நாதமுனியின் பெயர் ரங்கநாதமிஷ்ரர் ஆகும்
யோகவித்தை,தேவகான இசை ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் இவர்.ஆகவே, இவரை திருவரங்கநாத முனிவர் என்று அழைத்தனர்.அதுவே நாதமுனியாயிற்று.
இவர் கிபி 824 ஆம் ஆண்டு வீரநாராயணபுரத்தில் பிறந்தவர் (இப்போதைய காட்டுமன்னார்கோயில்)
இவர் நம்மாழ்வாரை வரவழைத்து பாசுரங்களைப் பெற்றார் .இவர் இல்லையெனில் நாலாயிர திவ்விய பிரபந்த பாசுரங்கள் காணாமல் போயிருக்கும்
இவர் ஸ்ரீராமன் மேல் அளவு கடந்த பக்தியைக் கொண்டவர்.எல்லாவற்றிலும் இறைவனைக் காணுபவர்
ஒருநாள், அவர் யோக நிஷ்டையில் இருந்த போது, சோழ மன்னன் இவரைக் காண வந்தான்.ஆனால், பார்க்க முடியாமல் திரும்பினான்.பின், அதை அறிந்த நாதமுனியார் , சோழனின் தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரம் வரை மன்னனைக் காண நடந்தே சென்றார்.இவரது இச்செயலைப் பற்றி சிஷ்யர்கள் கேட்ட போது ..தான் மன்னனை, கிருஷ்ணனாகவே எண்ணுவதாகக் கூறினார்
மற்றொரு முறை இவர் தியானத்தில் இருந்தார்.அப்போது இரு மனிதர்கள் (மிருகங்களைப் பழக்குபவர்கள்), ஒரு பெண்,குரங்குடன் வந்தனர்.இவரைப் பார்க்க முடியாமல் திரும்பினர்.விஷயம் அறிந்த இவர், ஸ்ரீராமன், லட்சுமணன், சீதா பிராட்டி, அனுமன் ஆகியோரே அவர்கள் என அவர்களைத் தேடி கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி நடந்தே சென்றார்
அவர்களைக் காண முடியாது வருந்தினார்..அந்த இடத்திலேயே உயிரிழ்ந்தார்,
அது போல எம்பெருமானைக் காண நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே என்றாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:
Post a Comment