திருப்பாணர் தன் யாழை எடுத்து சுருதி சேர்த்து அரங்கனை சேவித்து காவிரிக்கரையில் பாக்களைப் பாடும் வழக்கம் கொண்டவர்.இவர் ஏன்..கோயில் அருகில் பாடாது காவிரிக்கரையில் இருந்து பாடுகிறார்?
அவர் தீண்டத்தகாதவர் என ஒதுக்கப்பட்டவர்
ஒருநாள் அவர் அப்படிப் பாடிக்கொண்டிருக்கையில், திருவரங்கன் கோயில் லோகசாரங்கர் என்ற ஜீயர் காவிரியில் குளிக்க வந்தார்.ஜீயருடன் வந்த பக்தர்கள் பாணரை விலகி இருக்கச் சொன்னார்கள்
ஜீயரும், ஏதாவது செய்து அவனை அப்புறப்படுத்துங்கள் என்றார்
தொண்டர்கள் பாணரை கல்லால் அடிக்க ஆரம்பித்தனர்.மெய்மறந்து பாடிக்கொண்டிருந்த பாணர் கலல்டியால் ஏற்பட்ட காயங்களால் சுய நினைவு அடைந்தார்.அனைவரிடமும், தன்னால் ஏற்பட்ட தொந்தரவிற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விலகினார்
தன் பக்தன்மேனியில் கல்லடிப்பட்டு இரத்தக்காயங்கள் ஏற்பட்டத்தால், ஸ்ரீரங்கரும் தனது அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தார்
இதனைக் கண்ட ஜீயர் உடல் நடுங்கியது.அரங்கன் மேனியில் இரத்தம் வடிந்த காரணம் தெரியாது, மன சஞ்சலத்துடன் ஜீயர் உறங்கப்போனார்
அவர் கனவில் பெருமாள் தோன்றி'என் பக்தனைக் கல்லால் அடித்து பாவம் செய்து விட்டீர்.நாளை அந்தத் திருப்பாணரை உமது தோளில் சுமந்து என் சந்நிதிக்கு வாரும்.அப்போதுதான் குருதி நிற்கும்" என்றார்
லோகசாரங்கர்..தோள்களில் பாணரைச் சுமந்து சந்நிதி வந்தார்.பகதர்கள் கூட்டம் கூடியது.அரங்கன் மேனி குருதியும் நின்றது
திருப்பாணர், எம்பெருமானின் தரிசனம் கண்டு மெய்மறந்து சேவித்தார்.அமலனாதிபிரான் என்று தொடங்கி பத்து பாசுரங்களை மங்களசாசனம் செய்தார்
பாசுரங்கள் முடிந்ததும் அரங்கன், திருப்பாணரை தன்னுள் ஐக்கியப் படுத்திக் கொண்டார்
அபப்டி திருப்பாணரைப் போலே, பண்ணிசைத்து அவன் மேனியுடன் கலந்தேனோ நான் என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்

No comments:
Post a Comment