Monday, November 14, 2016

44- பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போல

கிருஷ்ணரும், பலராமரும்..கம்சனைக் காண மதுரா வருவதற்கு முன் , ஒரு வண்ணானிடம் அணிந்து செல்ல துணியைக் கேட்க, அவன் கொடுக்க மறுக்கிறான்.பின், அவனைத் தோற்கடித்து, துணிகளை எடுத்து அணிந்து செல்கின்றனர்

பின் அவர்கள்..மணமுள்ள மலர்களை அணிய விரும்புகிறார்கள்.அதனால், ஒரு பூ வியாபாரியிடம் செல்கின்றனர்.அவன் இவர்கள் இருவரைப் பார்த்ததும் யாரென அறிந்து கொண்டான்.தன்னிடமிருந்த மணம் மிகுந்த மலர்களை அவர்களுக்கு கொடுக்கிறான் (அவனது பெயர் சுதாமன் என் கிறது பாகவதம்)

மலர்ந்த தாமரைப் போலக் காணப்பட்ட அவர்கள், மனம் மகிழ்ந்து அவன் கேட்ட வரங்களை அளிக்கின்றனர்

ஆழ்வார்களும், ஆச்சார்யாக்களும்  எம்பெருமானை மலர் வழிப்பாடு செய்ய இது காரண்மாக அமைந்தது எனலாம்

அப்படிப்பட்ட மாலாகாரர் (மாலைக்காரர்) போல எம்பெருமானுக்குப் பூவைக் கொடுத்தேனோ..(இல்லையே..ஆதலால் நான் இவ்வூரில் இருந்தால் என்ன..வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண் 

Sunday, November 13, 2016

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

உள்ளே புகுமுன் -

ஆண்டவன் அருளியது பகவத் கீதை

 ஸ்ரீராமானுஜருக்கு ஒருபெண் சொன்னது திருக்கோளூர் பெண்பிள்லை ரகசியம்
  
108 திவ்விய திருத்தலங்களில் ஒன்றான திருக்கோளூர், மதுரகவியாழ்வார் அவதரித்தத் தலம்.இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் "வைத்த மாநிதிப் பெருமாள்"

நம்மாழ்வாரால் அருளிச் செய்யப் பெற்ற திருக்கோளுர் திவ்ய தேசத்திற்கு எம்பெருமானார் திருநகரியிலிருந்து எழுந்தருளினார் 

ஊருக்கு சற்றுத் தொலைவில் அவர் வந்த போது, ஒரு பெண்மணி ஊரைவிட்டு வெளியே செல்வதைப் பார்த்தார்.
.
அந்த ஊர் புகும் ஊர் என்றும், அங்கு வசிப்பது பெரும்பாக்கியம் என்று பலரும் கருதும் போது, இந்தப் பெண் மட்டும் ஏன் ஊரைவிட்டு வெளியே செல்கிறாள்? என்று ராமானுஜருக்கு ஆச்சரியம்.அப்பெண்ணிடம் . அவள் ஊரை விட்டு வெளியே செல்வதற்கானக் காரணத்தைக் கேட்டார் 

அதற்கு அந்தப் பெண், "சுவாமி, முயற்புழுக்கை வரப்பில் இருந்தால் என்ன? வயலில் இருந்தால் என்ன? ஞானமற்ற நான் எங்கிருந்தால் என்ன" என்றாள் விரக்தியுடன் 

 அதைக் கேட்ட ராமானுஜர், ‘‘அம்மா, உனக்குக் குறைதான் என்ன?’’ என்று விசாரித்தார். 

‘‘ஒன்றா, இரண்டா….?’’ என்று தொடர்ந்து ஏக்கத்துடன் கேட்ட அவள், 81 வைணவப் பெரியார்கள் எத்தனையோ பேர் எத்தனையோ அருஞ்செயல்களைப் புரிந்திருக்கிறார்கள். அதுபோன்ற அவர்களுடைய வைணவ நலன்கள்  ஒன்றுகூடத் தனக்கு வாய்க்கவில்லையே,’’ என்று வருந்திக் கூறினாள். 

அந்தப் பெண்மணி, வைணவ நலன்கள் என  மொத்தம் எண்பத்தோரு வைணவப் பெரியார்களின் செயல்களை  பெண்பிள்ளை பட்டியலிட்டாள். இப்படி அவள் கூறிய வாசகங்களின் மறைபொருளைக் கொண்ட  நூல், ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்!’ இது வைணவ ரகசியக் கிரந்தங்களுள் ஒன்று என்று போற்றப்படுகிறது. 


அந்த பெண்மணி கூறியவற்றைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்தார் ராமானுஜர்.சாதாரணப் பெண்மணிக்கே இவ்வளவு ஞானம் இங்கு உள்ளதே என வியந்தார்.பின், அவளை சமாதானப்படுத்தி அவள் அவளுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்றார். அவள் சமைத்த உணவை உண்டார்

அவள் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் வைணவத்தைச் சாறு பிழிந்து கூறுவது போல இருந்தது.அவற்றை சுருங்கச் சொல்லி விளங்கவைத்தது, அப்பெண்ணின் ஞான அறிவைக் கூறுகிறது

மறைமுகமாக அவள் சொன்னவை திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் எனப்படுகிறது.. 

