமுகனைச் சேற்றேனோ பிராட்டியைப் போலே' என் கிறாள்

Saturday, October 1, 2016

தேகத்தை விட்டேனா ரிஷி பத்தினியைப் போலே..! = 3

கண்ணன் பசுக்களையும் கன்றுகளையும் மேய்ப்பதில் விருப்பம் கொண்டவன். ஆயச் சிறுவர்களுடன் அவனும் செல்வான். ஒருநாள், ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணனிடம் வந்து, ""கண்ணா, எங்களுக்குப் பசிக்கிறது'' என்றனர். 

கண்ணன் அவர்களைப் பார்த்து, ""இங்கு யாகம் செய்யும் அந்தணர்களிடம் சென்று என் பெயரைச் சொல்லி உணவு பெற்று வாருங்கள்'' என்றான். 

சிறுவர்கள் அந்தணர்களிடம் சென்று கண்ணன் பெயரைச் சொல்லி உணவு கேட்டனர். அவர்கள் கம்சனுக்குப் பயந்து உணவு கொடுக்கவில்லை.

கண்ணனிடம் சென்று இதைக் கூறியபோது, ""ஊருக்குள் சென்று முனிபத்தினிகளிடம் நான் சொன்னதாகச் சொல்லி உணவு கேளுங்கள்'' என்று கூறி அனுப்பினான். 

முனிபத்தினிகளிடம் சென்று கேட்டபோது அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிறுவர்களுக்கும் உணவு கொடுத்து கண்ணன் மற்றும் அங்கிருந்தோர் அனைவருக்கும் உணவளித்து  மகிழ்ந்தனர். 

அவர்களை மீண்டும் ஆசிரமத்துக்குச் செல்லும்படி கண்ணன் கூறியபோது கண்ணனைப் பிரிய மனமின்றியும் தங்கள் கணவருக்குப் பயந்தும் விருப்பமின்றிச் சென்றனர். 

ஒரு பெண்மணி மட்டும் கண்ணனைப் பிரிய மனமின்றி கண்ணனை நினைத்து உயிர்விட்டாள். "கண்ணனுக்காகத் தன் உயிரைவிட்ட அந்தப் பெண்மணியைப் போல்தானும் உயிரை விடவில்லையே' என்று மனமுருகிக் கூறினாள் அந்தப் பெண்பிள்ளை.