அத்திரி மகரிஷி,அனுசூயா தம்பதிகள் குடில் அமைத்து வசித்து வந்தனர்
அவர்களுக்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு,பிரம்மா ஆகியோர் குழந்தை களாக பிறக்க வேண்டும் என ஆசை.அதற்காக கடுமையாக பிரார்தித்து வந்தனர்
மும்மூர்த்திகளும், அவர்களது பக்தியை சோதிக்க எண்ணினர்.துறவிகள் போல அவர்கள் வேடமிட்டு,அத்திரியின் குடிலுக்கு வந்தனர்.அப்போது மகரிஷி வீட்டில் இல்லை
அனுசூயா, தினமும் தன் கணவருக்கு பாத பூஜை செய்து, அந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்ட பின்னரே பணிகளைத் தொடங்குவார்.அந்தத் தீர்த்தம் எப்போதும் அவர்கள் இல்லத்தில் இருக்கும்
அனுசூயா வந்த துறவிகளை வரவேற்றார்.உணவு எடுத்துவர உள்ளே சென்ற போது அவர்கள் "தாயே! எங்களிடம் ஒரு பழக்கம் உள்ளது,எங்களுக்கு யார் உணவிட்டாலும் அவர்கள் நிர்வாண (திகம்பரராக) நிலையிலேயே அதைச் செய்ய வேண்டும்.அப்போதுதான் அந்த உணவை நாங்கள் ஏற்போம்" என்றனர்
அனுசூயாவிற்கு இதில் ஏதோ தெய்வசங்கல்பம் இருப்பதுபோலத் தெரிந்தது.உடனே அவர் ,"ஆகா..அப்படியே செய்கிறேன்" என்று கூறிவிட்டு, எப்போதும் வீட்டில் வைத்திருக்கும் கணவரின் பாத பூஜை தீர்த்தத்தை எடுத்து"இறைவா...நான் என் கணவர் மீதும், உன் மீதும் கொண்ட பக்தி உண்மையானால் இந்தத் துறவிகளை குழந்தையாக மாற்று' என்று கூறியபடியே அந்த தீர்த்தத்தை அவர்கள்மீது தெளித்தார்
மூவரும் குழந்தைகள் ஆகிவிட்டனர்.பின், அவர்கள் விருப்பப்படியே அவர்கள் பசியை பாலூட்டிப் போக்கினார்
அத்திரி முனிவரும் வந்தார். தனது ஞானதிருஷ்டியால் வந்த வர்கள் மும்மூர்த்திக ள் என அறிந்தார்.அக்குழந்தைகளை அணைத்தார்.மூன்று தலைகளும், ஆறு கைகளும் கொண்ட ஒரே குழந்தையாக ஆனது
இத்தகவல் அறிந்த முப்பெரும் தேவியரும், அவரவர் தங்கள் கணவர்களைத் திருப்பித்தர வேண்டினர்
அக்குழந்தை தங்களுடனேயே வளர வேண்டும் என அத்திரியும், அனுசூயாவும் சொன்னார்கள்,அதற்கு தேவியர்கள் ஒப்புக்கொண்டால், அவர்களது கணவன்மார்களைத் திருப்பித் தருவதாகக் கூறினர்
மூவரும் அதற்கு இசைய, அனுசூயை மும்மூர்த்திகளை மானசிகமாக வேண்டினார்.அப்போது மூவரும் காட்சியளித்து, தங்கள் சக்தியாகிய அக்குழந்தை அவர்களுடன் வளர ஆசிர்வதித்து,அக்குழந்தை ஒரு முனிவராக வளரும் என்றனர்
அக்குழந்தையே தத்தாத்ரேயர் ஆவார்
இதையே திருக்கோளூர் பெண் 'தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயைப் போல" என் கிறாள்

No comments:
Post a Comment