சஞ்சயன் ,திருதராஷ்டரின் ரத சாரதி,அவனது, அறிவு, பேச்சாற்றல் எல்லாம் அவனை திருதராஷ்டிரரின் அந்தரங்கச் செயலாளராக உயர்த்திவிட்டது.
அப்படிப்பட்ட சஞ்சயன், இரண்டு அந்தரங்கமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.தனக்கு வியாச மகரிஷி அளித்த மந்திரசக்தியால் திருதராஷ்டிரரின் அரண்மனையில் அமர்ந்தபடி குருக்ஷேத்திரக் காட்சிகளை நேரில் பார்ப்பது போன்று தன் மன்னனுக்குக் கூறினான்
கௌரவர்கள் சார்பில், பாண்டவர்களிடம் சஞ்சயன் தூது செல்கிறான்.அதற்குமுன் திருதராஷ்டிரரிடம், தர்ம, நியாயங்களைப் பேசுகிறான்.ஆனால், தூதுவனாகிவிட்டபடியால், பாண்டவர்களிடம் போர் புரியாததால் ஏற்படும் நன்மைகளைக் கூறுகிறான்.அதன்பின் கிருஷ்ணரைப் பார்க்கச் செல்கிறான்.
நேரம் கடந்துவிட்டபடியால், கிருஷ்ணர் தன் படுக்கையறையில் இருக்கிறார்.
சஞ்சயனை அங்கேயே வரச் சொல்கிறார்.அவன் உள்ளே நுழைந்த போது, கிருஷ்ணர், சத்யபாமாவின் மடியில் தலைவைத்து படுத்திருக்க, அவருடைய பாதங்களை தன் மடியில் தாங்கியபடி அர்ஜுனனின் பாதங்கள் திரௌபதியின் மடியில் இருக்கும் படி படுத்திருக்கிறார்கள் (சஞ்சயனை தன் படுக்கையறைவரை சஞ்சயனை அனுமதித்ததன் மூலம் தங்களுக்குள்ளே உள்ள நெருக்கத்தை உணர்த்தினார் கிருஷ்ணர்)
கிருஷ்ணர், போரைத் தவிர்த்தல் இயலாது எனக் கூறி சஞ்சயனைத் திருப்பி அனுப்புகிறார்
சஞ்சயன் தான் தூது சென்று கொண்டு வந்த செய்தியையும், கிருஷ்ணர் தன்னை படுக்கையறைவரை அனுமதித்ததையும் கூறுகிறான்
அந்த எம்பெருமானின் அந்தரங்கக் கோலத்தை பார்க்கும் பாக்கியம் பெற்ற சஞ்சயன் போல நான் இல்லையே..(நான் எதற்கு இவ்வூரில் இருக்க வேண்டும்) என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:
Post a Comment