Friday, November 4, 2016

66-.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!

நம்பி என்ற செல்வந்தர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தொண்டில் ஈடுபட்டு வந்தார்.ஆனால், அவரது தொண்டுகள் பயனுள்ளதாக அமையவில்லை

நம்பியைத் திருத்த ராமானுஜர் செய்த அறிவுரைகள் அனைத்தையும் அவர் அலட்சியப்படுத்தினார்.அதனால் மனம் உடைந்த ராமானுஜர் காஞ்சி க்குத் திரும்பச் செல்ல நினைத்தார்.கூரத்தாழ்வார் அவரை சமாதானம் செய்து, நம்பியை நல்வழிப்படுத்தி, ராமானுஜரின் சீடனாக ஆக்கினார்

ராமானுஜர் அவருக்கு "திருவரங்கத்து அமுதனார்" என்ற பெயரைச் சூட்டினார்

அவருக்கு ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.அதை ராமானுஜரிடம் சொன்னார்.கூரத்தாழ்வாரையோ அல்லது பன்னிரு ஆழ்வார்களையோக் குறித்து நூல் எழுதலாம்" என்றார் ராமானுஜர்

ஆனால், அமுதனாரோ. "ராமானுஜர் நூற்றந்தாதி;' என்ற நூலை எழுதினார்.ஒவ்வொரு பாடலும் ராமானுஜரின் பெயரை  வைத்து நூறு பாடல்கள் கொண்ட அந்தாதி அது

அந்நூல் ராமானுஜர் முன் அரங்கேறியது.அறிஞர்கள் அனைவராலும் பாராட்டப் பட்டது

இதையே திருக்கோளூர்ப் பெண்'அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே" (இல்லையே) என் கிறாள் 

No comments:

Post a Comment