81 - துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

திருவயினந்தபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார்

அவர் தினசரி குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று குளிப்பார்

ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும்துறையிலேயே குளிப்பதில்லை?" என்று கேட்டனர்..

அதற்கு   பகவர் சொன்னார், "நான் வைஷ்ணவன்.ராமானுஜரைப் பின்பற்றுபவன்.நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம்.ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள்.இவை இரண்டும் ஒன்று சேராது.ஆகவேதான் நான் வேறு துறை செல்கிறேன்" என்றார்

(பகவர், ஒரு அந்தணரோ அல்லது சந்நியாசியோ அல்ல என்பதை நினைவில் கொள்க)

நான் அந்த பகவரைப்போல வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ (சென்றேனோ) இல்லையே..ஆகவே நான் இங்கு இருந்தால் என்ன வேரு ஊருக்குச் சென்றால் என்ன என் கிராள் திருக்கோளூர்ப் பெண்

Saturday, November 12, 2016

80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!

எம்பெருமான் பல்லக்ககில் வீதி உலா வருகிறார்.அப்போது அதற்கு முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்தி வருகிறார்கள் இருவர்.

அப்படி சவுக்கை அடிக்கும் போது..ஒருமுறை அது பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழுகிறது.

அப்படி தெரியாமல் அடித்து விட்டதால் அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, "பட்டரோ..அதனால் பரவாயில்லை.எம்பெருமான் கைங்கரியத்தின் போது  விழுந்த அடி.மற்றொரு தோளிலும் விழவில்லையே என வருந்தினாராம்,

இதற்கு மற்றொரு விளக்கமும் சொல்வார்கள்...

எம்பெருமானுக்கு பல்லக்குத் தூக்கி சேவை புரிந்து வந்தவர் ஒருவரின் அந்திமக் காலம்.அவர் உயிர் போகும் நேரம் எம தூதர்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும் மேலே தர்க்கம் நடக்கிறதாம்

எமதூதர்கள் அவர் உயிரை எமலோகத்திற்கு எடுத்துச் செல்லக் காத்திருக்கிறார்கள்

விஷ்ணு தூதர்களுக்கோ, எம்பெருமானுக்கு இவர் பல்லக்குத் தூக்கி ஆற்றிய பணியால், இவரை வைகுண்டம் அழைத்துச் செல்ல இருக்கின்றனர்

இதை அறிந்தவர்.."அடடா..எம்பெருமானுக்கு நான் ஆற்றிய இந்த சேவைக்கே இப்படி ஒரு பயனா" என வியந்து, பராசர பட்டரிடம் தனக்கு பஞ்சசமஸ்காரம் செய்ய வேண்டினார்.

அதற்கு பட்டர், அதற்கான நேரம் இல்லை என்று கூறி, பல்லக்குத் தூக்கிய வைஷ்ணவரின் தோள்கள் காய்த்துப் போயிருப்பதைக் காட்டி..இதுவே பஞ்ச சமஸ்காரம் உமக்கு என்றார்

அப்படி தோள்காட்டி சொன்ன பட்டரைப் போல நான் சொன்னேனா இல்லையே என திருக்கோளூர்ப் பெண் கூறுகிறாள்  

Friday, November 11, 2016

79- வாயில் கைவிட்டேனோ எம்பாரைப் போலே

முதலில் கோவிந்த பட்டராய் இருந்த ஆச்சார்யார் எம்பார், ராமானுஜரின் உறவினர்

இவர் ஒருமுறை காசிக்குச் சென்று கங்கையில் குளித்துக் கொண்டிருந்த போது சிவலிங்கம் ஒன்று கிடைத்தது.அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார் அவர்

பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள்ளர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர் எம்பார் பற்றி சொல்ல..அவரை திருமலைநம்பி, வைணவத்தில் ஈடுபட வைத்தார்.

ஒருசமயம், எம்பார்..தன் கையை , வாயைத் திறந்து கொண்டிருந்த ஒரு பாம்பின் வாயில் வைத்திருந்தார்.

இதைக்கண்ட ராமானுஜர், "பாம்பின் வாய்க்குள் கைவைக்கலாமா?"என வினவினார்.

உடனே எம்பார் சொன்னார்.."அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது.நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது.அதை எடுத்து விட்டேன்.அது ஓடிவிட்டது.'என்றார்.

மேலும் சொல்கையில், "வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம். அதனால் பாம்பினிடம் இரக்கப்பட்டு, மனித நேயத்தால் அதன் வாயினுள் கையைவிட்டேன்" என்றார்

அந்த எம்பாரைப் போல கருணை உள்ளத்தோடு பாம்பின் வாயில் கையை விட்டேனோ (இல்லையே! ஆகவே நான் இந்த ஊரில் இருந்தால் என்ன..வெளியே போனால் என்ன) என்கி றாள் திருக்கோளூர்ப் பெண்

78 - வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

கூரத்தாழ்வாரின் மகன் பராசர பட்டர்.அவர் குழ்ந்தையாக இருந்த போது, காவிரி நதிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தார்

அப்போது, சர்வக்ஞ பட்டர் என்பவர் பல்லக்கில் ஏறி தனது சிஷ்யர்கள் படைசூழ வந்து கொண்டிருந்தார்.சிஷ்யர்கள் அவர் புகழைப் பாடி வந்தார்கள்

ராமானுஜர், கூரத்தாழ்வார்,முதலியாண்டான்,எம்பாரும் வசிக்கும் ஊரில் இப்படி ஒருவர் வருவதை பராசர பட்டர் விரும்பவில்லை.

தன் கையினால் ஒரு பிடி மணலை எடுத்துக் கொண்ட அவர், அந்த பல்லக்கை தடுத்து நிறுத்தி சர்வக்ஞரிடம், நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு என சொல்ல முடியுமா? என்றார்.

"மண் கோடிக்கணக்கில் இருக்கும்...மண்ணை எண்ண முடியுமா" என்ற சர்வக்ஞர் கேலியாக சிரித்தார்

உடனே பராசரர்.."என்னால் சொல்ல முடியும்" என்றார்.

வியந்த சர்வக்ஞர்"சொல் பார்ப்போம்" என்றார்

"ஒரு கைப்பிடி மண்" என்றார் பட்டர்

சிறுவனின் திறமையைக் கண்டு தலைவணங்கிய சர்வக்ஞர். அந்தக் குழ்ந்தை யார் என வினவ..கூரத்தாழ்வாரின் மகன் என அறிந்தார்.

குழ்ந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார்

வாசலில் பிள்ளை உறங்காவில் தாசரின் மனைவி பொன்னாச்சியார் குழ்ந்தையை அதன் தாய் ஆண்டாளிடம் ஒப்படைத்து, "குழ்ந்தையை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.கெட்ட கண்கள் அவர் மீது பட்டுவிடப் போகிறது" என்றாள்

பின்னாளில்..பராசர பட்டர் வளர்ந்ததும், ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர் , பராசரரை அழைத்து,திருநாராயணபுரம் சென்று,அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறு கூறினார்

பட்டரும் அப்படியே திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார்
அவருக்கு நன் ஜீயர் எனப் பெயரிட்டார்.அவரை வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்க வைத்தார்

நான் என் வாதத் திறமையால் பட்டரை வென்றேனோ என்பதையே "வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே" (இல்லையே..அதனால் நான் இங்கிருந்தால் என்ன ஆல்லது இவ்வூரை விட்டு வெளியேறினால் என்ன) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்

Thursday, November 10, 2016

77 - நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

நீரோருகம் என்றால் தாமரை மலராகும்

காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான் .அவன் தீவிர ஸ்ரீநாரயணரின் பக்தன்.தினசரி கோயில் குளத்திலிருந்து தாமரை மலரைப் பறித்து வந்து எம்பெருமானை அலங்கரித்து வந்தான்

அவன் நல்ல நீச்சல் வீரன்.ஆகவே, அவனுக்கு அந்த அகந்தை இருந்தது.கங்கை ந்தியின் ஒரு கரையிலிருந்து அடுத்தக் கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிப்பான்.

ஒருசமயம், அவன் அவன் அப்படி நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான்.கங்கை அவனை அடித்துச் சென்றது.அவனது நீச்சல் திறமை எடுபடவில்லை.அவன் கொஞ்சம் கொஞ்சமாக முழுகத் தொடங்கினான்.

தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை அறிந்து வைத்திருந்த அவன், கஜேந்திரனின் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து காத்த நாராயணனின் நினைவு வர.."எம்பெருமானே..நான் உனக்கு சரணாகதி" என ஸ்ரீநாராயணனிடம் சரணாகதி அடைந்தான்,

ஆந்த சமயம் காற்று பலமாக விச..நதியில் ஒரு பெரிய அலை எழுந்தது.அது , அவனை கரையில் சேர்த்தது.

இறைவனின் அருள்தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன் அகந்தையை விட்டொழித்தான்.பின், எம்பெருமானுக்கு பணிவிடையே தன் பணி என மலர்களால் இறைவனை தினமும் அலங்காரம் செய்து  வாழ்ந்து வந்தான்

அப்படிப்பட்ட காசிசிங்கனைப் போல தினமும் தாமரை மலரை எம்பெருமானுக்கு இட்டேனா..இல்லையே..ஆகவே..நான் இங்கிருந்தால் என்ன , வெளியேறினால் என்ன என திருக்கோளூர் பெண் கூறினாள்