Wednesday, November 9, 2016

70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!

திருக்கோட்டியூர் நம்பி. திருமலையாண்டான் என்பவரை அழைத்துக் கொண்டு ராமானுஜரை காண ஸ்ரீரங்கம் வந்தார்.திருமலையாண்டான் ஆளவந்தாரின் சீடர்

நம்பிகளை வரவேற்ற ராமானுஜர், திருமலையாண்டானையும் வணங்கினார்.நம்பிகள் ராமானுஜரிடம்,"இவர் என் குரு ஆளவந்தாரின் சீடன்.திருவாய்மொழியை ஆளவ்ந்தாரிடம் கற்றுத் தேர்ந்தவர்.நீங்கள் இவரிடம் திருவாய்மொழியை அர்த்தத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்

ராமானுஜரும் ஒப்புக் கொண்டார்.திருமலையாண்டான், திருவாய்மொழியை, தான் ஆளவந்தாரிடம் கற்றவிதத்தில் அர்த்தத்துடன் கற்பித்தார்

ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, இதற்கு இந்தப் பொருள் வராதே' எனக் கூறினார்.இது ஆண்டானுக்கு எரிச்ச்ல் மூட்டியது

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

  "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
    அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
    அறியாமைக் குறள் ஆய்,நிலம் மாவலி மூவடி என்று
   அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு பாடம் எடுத்தார்

இதற்கு ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள்,பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்" எனப் பொருள் கூறினார்

ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல.தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே" என்று விளக்கினார்

இதனால் கடுப்பான ஆண்டான், பாடம் எடுப்பதை நிறுத்தி விட்டார்

இதையெல்லாம் அறிந்த திருக்கோட்டியூர் நம்பி, ' எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கேட்டார்.அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும் 'என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார்

திரும்ப பாடம் ஆரம்பமானது.ராமானுஜர் குறுக்கீடும் இருந்தது

ஆண்டான் யோசித்தார்,ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார்.பின் கேட்டார்"நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை.அவர் பேசிக் கேட்டதும் இல்லை.அப்படியிருக்க இவ்வளவு சரியான ப்படி அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்"

அதற்கு ராமானுஜர் நான் ஒரு ஏகலைவன் என்றார்

அப்படி ராமானுஜர் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ? இல்லையே...என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்





1 comment: